27 வருடமாகியும் தராமல் இழுத்தடிக்கப்படும் இழப்பீடு!
கைக்கு வராத இழப்பீடு 27 ஆண்டாக இழுத்தடிப்பு
கோவை, தன், 8 வயதில், விபத்தில் தந்தையை இழந்தவருக்கு, 35 வயதாகியும் இழப்பீடு கிடைக்கவில்லை; தீபாவளிக்குள் பணத்தை வழங்க, அரசுப் போக்குவரத்து கழகத்துக்கு நீதிபதி உத்தரவிட்டார்.
கோவை, சிட்கோவில் வசித்து வந்தவர் பழனிச்சாமி, 32; மனைவி இறந்த நிலையில், மகள் தங்கமணி, 8, மகன் மகேந்திரன், 5, ஆகியோரை, இவரும், இவரது தாயாரும் வளர்த்து வந்தனர். தனியார் நிறுவனத்தில்
தொழிலாளியாக பணிபுரிந்த பழனிச்சாமி, 1990, செப்., 25ல், சைக்கிளில் சென்ற போது, அரசு பஸ் மோதி பலியானார்.
இழப்பீடு கேட்டு, கோவை இரண்டாவது கூடுதல் சார்பு நீதிமன்றத்தில், குழந்தைகள் இருவரும், வழக்கு தாக்கல் செய்தனர். விசாரித்த நீதிமன்றம், 1.16 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க, 1992ல், கோவை கோட்ட அரசுப் போக்குவரத்து
கழகத்துக்கு உத்தரவிட்டது.
இழப்பீடு தொகையை அதிகரித்து வழங்க கோரி, சென்னை ஐகோர்ட்டில் அப்பீல் செய்யப்பட்டது. கூடுதலாக, 1.30 லட்சம் வழங்க, கோர்ட்
உத்தரவிட்டது. வட்டியுடன் சேர்த்து, 3.60 லட்சம் ரூபாய் வழங்காமல், கோவை கோட்ட அரசுப் போக்குவரத்து கழகம் இழுத்தடித்து
வருகிறது.
இதனால், கோவை கோர்ட்டில், நிறைவேற்று மனு தாக்கல் செய்தனர். விசாரித்த நீதிபதி உமாராணி, அரசு பஸ்சை, 'ஜப்தி' செய்ய உத்தரவிட்டார். அரசு டவுன் பஸ், ஜப்தி செய்யப்பட்டு கோர்ட்டில் ஒப்படைக்கப்பட்டது. 'பாதிக்கப்பட்ட மனுதாரர்களுக்கு, இந்தாண்டு தீபாவளிக்குள் இழப்பீடு தொகை முழுவதும் செலுத்த வேண்டும்' என, நீதிபதி உத்தரவிட்டார்.
பழனிச்சாமி இறக்கும் போது, மூத்த மகள் தங்க மணிக்கு வயது 8; தற்போது, 35 வயதாகிறது. மகன்
மகேந்திரனுக்கு, 32 வயதாகிறது.
இத்தனை ஆண்டுகளாக இழப்பீடு வழங்காமல், அரசுப் போக்குவரத்து கழகம் இழுத்தடித்து வருவது, இவர்களிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது.
நன்றி : தினமலர் நாளிதழ் :16.09.2017
No comments:
Post a Comment