வெள்ளைபடுதல், சிறுநீர் எரிச்சல் தீர ஆவாரையின் பூ இதழ்களைச் எடுத்து நிழலில் உலர்த்தி, தூள் செய்து, ½ கிராம் அளவு, 2 கிராம் வெண்ணெயில் குழைத்துத் தொடர்ந்து சாப்பிட்டு வர குணமாகும்.
ஆவாரை பூக்களை பசைபோல அரைத்து , புளித்த மோரில் கலக்கி. தொடர்ந்து 2 மாதங்கள் வரை குடித்து வர நீரழிவு நோய் கட்டுப்படும்.
மாதவிடாயின்போது ஏற்படும் அதிக இரத்தப் போக்குக் கட்டுப்பட 20 கிராம் ஆவாரைப் பட்டையைப் பொடி செய்து, ஒரு லிட்டர் நீரில் இட்டு,காய்ச்சி 200 மி. ஆக சுண்டக் காய்ச்சி, 50மி.லி . அளவில் காலை, மாலை குடித்துவர சரியாகும். பசுமையான அல்லது உலர்ந்த பூக்களுடன், சமஅளவு பச்சைப்பயறு சேர்த்து அரைத்து, வெந்நீர் கலந்து பசையாக்கி, உடம்பில் தேய்த்து ஊறவைத்து, சிறிது நேரம் கழித்துக் குளித்தால் . தோல் அரிப்பு மற்றும் நமைச்சல் குணமாகும்.
ஆவாரையின் வேர், இலை, பட்டை, பூ, காய் இவற்றைச் சம அளவு எடுத்து , காயவைத்து, இடித்துத் தூளாக்கி, 10 கிராம் வீதம், காலை, மதியம், மாலை வெந்நீருடன் குடித்து வர . உடலில் உள்ள அனைத்து விதமான நோய்களையும் போக்கக்கூடிய அருமருந்தாகும். இம்மருந்தால்
சர்க்க்கரைவியாதி ,அதிக சிறுநீர் போதல் ,மிகுதாகம், மிகுபசி, உடல்மெலிவு, பலக்குறைவு ஆகியவை தீரும். உடல் பலம் பெறும். 90 நாட்கள் வரை தொடர்ந்து சாப்பிட்டு வர குணமாகும். இதற்க்கு ஆவரையின் பஞ்சாக சூரணம் என்ற பெயராகும்.
சர்க்கரை நோயால் ஏற்படும் குழிப்புண்கள் மறைய ஆவாரம் இலையை அரைத்து இதன் விழுதை சிறிது நல்லெண்ணை விட்டு சட்டியில் இட்டு வதக்கி அதை சுத்தமான காட்டனில் வைத்து கட்டிவிடவேண்டும்.
இதுபோல் ஒருநால் விட்டு ஒருநால் கட்டிவரகுழிபுங்கள் ஆறும். ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்தும்.
ஆவாரம்பட்டையை நீரில் இட்டுக் காய்ச்சிக் காலையில் வாய் கொப்பளித்தால் வாய்ப்புண்கள் எவ்விதமானதாயினும் விரைவில் ஆறிவிடும். ஈறுகள் ,பற்கள் கெட்டிப்படும். காய்ச்சிய நீரை குடிப்பதால் சிறுநீர்த்தாரை எரிச்சல் அடங்கும். ரத்தம் கெட்டிப்படுவது தவிர்க்கப்பட்டு இதய அடைப்புகள் வராமல் தடுக்கப்படும்.
ஆவாரை விதையைக் காய வைத்து பொடி செய்து , நீர்விட்டுக் குழைத்து கண் இமைகளைச் சுற்றிப் பற்றிட கண்களின் சிவந்த நிறம் நீங்கும். அத்துடன் கண் எரிச்சல், நீர் வடிதல் ஆகிய பிரச்னைகளும் குணமாகும்.
ஆவாரம் பூவை உலர்த்திப் பொடி செய்து தினமும் காலையில் வெறும் வயிற்றில் 10 கிராம் அளவு சாப்பிட்டு வர ரத்தசோகை குணமாகும். புதிய ரத்தம் உற்பத்தி ஆகும். ஆவாரம் இலையைக் காய வைத்து மாலை வேளையில் வீட்டில் புகை மூட்ட இரவில் வரும் பூச்சிகள், கொசுக்கள் வீட்டை விட்டு விலகிப் போகும்.
ஆவாரம் பூவை உலர்த்திப் பொடி செய்து வைத்துக் கொண்டு சம அளவு பாசிப்பயறு மாவு மற்றும் சீயக்காய் சேர்த்து தலைக்குத் தேய்த்து குளித்து வருவதால் தலைப்பொடுகு, அரிப்பு, முடி உதிர்தல் ஆகியன குணமாகும். கூந்தல் செழுமையாகவும், கருமையாகவும் வளரும்.
ஆவாரையின் வேரைக் காயவைத்துப் பொடி செய்து தினமும் 10 கிராம் அளவுக்கு நீரில் கலந்து குடிக்க எவ்வகையாக காய்ச்சலாக இருந்தாலும் குணமாகும். ஆவாரம் பூவின் சூரணத்தை இரண்டு வேளை பெண்கள் வேளைக்குப் 10 கிராம் வீதம் சாப்பிட்டு வர கர்ப்பப்பைக் கட்டிகள் கரையும்.
