மோட்டார் வாகனச் சட்டம் Motor
Vehicles Act
நிறைவான ஒரு
வாழ்வை
எண்ணி
இருக்கும் பலரின்
கனவுகளை, வாழ
நினைத்த வாழ்வை,
எதிர்காலத்தை சிதைக்க வல்லது
எதிர்பாராமல் நடைபெறும் விபத்து. அதுவும் மோட்டார் வாகனங்களினால் ஏற்படும் விபத்து களால்
ஏற்படக்கூடிய இழப்பு
பல
நேரங்களில் ஈடு
செய்ய
முடியாதது. இன்று
உலக
அளவில்
சாலைகளின் தரமும்
போக்குவரத்தின் தரமும்
உயர்ந்துள்ளது. அது
உலகின்
பொருளாதார வளர்ச்சியை பறை
சாற்று
கிறது.
ஆனால்,
இந்த
பொருளாதார வளர்ச்சி வாகன
நெரிசலை ஏற்படுத்துவதுடன் பல
விபத்து களுக்கும் வழிவகை
செய்கிறது.
WHO
(World Health Organisation) வின் கணிப்புப்படி கிட்டத்தட்ட உலகில்
ஓர்
ஆண்டில் சுமார்
1 கோடி
மக்களுக்கு மோட்டார் வாகன
விபத்துகளால் பலவிதமான உடல்
காயங்கள், ஊனங்கள் ஏற்படுவதாகத் தெரிவிக்கிறது. கிட்டத்தட்ட 6 லட்சம்
மக்கள்
உயிர்
இழக்கிறார்கள் என்றும் கூறுகிறது. இது
பொருளாதார வளர்ச்சியின்
விளைவா
அல்லது
மனித
இனத்தின் வீழ்ச்சியின் ஆரம்பமா?
இந்தியாவை பொறுத்தவரை வாகன
விபத்தினால் ஏற்படக்கூடிய உயிர்
இழப்பும், விபத்து களை
சந்தித்தவர்களுக்கு உடல்
உறுப்புகளில் ஏற்படும் காயங்களும், நிரந்தர ஊனங்களும், பலரின்
வாழ்வின் தரத்தில் பெரும்
அளவில்
மாறுதல்களை ஏற்படுத்தக்கூடிய ஒன்றாக
உள்ளது.
இவ்வாறான விபத்துகளில் மாட்டிக் கொள்பவர்களுக்கு இன்று
பெரிதும் கை
கொடுப்பது ‘MOTOR VEHICLES ACT 1988’ ‘மோட்டார் வாகனங்கள் சட்டம்
1988’ இந்த
சட்டம்
ஜூலை
1989ம்
ஆண்டில் இருந்து நடைமுறைபடுத்தப்பட்டுள்ளது. இந்த
சட்டம்
இதற்கு
முன்
இருந்த
1939ம்
ஆண்டு
சட்டத்துக்கு மாற்றாக இயற்றப்பட்டுள்ளது. மேலும்
இந்த
சட்டத்துக்கான விதிகளும் 1989ம்
ஆண்டே
வரையறுக்கப்பட்டுள்ளது.
இந்த
சட்டத்தின் முன்
இழப்பீடு யாரெல்லாம் கேட்க
முடியும்?
👋 விபத்தில் காயம் அடைந்தவர்கள்.
👋 சேதமடைந்த சொத்தின் உரிமையாளர்கள்.
👋மோட்டார் வாகன விபத்தில் உயிர்
இழந்தவர்களின் வாரிசுகள் அல்லது
சட்டமுறை பிரதிநிதிகள்.
👋 வாரிசு அல்லது சட்டமுறை பிரதிநிதிகளின் சார்பாக ஒருவர்...
ஆகியோர் இழப்பீடு கோரி
மனுதாக்கல் செய்யலாம்.
மனுவை
எங்கே
தாக்கல் செய்யலாம்?
1. விபத்து நடைபெற்ற இடத்தில் இருக்கும் தீர்ப்பாயம்.
2. இழப்பு நேர்கிறவர் வசிக்கும் அல்லது
தொழில்
நடத்தும் வரையறைக்குள் இருக்கும் தீர்ப்பாயம்.
3. எதிர்மனுதாரர்
வசிக்கும் வரையறைக்குள் இருக்கும் தீர்ப்பாயம் ( Tribunal).
மேலும்
விபத்து பற்றி
அறிவிப்பு எட்டியவுடன் தீர்ப்பாயமே தானே
முன்வந்து (Suomotto) வழக்கை விசாரணைக்கு ஏற்றுக் கொள்வது.
