மருத்துவகழிவு: ஸ்கேன்
சென்டருக்கு அபராதம்
ஓசூர்:
ஓசூரில், குப்பை
கழிவுகளுடன் சேர்த்து, மருத்துவ கழிவுகளை கொட்டிய, ஸ்கேன்
சென்டருக்கு, ஒரு
லட்சம்
ரூபாய்
அபராதம் விதிக்கப்பட்டது. கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூரில், தேன்கனிக்கோட்டை சாலையில், பி.எம்.கே., ஸ்கேன்
சென்டர் உள்ளது.
இங்கு
சேகரமாகும் மருத்துவ கழிவுகளை, மாசு
கட்டுப்பாட்டு வாரியம் அனுமதி
பெற்ற,
நிறுவனத்திடம் தான்
வழங்க
வேண்டும். ஆனால்,
நகராட்சி குப்பையுடன், மருத்துவ கழிவுகளை கொட்டியதால், கடந்த
ஆண்டு,
5,000 ரூபாய்
அபராதம் விதிக்கப்பட்டது. இந்நிலையில் நகராட்சி துப்புரவு பணியாளர்கள், ஸ்கேன்
சென்டரில் சேர்ந்த குப்பையை நேற்று
அள்ளினர். அப்போது, மருத்துவக் கழிவும் இருந்தது. இதையடுத்து, நகராட்சி கமிஷனர் செந்தில்முருகன் உத்தரவின்படி, ஒரு
லட்சம்
ரூபாய்
அபராதம் விதிக்கப்பட்டது. எச்சரிக்கை நோட்டீஸ் வழங்கவும், நகராட்சி முடிவு
செய்துள்ளது.
நன்றி
: தினமலர் நாளிதழ் - 25.11.2017
No comments:
Post a Comment