காரைக்குடி வட்டார போக்குவரத்து ஆய்வாளர் அலுவலகத்தில், ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றி வந்த கணினி ஆப்பரேட்டர் போலி ஆர்.சி. (பதிவுசான்று) தயார் செய்தது தொடர்பாக பணி நீக்கம் செய்யப்பட்டார்.
காரைக்குடி போலீஸ் இன்ஸ்பெக்டர் வின்சென்ட், செப்டம்பர் 29-ம் தேதி கிணற்றடி காளியம்மன் கோயில் தெருவில் மரக்கடையில் பணம் வைத்து சீட்டு விளையாடிய மாத்துார் மணக்காடை சேர்ந்த துரைப்பாண்டி உட்பட 11 பேரை கைது செய்தார். அவர்களிடமிருந்து ரூ.36 ஆயிரத்து 745 மற்றும் 10 டூவீலர்களை பறிமுதல் செய்தார். விசாரணைக்கு பின் அவற்றை காரைக்குடி நீதிமன்றத்தில் ஒப்படைத்தார்.
இதில் துரைப்பாண்டி டூவீலர் அவரது உறவினர் மணிமேகலை பெயரில் பதிவு செய்யப்பட்டிருந்தது.
டூவீலரை திரும்ப பெறுவதற்காக மணிமேகலை நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளார். நகல் மூலம் விண்ணப்பித்ததால், ஒரிஜினல் பதிவு சான்றை சமர்ப்பிக்குமாறு கூறப்பட்டுள்ளது.
ஒரிஜினல் பதிவு சான்று கைவசம் இல்லாததால் அ.தி.மு.க.,வை சேர்ந்த டிரைவிங் ஸ்கூல் உரிமையாளர் முன்னாள் கவுன்சிலர் கணேசனை வாகன உரிமையாளர் அணுகியுள்ளார்.
அவர் ஆர்.டி.ஓ., அலுவலகத்தில் உள்ள கணினி ஆப்பரேட்டர் கார்த்திகேயனிடம், டூப்ளிகேட் பதிவுச்சான்று ஏற்பாடு செய்து தருமாறு கூறியுள்ளார்.
கணினி ஆப்பரேட்டர் கார்த்திகேயன், தன்னிச்சையாக செயல்பட்டு, போலி ஆர்.சி.,புத்தகம் தயார் செய்து கணேசனிடம் கொடுத்துள்ளார்.
ஆர்.சி., புத்தகத்தின் நகல் 2013-ம் ஆண்டு என இருந்ததால், அப்போதைய வட்டார போக்குவரத்து ஆய்வாளரின் கையெழுத்து போலியாக போட்டுள்ளார்.
வாகன உரிமையாளர் நீதிமன்றத்தில் ஆர்.சி.,புத்தகத்தை தாக்கல் செய்தபோது, அதில் சந்தேகம் எழவே, அதன் உண்மைத்தன்மை குறித்து பரிசோதிக்க கூறப்பட்டது. தற்போதைய வட்டார போக்குவரத்து ஆய்வாளர் ராஜேஷ் விசாரணைரித்து, அந்த சான்று போலியானது என அறிக்கை தாக்கல் செய்தார்.
இது தொடர்பாக கார்த்திகேயன் பணி நீக்கம் செய்யப்பட்டார்.
வட்டார போக்குவரத்து அலுவலர் திருவள்ளுவனிடம் கேட்டபோது, கணினி ஆப்பரேட்டர் கார்த்திகேயன் குற்ற செயலில் ஈடுபட்டது தெரிய வந்ததால், அவர் டிஸ்மிஸ் செய்யப்பட்டுள்ளார், என்றார்.
No comments:
Post a Comment