பதிவு துறையில், 'சமாதான் திட்டம்' அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால்: ஐந்து லட்சம் பத்திரங்களுக்கு தீர்வு காணப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பதிவுத்துறையினுடைய வழிகாட்டி மதிப்பு குளறுபடியால், ஐந்து லட்சம் பத்திரங்கங்களுக்கு மேலாக நிலுவையில் வைக்கப்பட்டுள்ளது. இதற்குத் தீர்வு காண, ஜன., 3ல், 'சமாதான் திட்டம்' நடைமுறைக்கு வர இருக்கிறது.
பொதுவாக சொத்து பரிமாற்ற பத்திரங்களை, அந்தந்த பகுதிகளுக்குரிய வழிகாட்டி மதிப்பு அடிப்படையில், சார்பதிவாளர் அலுவலகத்தில் நாம் பதிவு செய்ய வேண்டும். அந்த வழிகாட்டு மதிப்பீட்டின்படியே, முத்திரைத் தீர்வை, பதிவு கட்டணம் ஆகியவை முடிவு செய்யப்படுகின்றன. ஆனால், அரசு நிர்ணயித்துள்ள வழிகாட்டி மதிப்பை விட, குறைந்த மதிப்புக்கு, சிலர் பத்திரங்களை வாங்கி பதிவு செய்வதால், அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்படுகிறது. எனவே, பத்திரத்தில்
குறிப்பிடப்பட்ட குறைந்த மதிப்புக்கு உரிய காரணத்தை உறுதி செய்ய, பதிவு சட்டம், 47 - ஏ மற்றும், 19 - பி ஆகிய பிரிவுகளின் படி, மாவட்ட வருவாய் அலுவலரின் விசாரணைக்கு பரிந்துரைக்கப்பட்டு விசாரணைக்கு அனுப்பப்படும். இவ்வாறு அனுப்பப்படுகின்ற பத்திரங்கள், நீண்ட காலமாக நிலுவையில் போடப்படுவதால்,
சொத்து வாங்கியோருக்கு,
பத்திரம் கிடைக்காமல் போனது. இது போன்று நிலுவையில் உள்ள பத்திரங்கள் ஐந்து லட்சத்திற்கும் அதிகமாக உள்ளது. இதனால் பதிவுத்துறைக்கும்,
வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.
சமாதான் திட்டம்
மதிப்பு வேறுபாடு காரணமாக, மாவட்ட வருவாய் அலுவலர் விசாரணையில் நிலுவையில் உள்ள பத்திரங்களுக்கு தீர்வு காண, பதிவுத்துறை, 'சமாதான்' திட்டத்தை அறிவித்துள்ளது.
மாநில பதிவுத்துறைத் தலைவர், குமரகுருபரன் அவர்கள் பிறப்பித்த உத்தரவு:
💥முத்திரைத்தாள் பிரிவுக்கான, மாவட்ட வருவாய் அலுவலரின் விசாரணைக்கு பரிந்துரைக்கப்பட்டு, 2017 ஜூன், 8 நிலவரப்படி நிலுவையில் உள்ள பத்திரங்கள், சமாதான் திட்டத்துக்கு தகுதி பெறும்.
💥 கூடுதல் பதிவு கட்டணமாக முத்திரை தீர்வையில், மூன்றில் இரண்டு பங்கு தொகையை சம்பந்தப்பட்ட பத்திரத்திற்கு உரிமையாளர்கள் செலுத்தினால் போதும்
💥 இத்திட்டம், ஜன., 3ல் துவங்கி, ஏப்., 2 வரை, தொடர்ந்து மூன்று மாதங்கள் அமலில் இருக்கும்.
💥 இத்திட்டத்தில் பயன்பெறுவதற்கு பொதுமக்கள், சம்பந்தப்பட்ட சார் - பதிவாளர்களை நேரடியாக அணுக வேண்டும். சந்தேகம் ஏதேனும் இருந்தால், மாவட்ட பதிவாளர்கள், பதிவுத்துறை, டி.ஐ.ஜி.,க்கள், பதிவுத்துறை தலைவர் ஆகியோர்களின் அலுவலகத்தை அணுகலாம். இவ்வாறு உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
************************************ அன்புடன் செல்வம் பழனிச்சாமி - 01.01.2018