disalbe Right click

Thursday, November 16, 2017

குறையொன்றும் இல்லைஉலக குறைப்பிரசவ விழிப்பு உணர்வு தினம் நவம்பர் 17
இன்றைய சூழ்நிலையில் பல்வேறு காரணங்களால் குறைப்பிரசவ (Preterm labour) நிகழ்வுகள் அதிகரித்து வருகின்றன. என்றாலும், குறைப்பிரசவம் நேர வாய்ப்புள்ள பெண்களை அவர்களின் கர்ப்பக்காலத்திலேயே கவனித்து முன்னெச்சரிக்கை சிகிச்சைகளைத் தொடங்குவது முதல், குறை மாதத்தில் பிறந்த குழந்தைகளை நவீன மருத்துவ உபகரணங்கள்கொண்டு காப்பாற்றி அவர்களின் ஆரோக்கியத்தை உறுதிசெய்து கொடுப்பதுவரை, இதில் அச்சம்கொள்ள வைக்கும் காரணிகள் இன்று விலக்கப்பட்டுள்ளன. அதுபற்றிய தகவல்களைத் தருகிறார், சென்னையைச் சேர்ந்த மகப்பேறு மருத்துவர் டாக்டர் ஜெயராணி காமராஜ்.

Image result for மகப்பேறு மருத்துவர் டாக்டர் ஜெயராணி காமராஜ்.
எது குறைப்பிரசவம்?
தன் தாயின் வயிற்றில் கருவாகி உருவாகி வளரும் ஒரு சிசு, 36 வார காலம் முடியும் நிலையில் தன் முழுமையான வளர்ச்சியை எட்டியிருக்கும். ஆனால், பல்வேறு காரணங் களால் அதற்கு முந்தைய வாரங்களிலேயே சிலருக்குக் குறைப்பிரசவம் நேர்ந்துவிடுகிறது. இன்றைய சூழ்நிலையில், 28 வாரங்களில், அதாவது ஏழாவது மாதத்திலேயே பிறந்துவிடும் குழந்தைகளைக்கூட இன்குபேட்டர் உள்ளிட்ட மருத்துவ முயற்சிகளின் துணைகொண்டு காப்பாற்றிவிட முடியும். எனவே, இதைசாத்தியமான குறைப்பிரசவம்(Viable preterm labor) என்கிறோம். வெளிநாடுகளில், 25 வாரங்களில் பிறக்கும் சிசுக்களைக்கூட காப்பாற்றும் மருத்துவ வசதிகள் உள்ளன.
குறைப்பிரசவக் குழந்தைகள்பிரச்னைகள் என்னென்ன?
குறைமாதத்தில் பிறக்கும் குழந்தைகளுக்கு நுரையீரல் பிரச்னை இருக்கும். அவர்களுக்குச் சீரான சுவாசம் இருக்காது. அவர்களின் ரத்தக்குழாய்கள் மிகவும் மெல்லியதாகயிருக்கும். காற்றழுத்தத்தில் ஏற்படும் மாறுபாடுகளுக்கு மூளையில், நுரையீரலில் இருக்கும் ரத்தக்குழாய்களால் சரிவர ரெஸ்பாண்ட் செய்ய முடியாது. காற்றழுத்தத்தில் ஏற்படும் மாறுபாடு களுக்கு ஏற்ப சுவாசத்தைத் தகவமைத்துக்கொள்ள, மூளைநுரையீரல் ரத்தக்குழாய்க்கு இடையேயான தகவல் பரிமாற்றம் சரியாக இருக்காது. நுரையீரல் திசுக்களுக்குப் போதுமான அளவு ஆக்சிஜன் உள்ளீடு கிடைக்காது. இதைஹைப்பாக்சியா(Hypoxia) என்போம்.


