வெற்று ரசீது மோசடி புகார் : சிறப்பு எஸ்.ஐ., தூக்கியடிப்பு
திருப்பூர்: வாகன சோதனையின் போது வசூலித்த அபராதத்துக்கு, முழு விபரம் இல்லாத ரசீது கொடுத்த காங்கேயம் சிறப்பு, எஸ்.ஐ., ஆயுதப்படைக்கு மாற்றப்பட்டார்.
திருப்பூர் மாவட்டம், கருணைபாளையத்தை சேர்ந்தவர், விவசாயி பரமசிவம்; சில நாட்களுக்கு முன், அவரது காரை நிறுத்தி, சோதனை செய்த காங்கேயம் சிறப்பு, எஸ்.ஐ., பன்னீர் செல்வம், 54, போக்குவரத்து விதியை மீறியதாக, அவரிடம் அபராதம் வசூலித்தார்.
எஸ்.ஐ., கொடுத்த போலீஸ் நோட்டீசில், அபராத தொகை, ஸ்டேஷன் பெயர், அலுவலர் பதவி, முத்திரை உள்ளிட்ட விபரங்கள் இல்லை.
அதிர்ச்சி அடைந்த பரமசிவம், திருப்பூர், எஸ்.பி., காங்கேயம் டி.எஸ்.பி., ஆகியோருக்கு புகார் அளித்தார்.
இதையடுத்து, சிறப்பு, எஸ்.ஐ., பன்னீர்செல்வம், திருப்பூர் மாவட்ட ஆயுதப்படைக்கு மாற்றப்பட்டார்.
இவர், இரண்டு மாதங்களுக்கு முன் பணியாற்றிய ஊதியூர் போலீஸ் ஸ்டேஷனில், மாமூல் பங்கீடு தொடர்பாக, மற்றொரு போலீஸ்காரருடன் கட்டிப் புரண்டு சண்டை போட்டுள்ளார்.
இதனால், காங்கேயத்திற்கு மாற்றப்பட்டார். இங்கு வந்த இரு மாதங்களில், வெற்று ரசீது வழங்கி, ஆயுதப்படைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
நன்றி : தினமலர் நாளிதழ் - 24.11.2017
No comments:
Post a Comment