இனி பிஎப் கணக்கை ஒவ்வொரு நிறுவனத்திற்கு மாற்றவேண்டிய அவசியம் இல்லை.. எல்லாமே ஆட்டோமேடிக்..!
ஈபிஎப்ஓ அமைப்பு வெளியிட்ட அறிக்கையில், இனி ஒரு ஊழியர் ஒரு நிறுவனத்தை விட்டுப் புதிதாக வேறு ஒரு நிறுவன பணியில் சேர்ந்தால் பிஎப் கணக்கை புதிய நிறுவனத்திற்கு
மாற்ற வேண்டிய அவசியமில்லை, ஈபிஎப்ஓ அமைப்புப் புதிதாக நடைமுறைப்படுத்தியுள்ள மென்பொருள் மூலம் ஆட்டோமேடிங் முறையில் புதிய நிறுவனத்திற்குப் பிஎப் கணக்கு மாறிவிடும்.
ஒரு ஊழியர் புதிதாக ஒரு நிறுவனத்தில்
சேர்ந்த பின்பு அந்த நிறுவனம் அவருக்கான பிஎப் கணக்கை யுஏஎன் எண்ணுடன் துவங்கும்போது, தத்தம் ஊழியரின் அனைத்து பிஎப் கணக்கும் புதிதாகக் கணக்கை திறந்திருக்கும் நிறுவனத்தின் கட்டுப்பாடிற்கு
வரும் வகையில் யுஏஎன் மூலம் நடவடிக்கை எடுக்க மென்பொருள் உருவாக்கப்பட்டுள்ளது.
இப்படி ஆட்டோ டிரான்ஸ்பர் செய்ய அடிப்படையாகச்
சில விதிமுறைகளை
வைத்துள்ளது. இதனை அடிப்படையாகக் கொண்டே இந்தப் பரிமாற்றங்கள் நடக்கும் எனவும் ஈபிஎப்ஓ அமைப்பு தெரிவித்துள்ளது.
ஆட்டோ டிரான்ஸ்பர்
1) புதிதாக வேலையில் சேர்ந்துள்ள நிறுவனம் தனது ஊழியரின் யுஏஎன் எண் மற்றும் ஆதார் எண்ணை பதிவேற்றம் செய்யும்போது, அதனை ஒத்துப்போகும் யுஏஎன் இணைப்பில் உள்ள கணக்குகள் புதிய நிறுவனத்தின் கட்டுப்பாட்டிற்கு ஆட்டோமோடிக்
முறையில் மாற்றப்படும்.
இணைப்பு மற்றும் உறுதி
2) யுஏஎன் உடன் ஆதார் இணைக்கப்பட்டு உறுதி (verified) செய்யப்பட்டு இருந்தாலே ஆட்டோமோடிக்
பரிமாற்றத்திற்குத் தகுதி பெறும்
முழுமையான தகவல்
3) ஒரு ஊழியர் பணியாற்றிய முன்னாள் நிறுவனம், அந்த ஊழியர் வேலையில் சேர்ந்த தேதி, வெளியேறிய தேதி, வெளியேறியதற்கான காரணம் ஆகியவற்றைப் பதிவு செய்ய வேண்டும்.
மொபைல் எண்
4) ஊழியரின் யுஏஎன் எண் செயல்பாட்டிலும், மொபைல் எண் ஆகியவை கண்டிப்பாக இருக்க வேண்டும்.
எஸ்எம்எஸ் மற்றும் ஈமெயில்
5) ஆட்டோ டிரான்ஸ்பர்
முறையிலான சேவை ஒரு ஊழியர்களுக்கு அளிக்கப்பட்டால்,
அதற்கான குறுஞ்செய்தி
மற்றும் மின்னஞ்சல் அந்த ஊழியருக்கு வரும்.
இணைய வழி
6) ஒரு ஊழியர் விரும்பினால் பிஎப் கணக்குகளின்
ஆட்டோ டிரான்ஸ்பரை
நிறுத்த முடியும். இதனை இணையம் வாயிலாக ஈபிஎப்ஓ தளத்தில் ஆன்லைன் சர்விசஸ் பிரிவின் கீழ் "track claim
status" கீழ் உள்ள "stop auto
initiated claim cases" பயன்படுத்துவதன் மூலம் நிறுத்த முடியும்.
10 நாட்கள்
ஆட்டோ டிரான்ஸ்பர்
குறித்த எஸ்எம்எஸ் வந்த 10 நாட்களுக்குள் ஒரு ஊழியர் நேரடியாக ஈபிஎப்ஓ அலுவலகத்திற்குச் சென்றும் இதனைச் செய்யலாம்.
Written By: Prasanna VK
Thanks to : One India Tamil – 21.11.2017
No comments:
Post a Comment