நமது நாட்டில் உள்ள பொதுமக்களுக்கு சேவை செய்வதற்கு அதிக வாய்ப்புள்ள துறை காவல்துறைதான். இதை யாரும் மறுக்க முடியாது. ஆனால், அதனை சில அதிகாரிகள்தான் மிகச் சரியாக பயன்படுத்துகிறார்கள். மக்களிடம் பாராட்டும் பெறுகிறார்கள். அவர்களில் மதுரை மாவட்ட காவல்துறையினரும் ஒன்று.
பொது மக்களுக்கு ஆன்லைன் மூலமாகவே பல சேவைகளை http://www.maduraicitypolice.com/ என்ற இணையதளத்தின் மூலம் மதுரை காவல்துறை வெற்றிகரமாக செயல்படுத்தி வருகிறது.
இந்த இணையதளத்தின் மூலமாக, பொதுமக்கள் தங்களது புகார் மனுக்களை ஆன்லைன் மூலமாக அனுப்பலாம். அனுப்பிய புகாரின் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது? என்ற தகவலையும் மேற்கண்ட இணையதளம் மூலம் தெரிந்து கொள்ளலாம். மேலும் பொது மக்களுக்கு வேண்டிய Arms License, Browsing Center License, Gymnasium License & Video License அளிப்பதற்கும், காணாமல் போனவர்களைப் பற்றிய தகவல்களை பரப்புவதற்கும், அவர்களை கண்டுபிடிப்பதற்கும் போக்குவரத்துத் துறை சமபந்தமான குற்றம் செய்தவர்கள் மீது காவல்துறையினர் மூலம் எடுக்கப்பட்ட நடவடிக்கைகளை தெரிந்து கொள்வதற்காகவும், பாஸ்போர்ட் வெரிபிகேஷன் சம்பந்தப்பட்ட தகவல்களை தெரிந்து கொள்வதற்காகவும் இந்த இணையதளம் பொது மக்களுக்கு பேருதவியாக இருந்து வருகிறது.
மதுரை மாவட்டத்திலுள்ள ஒவ்வொரு காவல்துறை பிரிவுகளிலும் மற்றும் ஒவ்வொரு காவல் நிலையத்திலும் பணியாற்றி வருகின்ற காவல்துறை அதிகாரிகளின் பெயர்கள் மற்றும் அவர்களது அலுவலக தொலபேசி எண்களை, செல்போன் எண்களை இந்த இணையதளம் மூலமாக நாம் தெரிந்து கொள்ளலாம்.
தற்போது மதுரை காவல்துறை ஆணையராக திரு மகேஷ்குமார் அகர்வால் அவர்கள் மிகச் சிறப்பாக பணியாற்றி வருகிறார்கள். அவர்களது அலுவலக முகவரி
Commissioner of Police
Alagarkovil Road,K.Pudur,
Madurai - 625 002.
Facebook: commissioner of police Madurai city
Whatsapp: 8300021100
Email : copmctn@gmail.com
பொதுமக்கள் அனைவரும் இந்த சேவையை பயன்படுத்திக் கொள்ள வேண்டுகிறேன்.
******************************************************************அன்புடன் செல்வம் பழனிச்சாமி
No comments:
Post a Comment