ஆவாரையைத் 500 மி.லி தண்ணீரில் காய்ச்சி குடித்து வர இரண்டாம் நிலைச் சர்க்கரை அளவு கட்டுப்படும். ஆண்மை பெருகும். விந்தணுக்களின் எண்ணிக்கையும், அதன் பயணத்தன்மையும்அதிகரிக்கும். மது குடித்ததால் ஏற்பட்ட ஈரல் நோய்கள் குணமாகும். மலச்சிக்கல் கட்டுப்படும். சிறுநீர்த்தாரைத் தொற்றுகள் சரியாகும்..
கோரைக் கிழங்கு-250 கிராம், உலர்ந்த ஆவாரம் பூ - 100 கிராம், பூலான்கிழங்கு - 100 கிராம் ஆகியவற்றை அரைத்துக். தினமும் இந்தப் பவுடரை தேய்த்துக் குளிக்கும்போது தேவையில்லாத முடி உதிர்ந்து சருமம் பளிச்சென மின்னும். (நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும்.) ஆவாரம் பூ-100 கிராம், வெந்தயம்-100 கிராம், பயத்தம்பருப்பு - அரை கிலோ ஆகியவற்றை கலந்து அரைத்து. இந்தப் பவுடரை வெந்நீரில் கரைத்து வாரம் இருமுறை தலைக்கு அலசி வர, முடி நன்றாக கருப்பாக வளரும்.
ஆவாரம் பூ, செம்பருத்தி பூ, தேங்காய் பால் ஒரு கப் , வாரம் ஒரு தடவை அரைத்துத் தலைக்குக் குளித்து வர . உடல் குளிர்ச்சியாகி, முடி கொட்டுவது உடனடியாக நின்று முடி வளரத் தொடங்கும்.
ஒரு பிடி ஆவாரம் பூவை தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து வடிகட்டி,தலைக்கு குளிக்கும்போது கடைசியில் இந்த தண்ணீரில் ஒரு எலுமிச்சம்பழத்தை பிழிந்து விட்டு தலையில் தடவி வந்தால் உடம்பு பொன்நிறமாவதுடன், புத்துணர்ச்சியும் கிடைக்கும்.
ஆவாரம் பூ, கொழுந்து, பட்டை, வேர் இவற்றை சம அளவு எடுத்து நிழலில் உலர்த்தி இடித்து மெல்லிய துணியால் சலித்துக் கொண்டு . இந்தப் பொடியுடன் பசு நெய் கலந்து சூரணமாக செய்து 48 நாட்கள் தொடர்ந்து சாப்பிட்டு வர உள் மூலம் குணமாகும். ஆவாரம் பட்டையை நீர் விட்டு காய்ச்சி, கஷாயம் வைத்து, வாயைக் கொப்பளித்தால் வாய் துர்நாற்றம் போகும்.
சிலருக்குப் பரம்பரையாக வழுக்கை வந்துகொண்டே இருக்கும். இப்படிப்பட்டவர்கள், தலையில் முடி கொட்ட ஆரம்பித்ததுமே.. 100 கிராம் ஆவாரம் பூவை அரைத்து. இதை அடுப்பில் வைத்து நீர் பதம் போகும் வரை காய்ச்சி . இதனுடன் கால் கிலோ தேங்காய் எண்ணெய் கலந்து இதை முன் நெற்றியில் தினமும் நன்றாகத் தடவி வந்தால், முடி உதிர்வது ஒரே மாதத்தில் நிற்பதோடு, வழுக்கை ஏற்படாமலும் தடுக்கும்.
ஒரு கைப்பிடி அளவு ஆவரம்பூவை எடுத்து, அதில் 200 மில்லி தண்ணீர் ஊற்றி கொதிக்கவைத்து அதை 100 மில்லியாக சுண்டகாய்சி , இதனை தினமும் குடித்து வர சர்க்கரைவியாதி,அடிக்கடி சிறுநீர் கழிப்பது,பாத எரிச்சல்,உடல் வறட்சி,உடலில் உண்டாகும் வேர்வை நாற்றம், உடல் உஷ்ணம் ஆகியவை குணமாகும்.
ஆவாரை பூ ”ஆவாரை பூத்திருக்க சாவாரைக் கண்டதுண்டா” என்றொரு பழமொழி உண்டு. பூத்திருந்தாலே போதுமாம். அதன் காற்று பட்டாலே ஆயுள் அதிகம்.
வெயிலில் வெளியே செல்லும்போது ஆவாரம் இலையை தலையில் வைத்து கட்டி சென்றால் உஷ்ணம் தாக்காது. கொத்துக் கொத்தாக முடி கொட்டுவதை தடுக்கும்.
ஆவாரம் காய கற்ப மூலிகையாகும். நீரிழிவு நோயாளிக்கு இது மிகவும் சிறந்த மூலிகை
மேலும் தெரிந்துகொள்ள: 94420 60556,80988 17833
நன்றி : முகநூல் - கொல்லிமலை மூலிகைகள்
No comments:
Post a Comment