தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் எழுதும் விண்ணப்பங்களை அரசு அலுவலகத்திற்கு இலவசமாக எப்படி அனுப்புவது ,அதன் நடைமுறைகள் என்ன என்பதைப் பற்றி பார்ப்போம்.
தபால்துறை மூலம் நமது கடிதங்களை அரசு அலுவலகங்களுக்கு இரண்டு வழிகளில் இலவசமாக அனுப்பலாம்,
1.BY POST (தபால் மூலம் அனுப்புவது )
2.BY HAND ( நேரடியாக கையில் தருவது )
BY POST ( தபால் மூலம் அனுப்புவது)
உங்கள் விண்ணப்பத்தை ஒரு கடித உரையில் போட்டு குறைந்தது 5 ரூபாய் அஞ்சல் விலை ஒட்டி உங்கள் மாவட்ட தலைமை அஞ்சல் அலுவலக போஸ்ட் மாஸ்டர்க்கு அல்லது சூப்பரிண்டண்ட் ஆப் போஸ்ட் ஆபீஸ் அவர்களுக்கு அனுப்பலாம், உங்கள் கடிதத்தை பெற்ற அவர்கள் எந்த துறை முகவரிக்கு உங்கள் கடிதம் அனுப்ப வேண்டுமோ அவர்களுக்கு உங்கள் கடிதத்தை அனுப்பி வைத்துவிட்டு ,அதன் விவரங்களை உங்களுக்கும் தெரிவிப்பார்கள்.
BY HAND ( நேரடியாக கையில் தருவது).
நீங்களே நேரடியாக உங்கள் மாவட்ட தலைமை தபால்துறை அலுவலகத்திற்கு சென்று தலைமை போஸ்ட் மாஸ்டர் அவர்களை சந்தித்து உங்கள் விண்ணப்பத்தை மட்டும், (கடித உரைக்குள் வைக்காமல்) அவரிடம் கொடுத்தால், அவர் அதனை பெற்று வட்ட வடிவியல் முத்திரை மற்றும் அவரது முத்திரை குத்தி சூப்பரிண்டண்ட் ஆப் போஸ்ட் ஆபீஸிற்கு அனுப்பி வைப்பார். மேலும், நீங்கள் கொடுக்கின்ற (அனுப்புகின்ற கடிதத்தின்) நகல் ஒன்றில் அவரது கையொப்பம் மற்றும் அலுவலக முத்திரை வைத்தும் தருவார்.
அதன் பின்னர், அங்கிருந்து உரிய அரசு அலுவலகங்களுக்கு உங்கள் கடிதம் அனுப்பி வைக்கப்படும். அவ்வாறு அனுப்பி வைத்தவுடன் ,உங்களுக்கு அவைகள் பற்றி விபரங்கள் தபால் துறையில் இருந்து அனுப்பப்படும். மேலும், அவைகள் உரிய அலுவலகத்தில் சேர்ந்தவுடன் அந்த அலுவலகத்தில் இருந்தும் உங்களுக்கு அது சேர்ந்த விபரம் கடிதம் மூலம் உங்களுக்கு தெரியப்படுத்தப்படும்.
அதன் பின்னர், அங்கிருந்து உரிய அரசு அலுவலகங்களுக்கு உங்கள் கடிதம் அனுப்பி வைக்கப்படும். அவ்வாறு அனுப்பி வைத்தவுடன் ,உங்களுக்கு அவைகள் பற்றி விபரங்கள் தபால் துறையில் இருந்து அனுப்பப்படும். மேலும், அவைகள் உரிய அலுவலகத்தில் சேர்ந்தவுடன் அந்த அலுவலகத்தில் இருந்தும் உங்களுக்கு அது சேர்ந்த விபரம் கடிதம் மூலம் உங்களுக்கு தெரியப்படுத்தப்படும்.
பிரிவு 6(1) - தகவல் கேட்டு அனுப்பப்படும் விண்ணப்பம் .
பிரிவு 19(1) - மேல்முறையீடு செய்ய அனுப்பப்படும் விண்ணப்பம்.
பிரிவு 19(3) - இரண்டாம் மேல்முறையீடு செய்ய அனுப்பப்படும் விண்ணப்பம்.
பிரிவு 2 J (1)- ஆய்வு செய்ய அனுப்பப்படும் விண்ணப்பம்.
இவ்வாறு தகவல் அறியும் உரிமை சட்டம் மூலம் அரசு அலுவலகங்களுக்கு அனுப்பப்படும் விண்ணப்பங்களை இலவசமாக அனுப்பி தகவல்களை நீங்கள் பெறலாம்.
விருதுநகர் மாவட்டப் பதிவாளர் அலுவலகத்திற்கு தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் இலவசமாக அனுப்பிய கடிதத்தின் நகலில் சிவகாசி தலைமை அஞ்சலக அதிகாரியின் கையொப்பம் மற்றும் அஞ்சலக முத்திரையை கீழே காணலாம்.
மேலே கண்ட கடிதத்தின் அசலை விருதுநகர் மாவட்டப் பதிவாளர் அலுவலகத்திற்கு இலவசமாக அனுப்பிவிட்டு அந்த தகவலை மனுதாரருக்கு தெரிவித்த சிவகாசி தலைமை அஞ்சலக அதிகாரியின் கடித நகலை கீழே காணலாம்.
No comments:
Post a Comment