புரோ நோட்டு எனப்படும் கடன் உறுதிச் சீட்டு
ஒருவர் மற்றொருவரிடம் கடன் வாங்கியதற்கு அத்தாட்சியாக எழுத்து மூலம் உறுதி செய்து கொள்வதற்கு பயன்படுத்தப்படுகின்ற தாளையே,
PROMISSORY NOTE என்று கூறுகிறோம். தமிழில் சுருக்கமாக “ புரோ நோட்” என்று சொல்கிறோம்.
கடன் கொடுத்தவர் கடனை கேட்டவுடன் கடன் வாங்கியவர் எந்தவித நிபந்தனையும் இன்றி வாங்கிய கடனை அவருக்கு திருப்பிக் கொடுக்க வேண்டும். இதுவே இந்த புரோ நோட்டின் சாராம்சம் ஆகும்.
மாற்றுமுறை ஆவணச் சட்டம்,
குறிப்பிட்ட ஒரு நபருக்கோ அல்லது அவரது உத்தரவு பெற்றவருக்கோ அல்லது முறைப்படி அந்த உத்தரவை கொண்டு வருபவருக்கோ குறிப்பிட்ட ஒரு தொகையைக் கொடுப்பதாக நிபந்தனை ஏதுமின்றி கடன் பெற்றவர் எழுதி கையொப்பம் இட்டுக் கொடுக்கும் முறையே ஆவணக்கடன் உறுதிச் சீட்டு ஆகும்! என்று புரோ நோட்டு பற்றி மாற்றுமுறை ஆவணச் சட்டம், நான்காவது விதியில் குறிப்பிடப்பட்டு உள்ளது.
குறிப்பிட்ட ஒரு நபருக்கோ அல்லது அவரது உத்தரவு பெற்றவருக்கோ அல்லது முறைப்படி அந்த உத்தரவை கொண்டு வருபவருக்கோ குறிப்பிட்ட ஒரு தொகையைக் கொடுப்பதாக நிபந்தனை ஏதுமின்றி கடன் பெற்றவர் எழுதி கையொப்பம் இட்டுக் கொடுக்கும் முறையே ஆவணக்கடன் உறுதிச் சீட்டு ஆகும்! என்று புரோ நோட்டு பற்றி மாற்றுமுறை ஆவணச் சட்டம், நான்காவது விதியில் குறிப்பிடப்பட்டு உள்ளது.
புரோ நோட்டின் சிறப்பு
⧭ இதனை முத்திரைத் தாளில் எழுத வேண்டியதில்லை.
⧭ எங்கும் பதிவு செய்ய வேண்டும் என்பதில்லை.
⧭ சாட்சிகளிடம் முதலிலேயே கையெழுத்து வாங்க வேண்டியதில்லை.
⧭ ரூ.50,000/- வரை கடைசி நேரத்தில் நிரப்பிக் கொள்ளலாம்.
⧭ சாதாரணத் தாளில் எழுதி, ஒரு ரூபாய் ரெவின்யூ ஸ்டாம்ப் ஒட்டினால் போதுமானது.
⧭ கடன் கொடுப்பவர் நிபந்தனைகள் விதிக்க வேண்டியதில்லை.
முக்கிய விதிகள்
⧭கடன் வாங்கியவர் எந்தவித நிபந்தனையும் இன்றி, வாங்கிய கடனை, கேட்டவுடன் கடன் கொடுத்தவருக்கு திருப்பிக் கொடுக்க வேண்டும்.
⧭ ரெவின்யூ ஸ்டாம்ப் ஒட்டாமல், கடன் வாங்கியவர் புரோ நோட்டில் கையெழுத்து போட்டால் அந்த புரோ நோட்டு செல்லாது.
⧭ நிபந்தனைகள் விதிக்கப்பட்ட புரோ நோட்டுகள் செல்லாது.
⧭ புரோ நோட்டு எழுதப்பட்ட நாளில் இருந்து தொடர்ந்து மூன்று வருடங்களுக்கு பிறகு செல்லாது.
⧭ கடன் வாங்கியவர் வட்டியோ அல்லது அசலோ கடன் பெற்றவரிடம் கொடுக்கும்போது புரோ நோட்டின் பின்புறத்தில் எழுதி அவரது கையெழுத்தை வாங்கிக் கொள்ளவேண்டும்.
⧭ அசலும் வட்டியுமாக மொத்தத் தொகையையும் கடன் வாங்கியவர் செலுத்திவிட்டால், புரோநோட்டில் கடன் கொடுத்தவரிடம் எழுதி வாங்கிக் கொள்ள வேண்டும்.
⧭ முழுப்பணமும் செலுத்திய பிறகு, எக்காரணத்தை முன்னிட்டும் புரோநோட்டை வாங்க மறக்கக் கூடாது.
⧭ புரோநோட்டை வாங்காமல் விட்டுவிட்டால், கடன் கொடுத்தவர், அதனை வேறு ஒருவருக்கு ”மேடோவர்” முறையில் எழுதிக் கொடுத்துவிட வாய்ப்பு உண்டு.
⧭ வட்டி மற்றும் அசல் கடன் வாங்கியவர் செலுத்தும்போது, அதனை பெற்றுக் கொண்டு கடன் கொடுத்தவர் தருகின்ற ரசீது செல்லாது.
⧭ கடன் வாங்கியவர் திருப்பிக் கொடுக்கவில்லை என்றால், காவல்நிலையத்தில் புகார் அளிக்க முடியாது. சிவில் வழக்கு தான் போடவேண்டும்.
புரோ நோட்டின் மாதிரி கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
****************************************அன்புடன் செல்வம் பழனிச்சாமி
No comments:
Post a Comment