மாதிரி வினாக்கள்:
1. தமிழ் இலக்கியம் / கலாசாரம். எடுத்துக்காட்டு:
* ஆயிரக்கணக்கான யானைகளைக் கொன்று குவிக்கும் வீரம் பொருந்திய அரசனின் வெற்றிச் சிறப்பைப் புகழ்ந்து பாடும் நூல்
1. உலா 2. பள்ளு 3. தூது 4. பரணி
* கிறித்துவக் கம்பர் என்று புகழப்படுபவர்
1. வேதநாயகம்பிள்ளை 2. எச்.ஏ. கிருட்டிணப்பிள்ளை 3. சங்கரநாராயணப்பிள்ளை 4. சிதம்பரம்பிள்ளை.
* யாதும் ஊரே யாவரும் கேளிர் என்ற அடி இடம்பெற்ற நூலின் பெயர்
1. கலித்தொகை 2. புறநாநூறு 3. அகநானூறு 4. நற்றிணை
2. பொது அறிவியல் இதில் இயற்பியல், வேதியியல், உயிரியல் ஆகிய பாடங்களில் இருந்து கேள்விகள் கேட்கப்படும். எடுத்துக்காட்டு :
* மழைத்துளிகள் கோள வடிவத்தைப் பெறக் காரணம்
1. பரப்பு இழுவிசை 2. ஈர்ப்பு விசை 3. மைய நோக்கு விசை 4. மையவிலக்கு விசை
* பனிக்கட்டியுடன் உப்பை சேர்க்கும்போது அதன் உறைநிலை.....
1.அதிகரிக்கிறது. 2. குறைகிறது. 3. மாறாது. 4. கண்டுபிடிக்க இயலாது.
*ஒரு திடப்பொருள் திரவ நிலைக்கு மாறும் நிகழ்வு
1. உருகுதல் 2. உறைதல் 3. ஆவியாதல் 4. பதங்கமாதல்.
3. சரித்திரம் இதில் இந்திய வரலாறு குறிப்பாக, தமிழக வரலாறு சம்பந்தப்பட்ட கேள்விகள் கேட்கப்படும். (எ.கா.) எடுத்துக்காட்டு :
* குடவோலை தேர்தல் முறையைப் பின்பற்றிய மன்னர்கள்.
1.பாண்டியர் 2. சேரர் 3. சோழர் 4. களப்பிரர்
*கர்நாடக நவாபின் தலைநகரம்?
1. சென்னை 2. பாண்டிச்சேரி. 3. ஆற்காடு 4. காரைக்கால்.
* ராமகிருஷ்ணமடம் முதன் முதலில் விவேகானந்தரால் தொடங்கப்பட்ட இடம்.
1. சென்னை 2. வேலூர் 3. பேலூர் 4. வடலூர். 4. அரசியல்
இந்திய அரசியல் சட்டம் பற்றியும்,அதில் உள்ள பல அம்சங்கள் பற்றியும் கேள்விகள் அமைந்திருக்கும். சுதந்திர போராட்டம் இதில் இந்திய சுதந்திர போராட்டத்துக்காக பாடுபட்டவர்கள் பற்றிய விவரங்கள், குறிப்பாக தமிழகத்தை சேர்ந்தவர்களை பற்றிய விவரங்கள், போராட்டங்கள் பற்றிய விவரங்கள் போன்றவை கேட்கப்பட்டிருக்கும். எடுத்துக்காட்டு:
* தீண்டாமையை ஒழிக்கும் விதி
1. விதி 14 2. விதி 15. 3. விதி 17. 4. விதி 18
* கூட்டாட்சி என்பது.........
1. இந்தியாவில் உள்ள மாநிலங்களின் கூட்டு இணைவு. 2. மன்னராட்சி 3. பகுதி மன்னர் ஆட்சி, பகுதி மக்கள் ஆட்சி 4. அனைத்தும் சரி.
* இந்திய அரசியல் அமைப்பின் தந்தை என போற்றப்படுபவர்?
1. காந்தி 2. நேரு 3. அம்பேத்கர். 4. படேல்.
5. கணிதம் பெரிய பெரிய சூத்திரங்களை போட்டு கணக்கு போடும் அளவுக்கு இதில் கேள்விகள் இருக்காது. எல்லா கேள்விகளுமே சாதாரண மனக்கணக்கு மற்றும் புரிந்துகொள்ளும் அடிப்படையில் கேள்விகள் இருக்கும். எடுத்துக்காட்டு :
* ஒரு அரை வட்டத்தில் உள்ள கோணம்
1. குறுங்கோணம் 2.விரிகோணம் 3.நேர்கோணம் 4.செங்கோணம்.
* இரண்டு நாணயங்களை ஒரே நேரத்தில் சுண்டும்போது இரண்டுக்குக்கும் மேற்பட்ட தலைகள் கிடைக்கும் நிகழ்ச்சியின் நிகழ்தகவு?
