முன்பதிவு பயணிகளுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தி!
ரயில்வேயில் 'எம் ஆதார்': புதிய வசதி
அறிமுகம்
புதுடில்லி:
ரயிலில் முன்பதிவு செய்யப்பட்ட பெட்டிகளில் பயணம் செய்யும் பயணியர், பயணத்தின்போது, தங்கள் மொபைலில்
உள்ள டிஜிட்டல் வடிவ ஆதாரை அடையாள அட்டையாக ஏற்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
ரயில்வே
வட்டாரங்கள் கூறியதாவது:
இந்திய ஆதார் ஆணையம் அறிமுகப்படுத்தியுள்ள, 'எம் ஆதார்' என்ற, 'ஆப்'பை பயன்படுத்தி, ஒருவர், தன், ஆதார் அடையாள அட்டையை, மொபைல்போனுக்கு பதிவிறக்கம் செய்யலாம். ஆதார் அட்டையில், எந்த மொபைல் எண் உள்ளதோ, அந்த எண் பயன்படுத்தப்படும் மொபைல்போனில் மட்டுமே, இந்த, 'ஆப்'பை பதிவிறக்கம் செய்ய முடியும். ரயில்களில், முன்பதிவு செய்யப்பட்ட பெட்டிகளில் பயணம் செய்யும் பயணியர், பயணத்தின்போது, தங்கள் மொபைலில்
உள்ள இந்த, 'ஆப்'பை பயன்படுத்தி, டிஜிட்டல் வடிவ
ஆதாரை காட்டினால், அதை அடையாள அட்டையாக ஏற்க முடிவு
செய்யப்பட்டுள்ளது.
நன்றி : தினமலர்
நாளிதழ் -14.09.2017
No comments:
Post a Comment