ஸ்டேட் பேங்க் கட்டுப்பாடுகள் தளர்வு
இனி பணம் எடுக்க கட்டணம், கட்டுப்பாடு இல்லை: எஸ்பிஐ
புதுடில்லி : வாடிக்கையாளர்கள் ஏடிஎம்.,களில் பணம் எடுப்பதற்கு விதிக்கப்பட்டு வந்த கட்டணம் மற்றும் பணம் எடுப்பதற்கான வரையறையை திரும்பப் பெறுவதாக எஸ்பிஐ அறிவித்துள்ளது.
எஸ்பிஐ வெளியிட்டுள்ள புதிய அறிவிப்பின்படி கிளாசிக் டெபிட் கார்டு வைத்திருப்போர் இனி நாள் ஒன்றிற்கு ரூ.40,000 வரை பணம் எடுக்கலாம். ஆன்லைன் பண பரிவர்த்தனை அளவும் ரூ.50,000 வரை உயர்த்தப்பட்டுள்ளது. கிளாசிக் டெபிட் கார்டுகளுக்கான ஆண்டு பராமரிப்பு கட்டணமாக வசூலிக்கப்பட்டு வரும் ஜிஎஸ்டி உடனான ரூ.300, இனி ஜிஎஸ்டி உடன் ரூ.100 ஆக குறைக்கப்படும்.
பிரைடு மாஸ்டர் கார்டுகளை பயன்படுத்தி பணம் எடுப்பதற்கான அளவு ரூ.1 லட்சமாகவும், ஆன்லைன் பணபரிவர்த்தனை அளவு ரூ.2 லட்சமாகவும் உயர்த்தப்படுகிறது. இதற்கான ஆண்டு பராமரிப்பு கட்டணம் ஜிஎஸ்டி உடன் ரூ.250 ஆக குறைக்கப்பட்டுள்ளது.
பிளாடினம் டெபிட் உடனான ஏடிஎம் கார்டு வைத்திருப்போர் இனி தினமும் ரூ.2 லட்சம் வரை எடுக்கலாம். ஆன்லைன் பணபரிவர்த்தனை ரூ.5 லட்சம் வரை உயர்த்தப்படுகிறது. ஆண்டு பராமரிப்பு கட்டணம் ஜிஎஸ்டி உடன் ரூ.350 ஆக குறைக்கப்பட்டுள்ளது.
எஸ்பிஐ லைப் இன்சூரன்ஸ் வாடிக்கையாளர்கள் இனி தங்களின் தவணை தொகையை கிரெடிட் கார்ட்கள் மூலமும் செலுத்தலாம். மொபைல் டாப் அப் செய்ய, செக் புக் வாங்குவதற்கு உள்ளிட்ட தேவைகளுக்கும் கிரெடிட் கார்டுகளை பயன்படுத்திக் கொள்ளலாம்.
எஸ்பிஐ குழுமத்திற்கு உட்பட்ட வங்கிகளில் கணக்கு வைத்திருக்கும் வாடிக்கையாளர்கள் இனி ஏடிஎம்.,களில் கட்டணம் இன்றி பண பரிவர்த்தனை செய்ய முடியும். ஒருநாளைக்கு பணம் எடுப்பதற்கான அளவு ரூ.2 லட்சம் வரை உயர்த்தப்பட்டுள்ளது. எஸ்பிஐ ஏடிஎம் கார்டுகளை பயன்படுத்தி ஆன்லைனின் பொருட்கள் வாங்குவதற்கான அளவு ரூ.5 லட்சம் வரை உயர்த்தப்பட்டுள்ளது.
நன்றி : தினமலர் நாளிதழ் - 13.10.2017
No comments:
Post a Comment