disalbe Right click

Tuesday, November 14, 2017

மோசடி பத்திரப்பதிவு - பதிவுத்துறைத்தலைவர் உத்தரவு

மோசடி பத்திரப்பதிவு புகார் : சார் பதிவாளர்களுக்கு உத்தரவு
சென்னை: 'மோசடி பத்திரப்பதிவு நடந்ததாக புகார் வந்தால், சார் பதிவாளர்கள் விசாரித்து, நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, பதிவுத்துறை தலைவர், குமரகுருபரன் அறிவுறுத்தியுள்ளார்.
தமிழகத்தில், அரசியல் பலம், ஆள் பலம் மிக்கவர்கள், சாதாரண மக்களை மிரட்டி, சொத்து களை வாங்குவதும், ஆள்மாறாட்டம் மூலமாக, பத்திரப்பதிவு செய்வதும் தொடர்கிறது. இதுபோன்ற மோசடி பத்திரங்களை, சார் பதிவாளர்கள் பதிவு செய்தால், அவர்கள் மீது, கிரிமினல் வழக்கு பதிவு செய்ய, உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.அப்போது, பதிவுத்துறை தலைவராக இருந்த, தர்மேந்திர பிரதாப் யாதவ், இதற்கான சுற்றறிக்கை பிறப்பித்தார். அதை, நீதிமன்றம் ரத்து செய்து விட்டது. ஆனாலும், மோசடி பத்திரப்பதிவு நடக்காமல் இருக்க, புதிய வழிகாட்டி நெறிமுறைகளை, பதிவுத்துறை தலைவர் அறிவித்தார். அதில், குழப்பம் ஏற்பட்டது.
இந்நிலையில், மோசடி பத்திரப்பதிவு குறித்து, பதிவுத்துறை தலைவர், குமரகுருபரன், சார் பதிவாளர் மற்றும் மாவட்ட பதிவாளர்களுக்கு, சில உத்தரவுகளை பிறப்பித்துஉள்ளார்.
அதன் விபரம்:
பதிவு சட்டத்தின், 83வது பிரிவில் அளிக்கப்பட்ட அதிகாரத்தின் அடிப்படையில், மோசடி பத்திரப்பதிவுகள் குறித்து புகார் வந்தால், ஆரம்ப நிலையிலேயே, சார் பதிவாளர்கள் விசாரிக்க வேண்டும். அதில், சார் பதிவாளருக்கும் தொடர்பு இருப்பதாக, பாதிக்கப்பட்ட உரிமையாளர்கள் புகார் அளித்தால், அதை, மாவட்ட பதிவாளர்கள் விசாரிக்கலாம்.
இதுபோன்ற புகார்கள் குறித்தும், அதில் நடந்த தவறுகள் குறித்தும், மண்டல டி..ஜி.,களுக்கு, மாவட்ட பதிவாளர்கள் தெரிவிக்க வேண்டும். இப்புகார்களை விசாரிக்கும் போது, மோசடியில் சார் பதிவாளர்களுக்கு பங்கு இருப்பது உறுதியானால், அவர்கள் மீது, டி..ஜி.,க்கள், சட்ட நடவடிக்கை எடுக்கலாம்.
நன்றி : தினமலர் நாளிதழ் - 15.11.2017 
உத்தரவின் நகல் கீழே இணைக்கப்பட்டுள்ளது






No comments:

Post a Comment