disalbe Right click

Wednesday, November 15, 2017

தொழில் தொடங்க ஆசையா?

நமது நாட்டில் உள்ள இளைஞர்கள் பெரும்பாலும் வேலைக்குச் சென்று சம்பாதிப்பதையே விரும்புகிறார்கள். காரணம் என்னவென்றால், நிரந்தரமான ஊதியம். நிம்மதியான வாழ்க்கை. ரிஸ்க் எடுக்க விரும்புவதில்லை. 
Image result for msme
அந்த ஊதியம் போதுமானதாக இருக்குமா? என்றால், இல்லை என்பதுதான் பதிலாக இருக்கும். இருந்தாலும் அந்த குறைவான வருமானத்திற்குள்ளேயே வாழப் பழகிக் கொள்கிறார்கள். தங்களது ஆசைகளை கட்டுப்படுத்திக் கொள்கிறார்கள். தங்கள் தேவைகளை சுருக்கிக் கொள்கிறார்கள். 
Image result for msme
இவர்களுக்கு மத்தியில், அதிகம் சம்பாதிக்க வேண்டும், பத்து பேர்களுக்கு வேலை கொடுக்க வேண்டும்! என்று எண்ணும் இளைஞர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். இந்த மாதிரி எண்ணம் கொண்டவர்களுக்கு உதவுவதற்காக நமது இந்திய அரசு ஒரு நிறுவனத்தை நடத்தி வருகிறது. இதன் மூலம் சுய தொழில் தொடங்க முன் வருபவர்களுக்கும்,  ஏற்கனவே சுய தொழில் நடத்தி வருபவர்களுக்கும் தேவையான வழிகாட்டுதல்களையும், பயிற்சிகளையும், இலவசமாக ஆலோசணைகளையும் வழங்கி வருகிறது.
Image result for msme
இந்த நிறுவனத்தின் பெயர் Micro, Small and Medium Enterprises (MSME) ஆகும்.  இந்த நிறுவனத்தின் இணையதளம் http://www.msme.gov.in/ ஆகும்.  நமது தமிழ்நாட்டில் இதன் தலைமை அலுவலகம் சென்னையிலுள்ள கிண்டியில் இயங்கி வருகிறது.
மத்திய அரசின் விதிகளின்படி, தகுதியுள்ளவர்கள் மட்டுமே இந்த நிறுவனத்தின் மூலம் பயிற்சிகளையும், ஆலோசனைகளையும் பெற முடியும்.
மேலும் விபரங்களை அறிந்து கொள்ள http://www.msme.gov.in/ என்ற இணையதளத்திற்குச் செல்லுங்கள்.
************************************************ அன்புடன் செல்வம் பழனிச்சாமி 

No comments:

Post a Comment