அ) 1 ஆ) 0 இ) 1/4 ஈ) 3/4.
* வட்டத்தினுள் அமைந்த இணைகரம்.
அ) செவ்வகம் ஆ) சதுரம் இ)சரிவகம் ஈ) நாற்கரம். மேலே நான் கொடுத்த மாதிரி கேள்விகளுக்கான பதில்களை நீங்களே கண்டுபிடியுங்கள்.
6. உளவியல் தேர்வு இத்தேர்வை பொறுத்தவரை ரொம்பவும் கடினமாக இருக்காது. இதில் பகுத்துக்கூறும் தன்மை, சிந்தனை திறன், உடனுக்குடன் முடிவெடுக்கும் திறன் போன்றவற்றை அடிப்படையாக கொண்டு இருக்கும். எடுத்துக்காட்டு:
* குற்றவாளி ஒருவர் திருந்தி வாழ முயற்சிக்கும் போது உங்கள் நடவடிக்கை எப்படி இருக்கும்
1.அதற்குரிய ஒத்துழைப்பு தருவேன் 2.ஒத்துழைப்பு மறுப்பேன் 3.குற்றவாளி திருந்தவே முடியாது 4.உயர் அதிகாரியின் அனுமதி பெற்று செயல்படுவேன்.
* நீங்கள் சாலையில் சென்று கொண்டிருக்கும் போது ஒரு விபத்து நடக்கிறது. சாலையில் சென்ற ஒருவரை ஒரு கார் மோதி விட்டு சென்றுவிடுகிறது. நீங்கள் என்ன செய்வீர்?
1. போன்மூலம் போலீஸ்க்கு தகவல் சொல்வேன். 2. மோதிய காரை துரத்தி செல்வேன் 3. போலீஸ் நிலையத்திற்கு சென்று தகவல் சொல்வேன். 4. அடிபட்டவரை மருத்துவமணைக்கு அழைத்து செல்வேன்.
இந்த 4 பதில்களில் நீங்கள் எதை தேர்வு செய்வீர்கள் என்பதை மனதுக்குள் டிக் அடித்துக் கொள்ளுங்கள். இப்போது பதிலை சொல்கிறேன். அடிப்பட்டவரை மருத்துவமனைக்கு அழைத்து செல்கிறேன் என்பதுதான் சரியான பதில். காரணம், அந்த நேரத்தில் முக்கியமானது காயம் அடைந்தவரை காப்பாற்றுவதுதான்.
போலீசுக்கு சொல்வதோ அல்லது மோதிய காரை விரட்டி செல்வதோ முக்கியமல்ல. இந்த வகையில்தான் கேள்விகள் அமைந்திருக்கும்.
காவலர் தேர்வில் வெற்றி பெறுவதற்கான ஆலோசனைகள் மற்றும் அறிவுரைகள் மற்றும் தேர்வுக்கு தயார் செய்துகொள்வது, பயிற்சிகள் பற்றி இனி காண்போம்.
காவலர் பணிக்காக விண்ணப்பிக்கும் போது சில நடைமுறைகளை பின்பற்ற வேண்டும்.
விண்ணப்பத்தில் கேட்கப்பட்டுள்ள விவரங்களை மட்டும் பூர்த்தி செய்ய வேண்டும். தேவையில்லாதவிஷயங்களை அதில் எழுதக் கூடாது. விண்ணப்பத்துடன் இணைக்கப்பட்டுள்ள விவரக்குறிப்பில், விண்ணப்பிக்கும் முறை, விண்ணப்பத்துடன் இணைக்கப்பட வேண்டிய சான்றிதழ்கள் உட்பட எல்லா விவரங்களும் கொடுக்கப்படும். இதன் உதவியோடு விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்யவும்.
சரியாக பூர்த்தி செய்யப்படாத, கையெழுத்துப் போடாத, போட்டோ ஒட்டாத, தகுதி குறித்த சான்றிதழ் இணைக்கப்படாத, சரியான முகவரியிடப்படாத, விண்ணப்பக் கட்டணத்துக்கான DD இணைக்கப்படாத விண்ணப்பங்கள் முதல் கட்ட பரிசீலனையிலேயே நிராகரிக்கப்படும். காவலர் பணிக்கான தேர்வு முடிவுகள் இணையதளத்திலும், தினசரி நாளிதழ்களிலும் வெளியிடப்படும்.
இந்த பணிக்கான விதிமுறைகள், தகவல்கள், எழுத்துத் தேர்வு விவரங்கள், உடல்கூறு தகுதிகள், உட்பட எல்லா விஷயங்களும் www.tn.gov.in/tnusrb என்ற இணையதளத்தில் பார்க்கலாம்.
-சைலேந்திர பாபு ஐ.பி.எஸ்.,
தொடரும்.
No comments:
Post a Comment