குறைப்பிரசவக் குழந்தைகளுக்கு நுரையீரல் முழுமையான வளர்ச்சியடைந்திருக்காது என்பதால், அவர்களுக்குச் செயற்கை சுவாசம் அளிக்கப்படும். மேலும், அதன் வளர்ச்சி தடைபெறாமல் நிகழ தாயின் கருவறையில் குழந்தைக்குக் கிடைக்கக்கூடிய அம்சங்கள், நவீன மருத்துவச் சிகிச்சை மூலமாக அந்தக் குழந்தைக்குக் கிடைக்கச்செய்யப்படும். தவிர, இக்குழந்தைகளுக்குத் தொற்றுப் பிரச்னை மற்றும் குடல், செரிமான உறுப்புகளில் பிரச்னை ஏற்பட அதிக வாய்ப்பிருப்பதால் அவர்கள் இன்குபேட்டரில் தொடர் கண்காணிப்பில் வைக்கப்படுவார்கள்.
பெரும்பாலும் குறைமாதத்தில் பிறக்கும் குழந்தைகளின் நுரையீரலுக்கு விரிந்து கொடுக்கும் தன்மை இருக்காது. மேலும், ஆக்சிஜன், கார்பன் டை ஆக்ஸைடு வாயுக்கள் பரிமாற்றம் சீராக நடக்கத் தேவையானசர்ஃபேக்டன்ட்(Surfactant) உற்பத்தியும் போதுமான அளவு இருக்காது. தொற்று காரணமாகக் குறைப்பிரசவம் நிகழும்போது, அந்தக் குழந்தைகளுக்கு பிறக்கும்போதே நுரையீரல் தொற்று இருக்கும். இந்தக் குழந்தைகளுக்கெல்லாம்சர்ஃபேக்டன்ட்அதிகமாகக் கொடுக்க வேண்டியிருக்கும்.
எனவே, இன்குபேட்டர் காலம் என்பது நோயின் தீவிரம் மற்றும் குணம் பெறும் கால அவகாசத்தைப் பொறுத்துக் குழந்தைக்குக் குழந்தை மாறுபடும்.
டிஸ்சார்ஜுக்குப் பின்னரும்!
குழந்தையை மருத்துவமனையிலிருந்து வீட்டுக்கு அழைத்துச்சென்ற பின்னரும், குளியல் முதல் தொட்டில், தடுப்பூசிவரை அவர்களை எப்படிக் கையாள வேண்டும், பாதுகாக்க வேண்டும் என்று மருத்துவர்கள் வலியுறுத்துவதைக் கடைப்பிடிப்பது அவசியம். குறைப்பிரசவக் குழந்தைகளுக்குப் பார்க்கும் திறன், கேட்கும் திறன் அல்லது பேச்சுத்திறனில் குறைபாடு நேரலாம். எனவே, மூன்று மாதங்கள், ஆறு மாதங்கள், ஒரு வயது என அவர்களின் வளர்ச்சியைக் கண்காணிக்க மருத்துவர் கொடுக்கும் அட்டவணையில் மற்றும் பரிந்துரைக்கும் பரிசோதனைகளில் கவனமாக இருக்க வேண்டும். இவற்றையெல்லாம் பின்பற்றுவதன் மூலம், குழந்தைக்கு நீண்டகாலப் பிரச்னை எதுவும் நேராமல் பாதுகாக்கலாம்.


