அபமார்க்கி, காஞ்சரி, சரமஞ்சரி, சேகரீகம், நாயரஞ்சி, மாமுனி செந்நாயுருவி ,படருருக்கி, கல்லுருவி என வேறு பெயர்களும் நாயுருவிக்கு உண்டு.
சிவப்பு நிறம், வெள்ளை நிறம் என இருவகை உண்டு.
இது, பிரசவித்த தாய்மார்களின் வயிற்று அழுக்கினை வெளியேற்றப் பயன்படும். நாயுருவி வேரை காயவைத்து, தூள் செய்து இந்தத் தூளால் பல் துலக்கி வரலாம் அல்லது பச்சை வேரை சேகரித்து, நீரில் கழுவி சுத்தம் செய்து பல் துலக்கி வர பற்கள் உறுதியடையும்.
நாயுருவி வேர்த்தூள் ½ முதல் 1 கிராம் வரை வெந்நீரில் சாப்பிட்டு வர உடல் பலமடையும். நாயுருவி வேர் அல்லது இலையை அரைத்து பசையாக்கி, உடலில் வர பூச கொப்புளம், சிரங்கு குணமாகும்.
பற்களில் தங்கியுள்ள நுண்கிருமிகளை நீக்கி பல்சொத்தை, பற்கூச்சம், ஈறுவலி, ஈறுவீக்கம் வராமல் தடுத்து பற்களைப் பளிச்சென்ற வெண்மை நிறத்தைக் கொடுப்பது நாயுருவி மூலிகைக்கு உண்டு. நாட்பட்ட மலர்ச்சிக்கல் உடையவர்கள் நாயுருவி இலைகளை அரை லிட்டர் நீரில் கொதிக்க வைத்து காலையில் குடித்து வர பேதியாகும்.
துத்திக் கீரை வதக்கலில் நாயுருவி விதைச் சூரணம் 20 கிராம் கலந்து உணவில் சேர்துண்ண மூலம் அனைத்தும் தீரும்.
நாயுருவி வேரால் பல் துலக்கப் பல் தூய்மையாகி முக வசீகரம் உண்டாகும் மனோசக்தி அதிகமாகும், நினைத்தவை நடக்கும், ஆயுள் மிகும், காப்பி, டீ, புகை, தவிர்க்க வேண்டும். நாயுருவிச் செடியின் இலையையும், காராமணிப் பயிரையும் சம அளவு எடுத்து மைய அரைத்து நீர்க்கட்டு உள்ள இடத்தில தொப்புள் மீது பற்றிட நீர் கட்டு நீங்கி குணமாகும். நாயுருவிச்செடியின் இலையின் சாறு எடுத்து இரண்டு சொட்டு காதில் விட்டால் காதில் சீழ் வடிதல் நிற்கும். நாயுருவி இலைச்சாற்றை 30 மி.லி. அளவில் தினமும் காலை வெறும் வயிற்றில் சாப்பிட்டு வர சிறு நீரக நோய்கள் அனைத்தும் தீரும்.
நாயுருவி இலையை 30கிராம் அத்துடன் பத்து மிளகு, சிறிது வெல்லம் சேர்த்து அரைத்துச் சாப்பிட, அனைத்து விதமான காய்ச்சல்களும் விலகும். நாயுருவி இலைச்சாறு 500 மி.லி . எடுத்துசட்டியில் இட்டு காய்ச்சி சுண்ட வைத்து, 100மி.லி நல்லெண்ணெய் சேர்த்துக் காய்ச்சி, பின்னர் இரண்டு சின்ன வெங்காயத்தையும் நறுக்கிச் சேர்த்து நன்கு வதக்கி, இரண்டு நாட்டுக் கோழி முட்டையை உடைத்துச் சேர்த்து நன்கு கிளறி, சாப்பிட வர , மூலத்தில் உண்டாகும் ரத்தக் கழிச்சலானது உடனே தீரும்.
நாயுருவி இலையை 100 கிராம் எடுத்து, அதை 500 மி.லி. தேங்காய் எண்ணெயுடன் சேர்த்துக் காய்ச்சி, ஆற வைத்து, எண்ணெயில் உள்ள இலைகளை அரைத்து எண்ணெயிலேயே கலந்து விட்டு. இந்த எண்ணெயைப் பூசி வர, புண்கள், சீழ்வடியும் புண்கள், வெட்டுக் காயங்கள் போன்றவை உடனே ஆறும்.
நாயுருவி வேர் தூளை, தினமும் அரை டம்ளர் பசும்பாலில் கலந்து சாப்பிட்டு வர, மன நோய்கள், மன பயம், மன உளைச்சல், தூக்க மின்மை, படபடப்பு, சித்தபிரம்மை போன்ற குறைபாடுகள் முற்றிலுமாய் விலகும். நாயுருவி வேர் மிக வசித்துவம் தரும்.
20 கிராம் நாயுருவி விதையை தூள் செய்து, துத்திக் கீரையில் ½ லிட்டர் நீரில் கொதிக்க வைத்து தினமும் காலை ஒரு வேளை சாப்பிட்டு வர மூலம் குணம் பெறும்.
