ஏழை மக்கள் பயன்பெறுவதற்காக புதிய மின் திட்டம்...
பிரதமர் மோடி அவர்கள் அறிவிப்பு
ஏழை, எளிய மக்களின் வாழ்க்கை தரத்தினை உயர்த்தும் வகையில் மின்சாரம், சமையல் எரிவாயு மற்றும் மருத்துவ வசதிகள் உள்ளிட்டவை அடங்கிய சௌபாக்யா யோஜனா திட்டத்தை தீனதயாள் உபாத்யாய நூற்றாண்டு விழாவையொட்டி 25.09.2017 அன்று மாலை பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் தொடங்கி வைத்துள்ளார்
இத்திட்டத்தின் சிறப்பம்சங்கள் என்ன?
மின் விநியோகம் தொடர்புள்ள இந்த திட்டத்தின் மூலம் வரும் 2018-ஆம் வருடத்திற்குள் நமது நாட்டில் உள்ள அனைத்து வீடுகளுக்கும் மின் இணைப்பு கிடைக்கச் செய்வதுதான் இந்த திட்டத்தின் இலக்காகும். ரூ.500/- மட்டும் செலுத்தி, இந்த திட்டத்தின் மூலம் பொதுமக்கள் மின் இணைப்பை பெற்று கொள்ளலாம். அந்த ரூ.500-ஐ மொத்தமாக செலுத்த
முடியாதவர்கள் 10 மாத தவணையில் செலுத்தும் வசதியும் இந்த
திட்டத்தில் ஏற்படுத்தப் பட்டுள்ளது. இதற்காக மத்திய அரசு ரூ.16,320 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது.
இந்த திட்டங்களுக்கான செலவுகளுக்கு மத்திய அரசு சார்பாக 60 சதவீதமும், அந்தந்த மாநில அரசு சார்பாக 10 சதவீதமும், மீதம் உள்ள 30 சதவீதம் கடனாகவும் வழங்கப்படும்.
அனைத்து வீடுகளுக்கும் மின்சாரம், மண்ணெண்ணெய்க்கு மாற்றாக சமையல் எரிவாயு, கல்வி மற்றும் மருத்துவ சேவைகள், தொலைத்தொடர்பு மற்றும் மக்கள் பாதுகாப்பு ஆகியவை இந்த திட்டத்தில் அடங்கியுள்ளது.
நாட்டின் முன்னேற்றம்
எரிவாயு, மின்சார வசதி, மருத்துவ வசதிகள் ஆகியவை தனித்தனி திட்டமாக செயல்பட்டு வந்த நிலையில் அவற்றை சௌபாக்யா திட்டம் மூலம் ஒரே திட்டமாக இணைக்கப்பட்டுள்ளது. இதனால், நம் நாட்டில் வேலை வாய்ப்புகள் அதிகரிக்கும், வாழ்க்கைத் தரம் மேம்படும் என்று எதிர்பார்க்கலாம்.
********************************************************அன்புடன் செல்வம் பழனிச்சாமி
No comments:
Post a Comment