ஒரிஜினல எல்லாத்துகிட்டயும் கேக்கமாட்டோங்க!
அசல் ஓட்டுநர்
உரிமம்: காவல்துறை புதிய விளக்கம்!
அசல் ஓட்டுநர்
உரிமம் வைத்திருப்பதுகுறித்து, காவல்துறை புதிய
விளக்கம் ஒன்றை வெளியிட்டுள்ளது.
போக்குவரத்து
காவல்
தமிழகத்தில், 'இன்று முதல் வாகன ஓட்டிகள் அசல் ஓட்டுநர் உரிமைத்தை வைத்திருக்க
வேண்டும்' என்று போக்குவரத்துத்துறை
தெரிவித்திருந்தது. அப்படி அசல் ஓட்டுநர் உரிமம் இல்லாதவர்களுக்கு, 500 ரூபாய் அபராதம் மற்றும் மூன்று மாதம் சிறைதண்டனை விதிக்கப்படும்
என்று கூறப்பட்டிருந்தது.
இதனிடையே வாகனச்
சட்டப்பிரிவு 139-ன்படி
ஓட்டுநர்கள், ஓட்டுநர் உரிமம் வைத்திருப்பது
அவசியம் இல்லை என்று சென்னை உயர் நீதிமன்றம் கூறியிருந்தது. இந்நிலையில் அசல்
ஓட்டுநர் உரிமம் குறித்து காவல்துறை விளக்கமளித்துள்ளது.
அதன்படி, "அதிக வேகம், அதிக சுமை ஏற்றுதல், அதிக ஆட்களை ஏற்றிச் செல்லுதல், குடி போதையில் வாகனம் ஓட்டுதல், சிக்னலில் எல்லையைத் தாண்டுதல், செல்போன் பேசிக்கொண்டே வாகனம் ஓட்டுதல் உள்ளிட்ட 6 குற்றங்களில் ஈடுபட்டால் மட்டுமே அசல் ஓட்டுநர் உரிமம்
கேட்கப்படும்" என்று போக்குவரத்துக் காவல்துறை விளக்கமளித்துள்ளது. கடந்த
மூன்று மாதங்களில் மட்டும், இந்த ஆறு குற்றங்களில் ஈடுபட்டதாக, தமிழகத்தில் 52,064 வழக்குகள்
பதியப்பட்டுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.
குறிப்பாக, 'அசல் ஓட்டுநர் உரிமத்துக்காக என்று தனியாக சோதனை ஏதும்
நடத்தப்படவில்லை' என்று காவல்துறை விளக்கம்
அளித்துள்ளது. .
இரா.குருபிரசாத்
நன்றி : விகடன்
செய்திகள் – 01.09.2017
No comments:
Post a Comment