தனியார் பள்ளி ஆசிரியர்களும், 2019க்குள், ’டெட்’ என்ற, ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெறுவது கட்டாயம் என, பள்ளிக்கல்வி இயக்குனர், இளங்கோவன் அறிவித்துள்ளார்.
’தமிழ்நாடு இலவச கட்டாய கல்வி உரிமை சட்டத்தில், 2011 முதல், அனைத்து புதிய ஆசிரியர்களும், தகுதி தேர்வில் கட்டாயம் தேர்ச்சி பெற வேண்டும்’ என, தமிழக அரசு, அரசாணை வெளியிட்டது.
மத்திய அரசின் தேசிய ஆசிரியர் கல்வியியல் கவுன்சில், 2010ல், வெளியிட்ட அறிவிப்பில், ’புதிய நியமனங்களிலும், ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களையே நியமிக்க வேண்டும்’ என, தெரிவித்தது. ’தகுதி தேர்வால், சிறுபான்மை அந்தஸ்து பெற்ற கல்வி நிறுவனங்களில் பாதிப்பு ஏற்படும்’ என, சிறுபான்மை நிறுவனங்கள், உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தன.
கூடுதல் அவகாசம்:
இந்த வழக்கில், சிறுபான்மை அந்தஸ்து பெற்ற நிறுவனங்களுக்கு மட்டும், ஆசிரியர் தகுதி தேர்வில் விலக்கு அளிக்கப்பட்டது. இதை தொடர்ந்து, சிறுபான்மை நிறுவனங்கள் தவிர, மற்ற கல்வி நிறுவனங்களில், 2010க்கு பின், பணியில் சேர்ந்த அனைத்து ஆசிரியர்களும், தகுதி தேர்வில் கட்டாயம் தேர்ச்சி பெற வேண்டும் என, 2014 வரை அவகாசம் வழங்கப்பட்டது.
இதிலும், பலர் தேர்ச்சி பெறவில்லை. தொடர்ந்து, இன்னும் ஐந்து ஆண்டுகள் அவகாசம் வழங்கப்பட்டு, 2019 வரை கூடுதல் அவகாசம் நீடிக்கப்பட்டது.
இதனிடையே, தமிழக பள்ளிக்கல்வி இயக்குனர், இளங்கோவன், அனைத்து பள்ளிகளுக்கும்
சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.
தகுதி தேர்வு:
அதில், ’மத்திய அரசின் கல்வியியல் கவுன்சில் மற்றும் தமிழக கட்டாய கல்வி உரிமை சட்டத்தின் படி, அனைத்து பள்ளிகளின் ஆசிரியர் பதவிக்கு, ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெறுவது கட்டாயம். ’இதுவரை தேர்ச்சி பெறாத ஆசிரியர்கள், 2019, மார்ச், 31க்குள் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும்’ என, கூறப்பட்டுள்ளது.
நன்றி : தினமலர் - கல்விமலர் - 09.10.2017
No comments:
Post a Comment