disalbe Right click

Thursday, November 2, 2017

துத்தி

உடலில் உள்ள தசைகளுக்கு பலத்தை அளிப்பதால் இதற்கு 'அதிபலா' என்ற வேறு பெயரும் உண்டு
மூலநோய்க்கு மிகச் சிறந்த மருந்து துத்திஇலை , இதன் இலையை வதக்கிக் கட்ட மூல முலைகள் மற்றும் புண்கள் ஆறும்

இலையை ஆமணக்கு எண்ணெய்யில் வதக்கி மூலத்தில் கட்ட, மூலத்தில் உள்ள வீக்கம், வலி, குத்தல் மற்றும் எரிச்சல் நீங்கும்.
துத்தி இலையை நீரில் கொதிக்க வைத்து வாய் கொப்புளிக்க, பல் ஈறுகளில் ரத்தம் கசிவது நிற்கும்.

அதிகச் சூட்டினால் பெண்களுக்கு உண்டாகும் வெள்ளைப்படுதல், சிறுநீர் எரிச்சல், உடலில் உண்டாகும் கட்டிகளுக்கு துத்தி இலையை எடுத்து 500 மி.லி தண்ணீரில் காய்ச்சி காலை, மாலை குடித்து வர குணமாகும்.
வெப்ப கட்டி மற்றும் மூலத்தில் உண்டாகும் கட்டிகளுக்கு துத்தி இலைச் சாறை அரிசி மாவில் களியாகக் கிண்டி கட்டிகளின் மேல் வைத்துக் கட்டி வந்தால் வெப்பக்கட்டிகள் வெகு விரைவில் குணமாகும்.

தோலில் உண்டாகும் படர்தாமரை நோய்க்கு துத்தி இலையை அரைத்துப் பூச குணம் காணலாம்
மூலநோய் உள்ளவர்கள் துத்திக் கீரையை அடிக்கடி உணவில் சேர்த்து சாப்பிட்டு வர இந்த நோய் அணுகாது
துத்தி பூ, இரத்தப் போக்கை அடக்கும்,காமம் பெருக்கும், ஆண்மையைப் பெருக்கும், குளிர்ச்சி உண்டாக்கும். சிறுநீர் எரிச்சல், ஆசனக் கடுப்பு, வெள்ளை படுதல், கரும்புள்ளி, போன்றவற்றைக் குணமாக்கும்.

இவை நமது தோலில் பட்டால் அரிப்பு ஏற்படும். மூலம் குணமாக துத்தி இலையை விளக்கெண்ணைய் விட்டு வதக்கி மூலம், பவுத்திரம், ஆசனவாய் கடுப்பு ஆகியவற்றின் மீது வைத்துக் கட்ட சரியாகும். துத்தி இலைச்சாற்றுடன் சிறிதளவு மஞ்சள் தூள் கலந்து பாதிக்கப்பட்ட இடத்தில் பூச புண்கள் குணமாகும். துத்தி இலைச் சாற்றை பச்சரிசி மாவுடன் கலந்து கிண்டி கட்டிகளின் மீது வைத்துக் கட்ட கட்டிகள் உடையும். வெள்ளை படுதல் குணமாக துத்தி இலைகளை நெய்யில் வதக்கி சாதத்துடன் சேர்த்து சாப்பிட்டு வர சரியாகும்.
துத்தி விதைச்சூரணம் 20கிராம் கற்கண்டு ஐந்து , தேனில் கலந்து சாப்பிட மேகநோய் குணமாகும். துத்தி இலைகளை கொதிநீரில் போட்டு வேகவைத்து, வலியுள்ள இடத்தில் ஒற்றடம் கொடுக்க உடல்வலி குணமாகும். 20 மி.லி பூச்சாறுடன் கற்கண்டு நான்கு சேர்த்து சாப்பிட்டு வர இரத்த வாந்தி கட்டுப்படும்.
இதை சாப்பிடும் நேரத்தில் புளி, காரம், மாமிசம் உணவைச் தவிர்க்கவேண்டும். புகைப்பிடித்தல் கூடாது. துத்தி இலையையும் துத்திப் பூவையும் சம அளவில் எடுத்து, மை போல் அரைத்து மூலப் பருக்களின் மேல் போட்டால் பருக்கள் மறையும். பருக்களினால் ஏற்பட்ட வீக்கம், வலிநீங்கி பருக்கள் மறைந்து விடும். துத்திப் பூவை 200கிராம் பசும்பாலில் போட்டுக் காய்ச்சி சர்க்கரை சேர்த்துச் சாப்பிட்டு வர , உடல் வெப்பம் தணியும். தாது விருத்தி ஏற்படும். விந்து கூடுதலாக உற்பத்தியாகும்.

