மக்களை ஏமாற்றும் மோசடி குற்றத்திற்கு இனி அபராதம் மட்டுந்தானா?
அனுமதியில்லாத பிளாட்கள் விற்பனை -
ரூ.25 லட்சம் அபராதம் செலுத்த ஒப்புதல் : உயர்நீதிமன்ற வழக்கால் விடிவு
மதுரை: மதுரையில் அனுமதியின்றி
பிளாட்கள் விற்பனை தொடர்பானவழக்கில், ரியல் எஸ்டேட் உரிமையாளர் 25 லட்சம் ரூபாய் அபராதம் செலுத்த உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில்
ஒப்புதல் அளித்தார். முதற்கட்டமாக 5 லட்சம் ரூபாயை நீதிமன்றத்தில் வழங்கினார்.
மதுரை விவசாயக் கல்லுாரி அருகே
நெல்லியேந்தல்பட்டி ராமநாதன் தாக்கல் செய்த மனு:
கொடிக்குளம் பகுதி மக்கள்
நெல்லியேந்தல் கண்மாய் நீரை நம்பியுள்ளனர். அது 21 எக்டேர் பரப்பளவு கொண்டது. ஐயப்பன் ரியல் எஸ்டேட் உரிமையாளர்
தனசேகரன் கண்மாய் கரையோரம் பிளாட்கள் அமைத்து, மணிகண்டன் நகரை உருவாக்கினார். 'லேஅவுட்'டிற்கு நெல்லியேந்தல் ஊராட்சியில்
அனுமதிபெறவில்லை. ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு ராமநாதன் மனு செய்திருந்தார். பொதுப்பணித்துறையினர் ஆய்வு செய்ய நீதிபதிகள்
உத்தரவிட்டனர். ஆய்வில், கண்மாய் கரையை ரோடாக பயன்படுத்தியது
உறுதியானது. நீதிபதிகள் கே.கே.சசிதரன், ஜி.ஆர்.சுவாமிநாதன் அமர்வு விசாரித்தது.
நீதிபதிகள்:
'லேஅவுட்'டிற்கு முறையான அனுமதியின்றி, மக்களை தனசேகரன் ஏமாற்றியுள்ளார். கண்மாய் கரையை ரோடாக மாற்றி
பயன்படுத்த அனுமதித்துள்ளார். இதனால் இவர் மீது மோசடி உட்பட பல்வேறு
சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்ய வாய்ப்புள்ளது என்றனர்.
ரியல் எஸ்டேட் உரிமையாளர் தனசேகரன்,'
எதிர்காலத்தில் இதுபோன்ற செயல்களில் ஈடுபடமாட்டேன். குற்றவியல்
நடவடிக்கையை தவிர்க்க 25 லட்சம் ரூபாய் அபராதம் செலுத்தத்
தயார். முன்பணமாக 5 லட்சம் செலுத்துகிறேன். மீதியை
செலுத்த ஆறு வாரங்கள் அவகாசம் தேவை,' என மனு செய்தார். 5 லட்சம்
ரூபாய்க்கான காசோலையை உயர்நீதிமன்றத்தில் ஒப்படைத்தார்.
நீதிபதிகள் உத்தரவு :
5 லட்சம் ரூபாயை கண்மாய் பராமரிப்பு செலவிற்கு அரசு பயன்படுத்த
வேண்டும். தனசேகரன் போன்றவர்களால், சட்டவிரோதமாக
பிளாட்கள் விற்பனை செய்யப்படுவதால், அப்பாவிகள் பாதிக்கப்படுகின்றனர்.மதுரையில் அனுமதியில்லாத
கட்டடங்கள் முளைத்துள்ளது தெரியவருகிறது. இது மாநகராட்சி மற்றும் நகராட்சி
அதிகாரிகளின் தோல்வியை வெளிப்படுத்துகிறது. அவர்களுக்கு, தவறு செய்யும் அதிகார பலமிக்கவர் களிடமிருந்து சலுகைகள் கிடைப்பதை
இது காட்டுகிறது என்றனர்.
நன்றி : தினமலர் நாளிதழ் - 08.09.2017
No comments:
Post a Comment