சென்னை: தமிழகத்தில், 500 சதுர மீட்டர் நிலப் பரப்புக்கு மேல் அல்லது எட்டு குடியிருப்புகளுக்கு மேல், கட்டடம் கட்டுவோர், தமிழ்நாடு கட்டட மனை விற்பனை ஒழுங்குமுறை ஆணையத்தில், கண்டிப்பாக பதிவு செய்ய வேண்டும் என, அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக அரசு சார்பில், ஜூன், 22ல், தமிழ்நாடு கட்டட மனை விற்பனை விதிகள் - 2017 வெளியிடப்பட்டன. இந்த சட்டத்தின்படி, கட்டட உரிமையாளர்கள், கட்டுமான நிறுவனங்களை சேர்ந்தோர், வீட்டுமனை உரிமையாளர், 500 சதுர மீட்டர் நிலப் பரப்புக்கு மேல் அல்லது எட்டு குடியிருப்புகளுக்கு மேல், கட்டடம் கட்டுவோர், கட்டட மனை விற்பனை ஒழுங்குமுறை ஆணையத்தில், அவசியம் பதிவு செய்ய வேண்டும்.
தொலைபேசி எண்: 044 - 28887900.
பதிவு செய்யப்பட்ட நிறுவனங்கள், தாங்கள் பெற்ற பதிவு எண்ணுடன், வீட்டுமனை விற்பனையை, விளம்பரப்படுத்த வேண்டும். இதைச் செய்யத் தவறினால், பிரிவு - 69ன்படி, தண்டனை நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என, கட்டட மனை விற்பனை ஒழுங்குமுறை ஆணையத் தலைவர் அறிவித்துள்ளார்.
நன்றி : தினமலர் நாளிதழ் - 16.12.2017
No comments:
Post a Comment