விபத்து நடந்தவுடன் அதன்
எல்லைக்குட்பட்ட காவல்
துறையினர் விபத்தில் சிக்கியவர்களை மீட்க,
காப்பாற்ற துரித
நடவடிக்கை எடுப்பதுடன் விபத்து பற்றி
முதல்
தகவல்
அறிக்கை தயாரித்து, அது
தயாரிக்கப்பட்ட 30 நாட்களுக்குள் அதிகார
வரம்புக்குட்பட்ட தீர்ப்பாயத்தில் தாக்கல் செய்ய
வேண்டும் என்பதை
சட்டம்
வலியுறுத்துகிறது. தீர்ப்பாயத்துக்கு முன்
இருக்கும் மனுவினை இயற்கை
நீதிக்கு உட்பட்டும், சட்டத்துக்கு உட்பட்டும் தகுந்த
விசாரணை மேற்கொண்ட பின்னர் தீர்ப்பாயம் நிர்ணயிக்கும் இழப்பீட்டு தொகையை
👋 விபத்தில் சம்பந்தப்பட்ட
வாகன
உரிமையாளரோ,
👋 வாகன ஓட்டுநரோ,
👋 மோட்டார் வாகனம் காப்பீடு செய்யப் பட்டுள்ள காப்பீடு கழகமோ
அல்லது
மேற்குறிப்பிட்ட மூவரும் கூட்டாக கொடுக்க கடமைப்
பட்டவர் ஆவர்.
இழப்பீட்டு தொகையை
நீதிமன்ற நடவடிக்கையின் மூலமாகவோ அல்லது
மக்கள்
நீதி
மன்றத்தின் (Lok adalath) மூலமாகவோ பெறுவதற்கு சட்டம்
வழிவகை
செய்துள்ளது. மோட்டார் வாகன
விபத்து சம்பந்தப்பட்ட வழக்கில் தாக்கல் செய்யப்படும் இழப்பீடு கோரிக்கைகளை பரிசீலிப்பதற்கான அதிகாரம் இதற்கு
அமைக்கப்பட்ட மோட்டார் விபத்து கோரிக்கை தீர்ப்பாயத்துக்கு (Motor Accidents Claims Tribunal) தான் உள்ளது. அது ஓர் உரிமையியல் நீதிமன்றத்தின் (Civil Court) அதிகாரத்தை பெற்றுள்ளது.
இழப்பீடு உத்தரவுக்கு எதிராக
எதிர்தரப்பினர் மேல்முறையீடு, தீர்ப்பு தேதியில் இருந்து 90 நாட்களுக்குள் செய்யலாம். அவ்வாறு மேல்முறையீடு செய்யும் பொழுது
ரூபாய்
20,000 அல்லது
தீர்ப்பளிக்கப்பட்ட இழப்பீட்டுத் தொகையில் 50%, அதில்
எது
குறைவோ,
வைப்பீடு செய்தால் மட்டுமே மேல்
முறையீடு விசாரணைக்கு ஏற்றுக்கொள்ளப்படும். மேலும்
ஓட்டுநரின் மேல்
தவறே
இல்லாமல் விபத்து நடந்திருந்தாலும் ஒரு
குறிப்பிட்ட இழப்பீட்டுத் தொகை
கொடுக்கப்பட வேண்டும் என்பது
இந்த
சட்டத்தின் சிறப்பம்சம்.
விபத்து ஏற்படுத்திய வாகனம்
அடையாளம் தெரியாத நிலையிலும் அவ்வாறு பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ
மத்திய
அரசு
ஓர்
ஆதரவு
நிதி
ஏற்படுத்தி உள்ளது.
அதன்
மூலம்
ஒரு
தொகையை
இழப்பீடாக பெறலாம். ஒரு
விபத்து நேரிடும் போது
முக்கியமாக கவனிக்கப்பட வேண்டிய அம்சங்கள்:
👋 விபத்தில் சிக்கியவர்களுக்கு
மருத்துவ உதவி.
👋 விபத்தில் சம்பந்தப்பட்ட
வாகனத்தின் எண்.
👋 ஓட்டுநரின் பெயர், வயது, முகவரி
சேகரித்தல்.
👋 காவல்துறையினர்
வரும்
வரை
விபத்து ஏற்படுத்திய வாகனத்தை பாதுகாத்தல்.
👋 காவல்துறையினரை
முதல்
தகவல்
அறிக்கை தயாரிக்க உதவுதல்.
👋 சாட்சிகளை காவல்துறையினரிடம்
அடையாளம் காட்டுதல்.
👋 மருத்துவ அறிக்கை, பிரேத பரிசோதனை அறிக்கை சரியாக
செய்தல்.
இந்தியாவை பொறுத்தவரை இன்று
மோட்டார் வாகன
விபத்து குறித்த வழக்குகள் ஏராளமாக தாக்கல் செய்யப்பட்டும் நிலுவையில் உள்ளன.
அவ்வப்போது மக்கள்
நீதிமன்றம் மூலமும் தீர்வுகள் பெறப்படுகின்றன என்பதும் குறிப்பிடத்தக்கது. மேலும்
இந்தியாவில் கனரக
வாகனங்களை காட்டிலும் இரு
சக்கர
வாகனம்
போன்ற
சிறிய
வாகனங்களை பயன்படுத்துபவர்கள் பலர்
விபத்துகளை அதிக
அளவில்
சந்திக்கிறார்கள். அது
போல
பல
புள்ளி
விவரங்களை பார்க்கும்போது பெண்களை விடவும் ஆண்கள்
பலர்
வாகன
விபத்துகளில் சிக்கிக் கொள்கிறார்கள்.