எலும்பில் முறிவு ஏற்பட்டவுடன் எலும்புகளைச் சரியாக இணைத்து வைத்து, முறிவு ஏற்பட்ட இடத்தில் துத்திக் கீரையை அரைத்துக் கனமாகப் பூசி இதன் மேல் துணியால் கட்டி, பிறகு இதை அசையாமல் மூங்கில் சிம்புகளை முறையாக வைத்துக் கட்டி அசையாமல் வைத்திருந்தால், சில தினங்களில் உடைந்த எலும்பு கூடிவிடும். துத்தி கீரையை அடிக்கடி சாப்பிட்டு வர நீண்ட நாள் ஆரோக்கியம் தரும். கருந்துத்தி, சிறு துத்தி, நிலத்துத்தி, பெருந்துத்தி என சில வகைகள் உள்ளன.. 20 வகையான துத்தி இனங்கள் உள்ளன.
துத்தி இலை அல்லது துத்தி வேரை 100கிராம் எடுத்து 500 மில்லி தண்ணீரில் போட்டு பாதியாகச் சுண்டக்காய்ச்சி காலை, மாலை 60 மில்லி வீதம் சாப்பிட்டு வந்தால், வெள்ளை நோயும், வெட்டை நோயும் குணமாகும். துத்தி விதையை 30 கிராம் அளவு எடுத்து பால் விட்டு நன்றாக அரைத்து, பிறகு தேவையான அளவில் பால் சேர்த்து தொடர்ந்து சாப்பிட்டு வர தோல் நோய்கள் அனைத்தும் நிவர்த்தியாகும்.
இலை 200 கிராம் அளவில் எடுத்து 500 மில்லி தண்ணீரில் போட்டு பாதியாகச் சுண்டக் காய்ச்சி சாப்பிட்டு வர , மஞ்சள் காமாலை நோய் குணமாகும் துத்தி விதையைப் பொடி செய்து 10 கிராம் அளவில் எடுத்து 200 மில்லி காய்ச்சிய பாலில் கலந்து சாப்பிட்டு வந்தால், உடம்பில் ஏற்பட்ட கருமேகம், படர்தாமரை நீங்கும்.
இலையை இடித்துச் சாறு பிழிந்து சம அளவு நெய் சேர்த்து 30 மில்லி அளவு சாப்பிட்டு வர , கடுமையான ஜலதோஷம் குணமாகும்.
இக்கீரையை பச்சரிசி அல்லது துவரம் பருப்புடன் சமைத்து சாப்பிட்டால் வாய்வுக் கோளாறு கட்டுப்படும்.
துத்தியிலையை உலர்த்தி காயவைத்து இடித்துப் பொடியாக்கி 20கிராம் பொடியை வெந்நீரிலோ அல்லது 1 டம்ளர் பாலிலோ 2 வேளை சாப்பிட்டு வர மூல நோய் கட்டுப்படும். துத்தி இலையை காய்ச்சி தினமும் குடித்துவர குடல்புண் குறையும்.

மேலும் தெரிந்துகொள்ள: 94420 60556,80988 17833
நன்றி : முகநூல் - கொல்லிமலை மூலிகைகள்  

No comments:

Post a Comment