விமான நிலையத்தில் பயன்படுத்த வேண்டிய ஆவணங்கள் வெளியீடு
புதுடில்லி: விமான நிலைய முனையத்தில் நுழையவும், பாதுகாப்பு சோதனையின் போதும் காண்பிக்கப்பட வேண்டிய சான்று விவரங்களை விமான போக்குவரத்து
பாதுகாப்பு வாரியம் வெளியிட்டுள்ளது.
அதன் விவரம்:
1. பாஸ்போர்ட்
2. வாக்காளர் அடையாள அட்டை
3. ஆதார் அல்லது மொபைல் பதிவிறக்கம் செய்யப்பட்ட
ஆதார்
4. பான் கார்டு
5 . டிரைவிங் லைசென்ஸ்
6. பணியிட அடையாள அட்டை
7. மாணவர்களின் அடையாள அட்டை
8. தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் வழங்கிய புகைப்படத்துடன் கூடிய கணக்கு புத்தகம்
9. பென்சன் அட்டை அல்லது புகைப்படத்துடன் கூடிய பென்சன் ஆவணம்
10. மாற்றுத்திறனாளி அடையாளி அட்டை
இதில் ஏதேனும் ஒன்றை காட்டினால் போதுமானது. விமான போக்குவரத்து பாதுகாப்பு வாரிய தலைவர் குமார் ராஜேஷ் சந்திரா கூறுகையில், மேற்குறிப்பிட்ட அட்டைகளை காண்பிக்க முடியாததற்கு நியாயமான காரணம் இருந்தால் அவர்கள், மத்திய மாநில அரசுகளில் பணிபுரியும்
குரூப் ஏ கெஜடட் அதிகாரியின் லெட்டர் பேடில், புகைப்படம ஒட்டி, கையெழுத்து வாங்கி காண்பிக்கலாம்.
உள்நாட்டு விமான பயணத்தின் போது, பச்சிளம் குழந்தைகள் அல்லது சிறுவர்களை அழைத்து சென்றால், அவர்களின் பாதுகாவலர்களுக்கு உரிய சான்று இருந்தால், அவர்களுக்கு
தேவையில்லை. இவ்வாறு அவர் கூறினார்.
நன்றி : தினமலர் நாளிதழ் - 28.10.2017
No comments:
Post a Comment