மேலும்,
👋 குடித்து விட்டோ, போதை வஸ்துகளை பயன்படுத்தி விட்டோ
ஓட்டுபவர்கள்,
👋 அதிவேகத்துடன்
ஓட்டுபவர்கள்,
👋 ஓட்டுநர் உரிமம் இல்லாமல் வயது
வரம்பில்லாமல் ஓட்டுபவர்கள்,
👋 சரிவர பயிற்சி இல்லாமல் ஓட்டுபவர்,
என்று
விபத்துகளுக்கு பல்வேறு காரணிகள் உள்ளன.
National
Insurance Co. Ltd Vs Minor Deepika என்ற வழக்கின் தீர்ப்பு, பெண்கள் பலரால்
வரவேற்கப்பட்டு ஊடகங்களால் பாராட்டப்பட்ட. பொன்
எழுத்துகளால் பொறிக்க வேண்டிய ஒரு
தீர்ப்பு. இந்த
தீர்ப்பினை வழங்கியது முன்னாள் உயர்
நீதிமன்ற நீதியரசி திருமதி பிரபா
ஸ்ரீதேவன் அவர்கள். ஒரு
மைனர்
குழந்தை விபத்தில் தன்
பெற்றோர் இருவரையும் இழந்து
விட்ட
நிலையில் இழப்பீடு கோரி
தாக்கல் செய்யப்பட்ட மனுவில் தந்தையின் வயது,
வருமான
இழப்பு
போன்றவற்றை கணக்கில் கொண்டு
ஒரு
தொகை
நிர்ணயிக்கப்படுகிறது. தாயை
பொறுத்தவரை இல்லத்தரசி என்பதால் இழப்பீடு தொகை
என்று
வரும்போது ஊதியம்
ஈட்டாதவர் என்ற
நிலைப்பாடு.
ஆனால்,
இங்கு
ஒரு
பெண்
அதுவும் ஒரு
குடும்பத் தலைவி
குடும்பத்துக்காக செய்யும் பணிகள்,
வீட்டை
பராமரிப்பது, குழந்தைகளின் கல்விக்கு உதவுதல், குடும்ப கணக்கு
வரவு
செலவு
பாரத்தை ஏற்று
அவள்
செய்யும் பணி
ஈடு
இணை
இல்லாதது என்று
கூறி
அவளின்
பணியை,
பெண்மையை போற்றி
எழுதப்பட்ட தீர்ப்பு அனைவராலும் வரவேற்கப்பட்டது.
மோட்டார் விபத்துகளை பொறுத்தவரை இயற்கையான விபத்துகள் என்பதை
காட்டிலும் செயற்கையாக (man made mistakes) என்று சொல்லக்கூடிய நிகழ்வுகள் தான்
அதிகம்.
மனித
உயிர்
என்பது
மதிப்பிட முடியாத ஒன்று.
மேலும்
ஒரு
விபத்து என்பது
ஒரு
குடும்பத்தின் தலைவனுக்கு ஏற்படும் எனில்
அந்த
தலைவனை
நம்பியுள்ள குடும்ப உறுப்பினர்கள், குறிப்பாக பெண்களுக்கும் குழந்தைகளுக்கும் ஏற்படும் பாதிப்பு ஈடு
செய்ய
முடியாத ஒன்று
என்பதை
அனைவரும் கவனத்தில் கொள்ள
வேண்டும். வாகனம்
ஓட்டும் ஒவ்வொருவரும் ஒரு
கடமை
உணர்வுடன் செயல்பட்டால் விபத்துகள் பெருமளவில் தவிர்க்கப்படும்.
ஒரு
குடும்பத் தலைவி
குடும்பத்துக்காக செய்யும் பணிகள்,
வீட்டை
பராமரிப்பது, குழந்தைகளின் கல்விக்கு உதவுதல், குடும்ப கணக்கு
வரவு
செலவு
பாரத்தை ஏற்று
அவள்
செய்யும் பணி
ஈடு
இணை
இல்லாதது என்று
கூறி
அவளின்
பணியை,
பெண்மையை போற்றி
எழுதப்
பட்ட
தீர்ப்பு அனைவராலும் வரவேற்கப்பட்டது.
விபத்து ஏற்படுத்திய வாகனம்
அடையாளம் தெரியாத நிலையிலும் அவ்வாறு பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ
மத்திய
அரசு
ஓர்
ஆதரவு
நிதி
ஏற்படுத்தி உள்ளது.
அதன்
மூலம்
ஒரு
தொகையை
இழப்பீடாக பெறலாம்.
விபத்தை தடுப்போம்.. வாழ்வை
நேசிப்போம்!
நன்றி : கும்குமம் வார இதழ் - 30.12.2014
No comments:
Post a Comment