கர்ப்பக்காலத்திலேயே முன்னேற்பாடுகள்!
சில பெண்களுக்கு அவர்களின் உடல்நிலைக் காரணங்களால் குறைப்பிரசவம் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் முன்கூட்டியே கணிக்கப்படும். அந்நிலையில், அந்தச் சிசுவுக்குத் தேவைப்படும் உள்ளீடுகள் கருவிலேயே அளிக்கப்படும். மேலும், குறைப்பிரசவத்தைத் தவிர்க்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும்.
யாருக்கெல்லாம் குறைப்பிரசவம் நேரலாம்..?
கர்ப்பக்காலத்தில் உடல்நலனில் எந்தப் பிரச்னையோ, வேறுபாடுகளோ இல்லாத பட்சத்திலும், இரண்டு முதல் ஐந்து சதவிகிதம் நார்மலான பெண்களுக்கும் குறைப்பிரசவம் நேரலாம்.
❤  மிகக் குறைந்த அல்லது அதிக வயதுடைய பெண்களுக்கு
❤  குறைந்த எடையுடைய அல்லது உடல் பருமன் அதிகமான பெண்களுக்கு
புரதச்சத்துக் குறைபாடு, ரத்தச்சோகை, வைட்டமின் குறைபாடு உள்ளிட்ட ஊட்டச் சத்துக் குறைபாடுடைய பெண்களுக்கு
❤  இதயம், சிறுநீரகக் கோளாறுகளால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு
❤  வலிப்பு, ரத்தக்கொதிப்பு, நீரிழிவு நோய்களால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு
❤  கர்ப்பக்காலத்தில் ஏற்படும் சில உடல் மாறுபாடுகளுக்கு ஆளாகும் பெண்களுக்கு
❤  இரட்டைக் குழந்தைகள் அல்லது இரண்டுக்கு மேற்பட்ட குழந்தைகளைக் கருவுற்ற பெண்களுக்கு
கர்ப்பவாயில் தொற்று (Bacterial vaginalinfection) ஏற்பட்ட பெண்கள் மற்றும் குடல் தொற்றால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு
கர்ப்பப்பையில் கட்டி, சதை வளர்ச்சி, பலவீனமான கர்ப்பவாய் போன்ற பிரச்னைகள் இருக்கும் பெண்களுக்கு
நீர்ச்சத்து அதிகமாக இருக்கும் பெண்களுக்குக் கர்ப்பப்பை அதிகமாக விரிந்து கொடுக்கும். இந்தப் பிரச்னை இருக்கும் பெண்களுக்கு
நஞ்சுக்கொடியில் (Placenta) தொற்று இருந்தால், நஞ்சுக்கொடி கீழிறங்கியோ, சிறிதாகவோ, பெரிதாகவோ இருக்கும் சூழலில்
❤  சில பெண்களுக்கு கர்ப்பக்காலத்தில் ஏற்படும் நீரிழிவு நோய், ரத்த அழுத்தம், ரத்தச்சோகை.
❤  வேலைப்பளு, மன அழுத்தம், தேவைக்கு அதிகமான ஓய்வு, காயம்படுவது, அதிர்ச்சி யடைவது.
குடும்பத்தில் வேறு யாருக்கேனும் குறைப்பிரசவம் நிகழ்ந்திருந்து, அதே கர்ப்பப்பை குறைபாடு கர்ப்பிணிக்கும் இருக்கும் மரபுக் காரணம்.
❤ கர்ப்பிணியின்/ கணவரின் மது, புகைப் பழக்கம்.
இதுபோன்ற காரணங்களால் பெண்களுக்குக் குறைப்பிரசவம் ஏற்படலாம்.
கருவுறுதலுக்கு முன்னரே!
இந்தக் காரணங்களில் கருவுறுதலுக்கு முன்னரே இனம் காணக்கூடிய பிரச்னைகள் இருக்கும் பெண்கள், தகுந்த மருத்துவ ஆலோசனை, சிகிச்சையின் கீழ் பிரச்னைகளை சரிசெய்துவிட்டு பின்னர் கருவுறுவது பரிந்துரைக்கத்தக்கது. மேலும், கர்ப்பக்காலத்தில் மருத்துவர் வலியுறுத்தும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைப் கடைப் பிடிப்பதும் குறைப்பிரசவத்தைத் தவிர்க்க உதவும். ஒருவேளை குறைப்பிரசவம் நிகழ்ந்தாலும், அதற்குரிய தீவிர சிகிச்சை மற்றும் கண்காணிப்பு மூலமாகப் பிஞ்சு உயிரைப் பத்திரமாக மீட்டெடுக்கலாம். முழுமையான சிகிச்சையின் பலனாக ஆரோக்கியமான குழந்தையைக் அள்ளிக் கொஞ்சலாம்!”
நன்றி : டாக்டர்விகடன் - 16.11.201

No comments:

Post a Comment