குடியிருப்பு திட்டங்கள் பதிவு : 'சிடி' ஆவணம் கட்டாயம்
ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை சட்டப்படி,குடியிருப்பு திட்டங்களை பதிவு செய்ய விண்ணப்பிக்கும் நிறுவனங்கள், அனைத்து ஆவணங்களையும், 'சிடி' வடிவத்தில் தருவது கட்டாயமாக்கப்பட்டு உள்ளது. தமிழகத்தில், ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை ஆணையத்தில், தற்போதைய நிலவரப்படி, 223 திட்டங்கள் பதிவு செய்யப்பட்டு உள்ளதாக, இணையதளத்தில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. ஆனால், பெரும்பாலான திட்டங்களின் வரைபடங்கள், திட்ட அனுமதி விபர ஆவணங்கள் உள்ளிட்ட விபரங்கள், இணையதளத்தில் பதிவேற்றப்படவில்லை.
இந்நிலையில், ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை சட்டப்படி, பதிவு செய்ய விண்ணப்பிக்கும் நிறுவனங்கள், வரைபடம், திட்ட அனுமதி, பரப்பளவு விபரங்களை, 'ஸ்கேன்' செய்யப்பட்ட ஆவணங்களாக அளிக்கின்றன. இவற்றை இணையதளத்தில் பதிவேற்றுவதில், பல்வேறு சிக்கல்கள் ஏற்படுவதாக கூறப்படுகிறது. எனவே, புதிதாக பதிவு செய்ய விண்ணப்பிக்கும் நிறுவனங்கள், திட்டம் தொடர்பான ஆவணங்களை, பி.டி.எப்., வடிவில், 'சிடி'யில் பதிவு செய்து அளிக்க வேண்டும். இந்த நடைமுறை கட்டாயமாக்கப்பட்டு உள்ளதாக, ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை ஆணையம் அறிவித்துள்ளது.
நன்றி : தினமலர் நாளிதழ் - 30.11.2017
No comments:
Post a Comment