இதன் இலையை அரைத்து நெல்லிக்காய் அளவு எருமைத் தயிரில் காலை வெறும் வயிற்றில் சாப்பிட்டு வர இரத்த மூலம் குணமாகும். இதன் விதையை சோருபோல் சமைத்து சாப்பிட ஒரு வாரத்திற்கு பசி எடுக்காது. மீண்டும் பசி எடுக்க மிளகு, சீரகம் வறுத்து 250 மி.லி நீரில் காய்ச்சி குடிக்க பசி உண்டாகும்.
நாயிருவி இலையை அதிகாலையில் பனித்துளிபட்டுள்ள இலையை பறித்து அங்கயே கையால் கசக்கிப் பிழிந்த சாற்றை தேமல், படை, சொறிகளுக்கு பூசினால் குணமாகும். இதன் வேர்ப்பட்டை 100 கிராம், மிளகு 100 கிராம் எடுத்து சூரணமாக செய்து ஒரு கிராம் எடுத்து தேனில் கலந்து காலை, மாலை சாப்பிட்டு வர இருமல் குணமாகும்.
இது ஆன்மீகத்தில் முக்கியத்துவம் உடையது. ஓமம் வளர்க்கும்போது காய்ந்த நாயுருவியை அக்னியில் சேர்ப்பது வழக்கம். நவக்கிரங்களில் புதன் பகவானுக்கு உரியதாகவும், தான் இருக்கும் இடத்தில் லட்சுமி கடாட்ச்த்தை உண்டாக்கும் என்றும் நாயுருவியை ஆன்மீகத்தில் பயன்படுத்துவர்.
நாயுருவியை காயவைத்து எரித்து சாம்பலாக்கி தினமும் காலை, மாலை 500 மி.லி அல்லது 2 கிராம் வரை சாப்பிட்டு வர ஆஸ்துமா மார்பக நோய்கள் குணமாகும். இளந்தய்மார்கள் நாயுருவியை பயன்படுத்தும்போது தேவையான பால் சுரப்பு ஏற்படும்.கருச்சிதைவு உண்டாகும் அபாயம் இருப்பதால் கர்ப்பிணிகள் நாயுருவியைக் தவிர்க்க வேண்டும்.
இதன் இலையை மென்று முழுங்கி விட்டு சிறிது தாடையில் அடக்கி கொண்டு கண்ணாடிகளை கடித்து துப்பலாம் வாய் அறுக்காது.
குறிப்பு:- சாறு பல்லில் அனைத்து இடங்களிலும் பட வேண்டும். தவறாக செய்தால் வாய் கிழிந்துவிடும். கண்ணாடிகளை விழுங்கி விட கூடாது.
இதில் இன்னொரு விந்தையான குணம் நாயுரருவிக்கு உண்டு. இதை சித்தர்கள் ரகசிய முறையாக தொடர்ந்து உபயோகித்து வந்தார்கள். நாயுருவி கதிரில் இருக்கும் அரிசியை பாலில் அரைத்து உட்கொண்டால் பசியே எடுக்காது. எத்தனை நாட்கள் வேண்டுமானாலும், உணவுக்காக நாட்டிற்கு வராமல் காட்டிலேயே மனித கண்ணில் படாமல் இருக்க இயலும்.
நாயுருவியின் சமூலத்தை 25 செடிகளை நிழலில் காயவைத்து எரித்து சாம்பலாக்கி, சாம்பலின் ஒரு படிக்கு 8 படி நீர்விட்டு கரைத்து தெளிவெடுத்து சட்டியில் இட்டு காய்ச்ச உப்பு கிடைக்கும்.இது சர்வ ரோக நோய்களையும் போக்கக்கூடிய ஒரே மருந்தாக பயன்படுகிறது. குறிப்பாக புற்றுநோய், எய்ட்ஸ், சர்க்கரைவியாதி, மூலம், அல்சர்,தைராய்டு, உடல் பருமன்,மேலும் பலவிதமான நோய்களை குணப்படுத்தும் தன்மை கொண்டது.
வேம்பு, ஆவாரை, பொன்ஆவாரை,சீந்தில்,கோவை,கோரைக்கிழங்கு,
குப்பைமேனி,வில்வம், தும்பை, துளசி, விராலி,செருப்படை, அம்மான் பச்சரிசி, சிவனார் வேம்பு,பெருமருந்து ஆகிய மூலிகைளிலும் உப்பு எடுத்து பயன்படுத்தலாம்.இம்மூலிகைளில் எடுக்கப்பட்ட இந்த உப்புகள் நோய்களை விரைவில் போக்கக்கூடிய வல்லமை உடையது. இந்த உப்புக்கள் சர்வரோக சகல நோய்களையும் போக்கக்கூடிய அருமருந்தாகும். பத்தியமில்லாத மருந்துகளாகும்.இவை ஓலைசுவடிகளிலிருந்து சித்தர்களின் மறக்கப்பட்ட உண்மை ரகசியமாகும்.
மேலும் தெரிந்துகொள்ள: 94420 60556,80988 17833
No comments:
Post a Comment