disalbe Right click

Tuesday, November 14, 2017

பஞ்சநாமா (PANCHANAMA) என்றால் என்ன?

கடந்த சில மாதங்களுக்கு முன்னால், கர்நாடகா மாநிலத்தில், எரிசக்தித்துறை அமைச்சர் திரு டி.கே.சிவக்குமார் அவர்களுக்குச் சொந்தமான வீடுகள் மற்றும் அலுவலகங்களில் வருமானவரித்துறையினர்  சோதனை நடத்தினார்கள்.  பல இடங்களில் நடத்தப்பட்ட சோதனை மூன்று நாட்களுக்கு  நீண்டது. இந்த சோதனையில் 800 கோடி ரூபாய்க்கு மதிப்பிலான  சொத்து ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக கூறப்பட்டது.
ஊடகத்துறையினர் அவரிடம் செய்தி சேகரிக்கச் சென்றனர். செய்தியாளர்களிடம் பேசிய அவர் என்னால் இப்போது எதுவும் கூற முடியாது, பஞ்சநாமா கிடைத்த பிறகே அதனைப் பற்றி சொல்ல முடியும்! என்று கூறினார். அப்போதுதான் பஞ்சநாமா என்றால் என்ன? என்பதைப் பற்றி தெரிந்து கொள்ளும் ஆவல் எனக்கு ஏற்பட்டது. நேரடியாக  பஞ்சநாமா பற்றிய எதுவும் எனக்கு கிடைக்கவில்லை. கூகுளிலும் இதனைப் பற்றிய தகவல்கள் இல்லை. நான் திரட்டிய தகவல்கள் இதோ உங்களுக்காக.
பஞ்சநாமா (PANCHANAMA) என்றால் என்ன?
வருமானவரித்துறையினர் தாங்கள் சோதனை நடத்துகின்ற இடங்களில்  சோதனையின்  முடிவில், சோதனை நடத்தப்பட்ட இடங்களுக்குச் சொந்தமானவரிடம் ஒரு அறிக்கையினை அளிப்பார்கள். அந்த அறிக்கையின் பெயரே பஞ்சநாமா ஆகும்.
பஞ்சநாமாவில் என்ன எழுதி இருக்கும்?
பஞ்சநாமாவில் முதலில் சோதனை செய்யப்படுகின்ற இடத்தின் உரிமையாளர் பெயர்  மற்றும் முகவரி எழுதப்பட்டிருக்கும்.
இரண்டாவதாக சோதனை செய்கின்ற அதிகாரிகளின் பெயர்கள்   மற்றும்  பதவிகள்  குறிப்பிடப் பட்டிருக்கும்.
மூன்றாவதாக (PANCHA என்றால் ஹிந்தியில் நடுவர் என்று அர்த்தம்) நடுவர்களின் பெயர்கள் மற்றும்  அவர்களின் வீட்டு முகவரிகள் முழுமையாக  எழுதப்பட்டிருக்கும். 
அதன்பிறகு வரிசையாக சோதனை நடைபெற்ற தேதி, சோதனை தொடங்கிய நேரம், முடிந்த நேரம் ஆகியவையும் கைப்பற்ற பொருட்கள் மற்றும் ஆவணங்கள் ஆகியவை பற்றியும் குறிப்பிடப்பட்டிருக்கும்.
முடிவில் நடுவர்கள் மற்றும் அதிகாரிகளின் கையொப்பங்கள் இடம் பெற்றிருக்கும். இந்த பஞ்சநாமாவின் நகல் ஒன்று சோதனை நடத்தப்பட்டவரிடம் அளிக்கப்பட்டு கையொப்பம் பெறப்பட்டிருக்கும்.
இதனுடன் இணைந்த மற்றொரு அறிக்கையில் இரண்டு சாட்சிகளிடம் மற்ற விபரங்களைக் குறிப்பிட்டு கையொப்பம் பெறப்பட்டிருக்கும்.
கீழே பஞ்சநாமா நகல்கள் இணைக்கப்பட்டுள்ளது.
*****************************************************அன்புடன் செல்வம் பழனிச்சாமி 




மேலும் தற்கொலை, கொலை, சந்தேக மரணம் மற்றும் விபத்து போன்ற நிகழ்வுகளில் சம்பந்தப்பட்ட நபர் இறந்ததற்கான காரணம் இதுதான் என்று கண்ணியமிக்க நபர்களிடம் பெறப்படும் கருத்து அடங்கிய விபரங்களையும், பஞ்சநாமா என்றே குறிப்பிடுகிறார்கள். இது சம்பவம் நடைபெற்ற இடத்திலிருந்து ஷை சடலத்தை அகற்றுவதற்கு முன்பு புலன்விசாரணை அதிகாரி தயாரிக்க வேண்டிய மிக முக்கியமான ஆவணமாகும். இந்த ஆவணத்தில் மேற்கூறிய சாட்சிகள், அதிகாரிகள்  உள்பட ஐந்து நபர்களும் கையொப்பமிட வேண்டும். இதுபோன்ற வழக்கில் அவர்களின் சாட்சியத்தையும் நீதிமன்றம் கவனத்தில் கொள்ளும். 

No comments:

Post a Comment