கட்சி நன்கொடைகள் -அடையாளம் தெரியாதோர் அளித்ததே அதிகம்!
கட்சிகளுக்கு கிடைத்த நன்கொடைகள்; அடையாளம் தெரியாதோர் அளித்ததே அதிகம்
கட்சி,நன்கொடைகள்,அடையாளம்,தெரியாதோர்,அளித்ததே,அதிகம்
புதுடில்லி : 'கடந்த, 2015 - 16 நிதியாண்டில்
கிடைத்த மொத்த வருவாயில், பெரும்பகுதி, அடையாளம் தெரியாதவர்கள் அளித்த நன்கொடை உள்ளிட்ட வழிகளில்
கிடைத்தவை' என, தேசியக்கட்சிகளான, பா.ஜ., மற்றும் காங்கிரஸ் தெரிவித்துள்ளன.
தாக்கல்:
பா.ஜ., காங்கிரஸ் உள்ளிட்ட, ஏழு தேசிய கட்சிகள், ஒவ்வொரு ஆண்டும் தங்களுடைய வரவு - செலவு கணக்கை, தேர்தல் ஆணையத்தில் தாக்கல் செய்ய வேண்டும். இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், பகுஜன் சமாஜ், தேசியவாத
காங்கிரஸ், திரிணமுல் காங்கிரஸ் ஆகியவை, குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் தங்களுடைய வரவு - செலவு கணக்கை
தாக்கல் செய்தன. பா.ஜ., மற்றும் காங்கிரஸ் கட்சிகள், 2015 - 16 நிதியாண்டுக்கான வரவு - செலவு கணக்கை, சமீபத்தில் தாக்கல் செய்தன.
இது குறித்து, ஜனநாயக சீர்திருத்தத்துக்கான சங்கம் என்ற அரசு சாரா அமைப்பு, வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையில் கூறியுள்ளதாவது:
கடந்த, 2015 - 16 நிதியாண்டில், பா.ஜ.,வின் மொத்த வருவாய், 570.86 கோடி ரூபாய்;
காங்., மொத்த வருவாய், 261.56 கோடி ரூபாய்.
'மொத்த வருவாயில், அடையாளம்
தெரியாதவர்கள் அளித்த நன்கொடை உள்ளிட்ட வழிகளில் கிடைத்தவை, 81 சதவீதம்' என, பா.ஜ., கூறியுள்ளது; '71 சதவீதம்' என, காங்., கூறியுள்ளது.
அவசியமில்லை:
அரசியல் கட்சிகளுக்கு, 20 ஆயிரம் ரூபாய்க்கு குறைவான தொகையை நன்கொடையாக அளிப்போரின் பெயரை, கட்சிகள் குறிப்பிட வேண்டியதில்லை. இதைத் தவிர, கூப்பன்கள் விற்பனை உள்ளிட்ட வழிகளில் கிடைக்கும் வருவாய்க்கான
ஆதாரங்களை, தாக்கல் செய்ய வேண்டியதில்லை.
அடையாளம் தெரியாத வழிகளில், பா.ஜ.,வுக்கு, 460.78 கோடி ரூபாயும், காங்கிரஸ் கட்சிக்கு, 186.04 கோடி ரூபாயும் கிடைத்துள்ளது.
வரவு, செலவு:
ஏழு தேசியக் கட்சிகளின் மொத்த
வருவாய், 1,033.18 கோடி ரூபாய்.
இதில், 754.45 கோடி ரூபாயை கட்சிகள்
செலவு செய்துள்ளன.
பா.ஜ., 570.86 கோடி;
காங்கிரஸ், 261.56 கோடி;
மார்க்சிஸ்ட், 107.48 கோடி;
பகுஜன் சமாஜ், 47.39 கோடி;
திரிணமுல் காங்கிரஸ் 34.58 கோடி;
தேசியவாத காங்கிரஸ், 9.14 கோடி;
இந்திய கம்யூனிஸ்ட், 2.18 கோடி ரூபாயை செலவிட்டுள்ளன.
குறைந்தது:
கடந்த, 2014 - 15 நிதியாண்டில், பா.ஜ.,வின் வருவாய், 970.43 கோடியாக
இருந்தது. அது, 2015 - 16 நிதியாண்டில், 41 சதவீதமாக குறைந்தது. இதே காலகட்டத்தில், 593.31 கோடி ரூபாயாக இருந்த காங்கிரஸ் மொத்த வருவாய், 56 சதவீதம் குறைந்துள்ளது.
நன்றி : தினமலர் நாளிதழ் - 07.09.2017
No comments:
Post a Comment