disalbe Right click

Friday, August 11, 2017

தானாகவே மாறிவிடும் இனி பி.எஃப் கணக்கு!

தானாகவே மாறிவிடும் இனி பி.எஃப் கணக்கு!
இனி எந்த வேலைக்கு போனாலும் ஒரே பிஎப் கணக்குதான், மாறவே மாறது!
பணியாளர்கள் ஒரு நிறுவனத்தில் இருந்து மற்றொரு நிறுவனத்துக்கு தங்கள் பணியியை மாற்றிக் கொண்டாலும் அவர்களது பிஎப் எனப்படும் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி கணக்கு தானாகவே அந்நிறுவனத்துக்கு மாறிவிடும் வசதி செய்யப்பட்டுள்ளன. இச்சேவை அடுத்த மாதம் முதல் அமலுக்கு வர உள்ளது. பணியாளர்கள் ஒரு நிறுவனத்திலிருந்து மற்றொரு நிறுவனத்துக்கு தங்கள் பணியியை மாற்றிக் கொள்ளும் போது, பலருக்கும் எவ்வாறு தங்களது பிஎப் கணக்கை புதிதாக மாறும் அலுவலகத்திற்கு மாற்றுவது என்பதில் பெரும் குழப்பம் ஏற்படும். இதனை எளிதாக்கும் வகையில் புதிய நடைமுறைகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
பிஎப் கணக்கு எண் 
தனியார் நிறுவனங்களில் பணியாற்றும் தொழிலாளர்களுக்கான வாழ்நாள் சிறுசேமிப்பு திட்டமான பிஎப் கணக்கு எனப்படும் சேமநல நிதி கணக்கு திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. தனியார் நிறுவனங்களில் பணிபுரிவோர் முன்பெல்லாம் வேறு நிறுவனங்களுக்கு மாறினாலோ, வேலையை விட்டு திடீரென நின்று விட்டாலோ பிஎப் கணக்குகளை முடிக்கும் நிலை காணப்பட்டது. இதனால் வாழ்நாள் சேமிப்பை தொடர முடியாத நிலை காணப்பட்டது.
மத்திய அரசு அறிமுகம் 
தற்போது பிஎப் கணக்குகளில் பல்வேறு நடைமுறைகளை மத்திய அரசு அறிமுகம் செய்து வருகிறது. இதன் ஒரு கட்டமாக தனியார் நிறுவனங்களில் பணியாற்றுவோர் வேறு நிறுவனங்களுக்கு மாறினால், அவர்களது பிஎப் கணக்கும் மற்ற நிறுவனத்திற்கு தானாக மாறும் வகையில் புதிய நடைமுறை அறிமுகப்படுத்தப்பட உள்ளது.
புதிய நடைமுறை இதுகுறித்து பிஎப் தலைமை ஆணையர் வி.பி.ஜாய் கூறுகையில்
வேறு நிறுவனங்களுக்கு மாறுபவர்களின் பிஎப் கணக்கு தானாக மற்ற நிறுவனத்திற்கு மாறும் நடைமுறை அடுத்த மாதம் முதல் அமலுக்கு வருகிறது. முன்பு வேறு நிறுவனத்திற்கு மாறியவர்கள் தங்களது கணக்குகளை முடித்துக் கொள்வர். பின்னர் மற்ற நிறுவனத்தில் சேர்ந்த பிறகு மீண்டும் தொடங்குவர். தற்போது இந்த நிலை மாற்றப்பட்டுள்ளது.
புதிய பணி 
தொழிலாளர்கள் புதிய பணிக்கு மாறும்போது அவர்களது பிஎப் கணக்கை அப்படியே விட்டு சென்றுவிடுகிறார்கள். அல்லது தங்களது கணக்கை முன்கூட்டியே முடித்துக் கொண்டு செல்கின்றனர். பிஎப் கணக்குடன் ஆதார் எண்ணை கட்டாயமாக இணைக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளோம்.
விண்ணப்பம் தேவையில்லை 
தேவை இல்லாமல் கணக்குகள் மூடுவதை நாங்கள் விரும்புவதில்லை. இனிமேல் பிஎப் கணக்கு நிரந்தரமாகவே இருக்கும். தங்களது வருங்கால பாதுகாப்புகளுக்கென்று இந்த கணக்கை தொழிலாளர்கள் பயன்படுத்தலாம். புதிய பணிக்கு மாறிய மூன்றே நாட்களில் பணம் முதற்கொண்டு கணக்குகளும் மாற்றப்படும். இதற்கு விண்ணப்பங்கள் தேவையில்லை.
பிஎப் பணத்தின் அவசியம் 
மேலும், நாட்டின் எந்த மூலைக்கு சென்றாலும் ஆதார் எண்ணை வைத்து மாற்றிக் கொள்ளலாம். இந்த முறை விரைவில் அமலுக்கு வருகிறது. புது வீடு கட்டுவதற்கு, குழந்தைகளின் கல்வி மற்றும் மோசமான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் தருணத்தில், பிஎப் பணத்தை எடுத்துக் கொள்ளலாம். மிக முக்கியமான தேவைகளுக்கு மட்டும்தான் தங்களது பிஎப் பணத்தை எடுக்க வேண்டும் என்று தொழிலாளர்களுக்கு நாங்கள் வலியுறுத்தி வருகிறோம். என்று அவர் கூறினார்.

No comments:

Post a Comment