நம்ம நாட்டுல காவல்துறை மட்டும் ஒழுங்கா இருந்துச்சின்னு வச்சிக்கோங்க, நிம்மதியா இருக்கலாங்க. வேலியே பயிர மேஞ்ச கதயா, நம்ம நாட்டுல காவல்துறை நடந்துக்கிட்டு இருக்கு. பணக்காரங்களும் ரவுடிகளும் இவுங்கள வெலைக்கி வாங்கிடுறாங்க. தப்பு செஞ்சவுங்க மேல ஒரு புகார கொடுக்க போலீஸ் ஸ்டேஷன் போனா, நம்ம மேல எப்பையார போடுறாங்க. சட்டத்த காக்க வேண்டிய காவல்துறைய சேந்த அதிகாரிங்களே தப்பு செஞ்சா நாடு எப்டி வெளங்கும்? சொல்லுங்க. இத உச்சநீதிமன்றமும் ஒணர்ந்துதான் ஒரு காவல் அதிகாரி தவறு செய்தால் அவருக்கு மிக கடுமையான தண்டனை கொடுக்க வேண்டும், ஏனெனில் சட்டத்தை பாதுகாக்க வேண்டியவர்களே அந்த தவறை செய்வது ஏற்க முடியாது!ன்னு இந்த தீர்ப்ப வழங்கியிருக்காங்க.
வாங்க தீர்ப்ப பார்க்கலாம்.
***************************************************** அன்புடன் செல்வம் பழனிச்சாமி
No comments:
Post a Comment