கல்வி கடன் முகாம்: பள்ளிகளுக்கு உத்தரவு
சென்னை: பிளஸ் 2 தேர்ச்சி பெறும் மாணவர்கள், உயர் கல்வியில் சேர, கல்விக் கடன் வழங்குவற்கான
முகாம்களை, பள்ளிகளில் நடத்த, இயக்குனரகம் உத்தரவிட்டுள்ளது.
'பிளஸ் 2 தேர்ச்சி பெறும் மாணவர்கள், உயர் கல்வியில் சேர வசதியாக, அவர்களுக்கு, வங்கிகள் வாயிலாக, கல்விக் கடன் வழங்க ஏற்பாடு செய்யப்படும்' என, பள்ளிக்கல்வி அமைச்சர், செங்கோட்டையன்
அறிவித்திருந்தார்.
அதன்படி, அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளுக்கும், பள்ளிக்கல்வி இயக்குனர், இளங்கோவன் அனுப்பிய சுற்றறிக்கையில்,
'மாவட்ட கலெக்டர் அலுவலகங்களில், கல்விக் கடன் முகாம் நடத்த குழுக்கள் அமைக்கப்பட்டு உள்ளன. இந்த குழுக்களுடன் இணைந்து, பள்ளி களில் கல்விக் கடன் முகாம்கள் நடத்தி, மாணவர்களின்
உயர் கல்விக்கு உதவ வேண்டும்' என, கூறியுள்ளார்.
நன்றி : தினமலர் நாளிதழ் - 28.10.2017
No comments:
Post a Comment