’கட்டண பாக்கிக்காக மாணவர்கள்
சான்றிதழை நிறுத்தக்கூடாது
’கட்டண பாக்கியை வசூலிக்க, மாணவர்களின் சான்றிதழ்களை, தராமல் நிறுத்தி வைக்கக்கூடாது’ என, இன்ஜி., கல்லுாரிகளுக்கு அண்ணா பல்கலை எச்சரித்துள்ளது.
சான்றிதழ்
நிறுத்திவைப்பு:
அண்ணா பல்கலை
இணைப்பில், தமிழகம் முழுவதும், 550க்கும் மேற்பட்ட இன்ஜி.,கல்லுாரிகள், ஆர்கிடெக்சர்மற்றும்
மேலாண் நிர்வாக கல்லுாரிகள் செயல்படுகின்றன. இவற்றில், ஐந்து லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் படிக்கின்றனர்.
கடந்த கல்வி
ஆண்டில் நடந்த, இறுதி தேர்வுக்கு பின், அனைத்து தேர்வுகளிலும் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு, பட்ட சான்றிதழ்கள் வழங்கும் பணி துவங்கி உள்ளது. இதில், பல இன்ஜி., கல்லுாரிகள், கட்டணம் பாக்கி வைத்துள்ளமாணவர்களுக்கு, பட்ட சான்றிதழ்கள் மற்றும் மதிப்பெண் சான்றிதழ் வழங்காமல் நிறுத்தி
வைத்துள்ளன.
இதனால், உயர் கல்விக்கும், வேலை
வாய்ப்புக்கும் செல்ல முடியவில்லை என, மாணவர்கள் தெரிவித்துள்ளனர். இதையடுத்து, அண்ணா பல்கலையின் இணைப்பு கல்லுாரிகளுக்கான, மாணவர் விவகாரத்துறை இயக்குனர், இளைய பெருமாள், அனைத்து
கல்லுாரிகளுக்கும் சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளார்.
நடவடிக்கை:
அதில், ’கட்டண பாக்கி மற்றும் நிர்வாக பிரச்னைகளுக்காக, மாணவர்களின் சான்றிதழ்களை வழங்காமல், கல்லுாரிகள் நிறுத்தி வைக்கக்கூடாது. சான்றிதழ்களை தரவில்லை என, புகார் வந்தால், சம்பந்தப்பட்ட
கல்லுாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்’ என, தெரிவிக்கப் பட்டுள்ளது.
நன்றி : தினமலர்
- வாரமலர் - 12.08.2017
No comments:
Post a Comment