பொது தேர்வு தேதியில் மாற்றம் இல்லை; மீண்டும் அட்டவணை வெளியீடு
சென்னை: ’தமிழக பாடத்திட்டத்தில், 10ம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 பொது தேர்வுகள், ஏற்கனவே அறிவித்த தேதிகளில், எந்த மாற்றமும் இன்றி நடத்தப்படும்’ என, தேர்வுத் துறை அறிவித்துள்ளது.
தமிழக பாடத்திட்டத்தில்,
10ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரையில், பொதுத் தேர்வு தேதியை, ஒவ்வொரு ஆண்டும், டிசம்பரில், அரசு தேர்வுத் துறை அறிவிக்கும்.
இந்த ஆண்டு, பள்ளிக் கல்விச் செயலர், உதயசந்திரன் உத்தரவில், இறுதி தேர்வு விடுமுறைக்கு பின், பள்ளிகள் திறந்த முதல் வாரத்திலேயே, பொது தேர்வு தேதியும் அறிவிக்கப்பட்டது.
அதனால், தேர்வு நாளை, முன்கூட்டியே கணக்கிட்டு, ஆசிரியர்கள் பாடம் நடத்தவும், மாணவர்கள் படிக்கவும் வசதியாக இருந்தது. இந்நிலையில், ஏற்கனவே அறிவிக்கப்பட்டபடி, அதே தேதிகளில், திட்டமிட்டபடி பொதுத் தேர்வுகள் நடக்கும் என, தேர்வுத்துறை, நேற்று அறிவித்துள்ளது.
தேர்வு அட்டவணை விவரம்:
பிளஸ்2 பொது தேர்வு
மார்ச் 01: மொழிப்பாடம் முதல் தாள்
மார்ச் 02: மொழிப்பாடம் 2ம் தாள்
மார்ச் 05 ஆங்கிலம் முதல் தாள்
மார்ச் 06 மொழிப்பாடம் 2ம் தாள்
மார்ச் 09: வணிகவியல், ஹோம் சயின்ஸ், புவியியல்
மார்ச் 12 : கணிதம், விலங்கியல், மைக்ரோ பயாலஜி
மார்ச் 15: புள்ளியியல், நர்சிங், அரசியல் அறிவியல், தொழில்கல்வி
மார்ச் 21: புவியியல், பொருளாதாரம்
மார்ச் 26: வேதியியல், கணக்கு பதிவியல்
ஏப்ரல் 02: உயிரியல், வரலாறு, தாவரவியல், வணிக கணக்கு
ஏப்ரல் 06: தொடர்பு ஆங்கிலம், இந்திய கலாசாரம், கணிப்பொறி அறிவியல், பயோ கெமிஸ்ட்ரி,
அட்வான்ஸ்ட் மொழித்தாள்
பிளஸ் 1 பொது தேர்வு
மார்ச் 07: மொழி முதல்தாள்
மார்ச் 08 : மொழி இரண்டாம் தாள்
மார்ச் 13: ஆங்கிலம் முதல் தாள்
மார்ச் 14: ஆங்கிலம் இரண்டாம் தாள்
மார்ச் 20: கணிதம், விலங்கியல், மைக்ரோ பயாலஜி, ஊட்டச்சத்து
மார்ச் 23: வணிகவியல், ஹோம் சயின்ஸ், புவியியல்
மார்ச் 27: இயற்பியல், பொருளாதாரம்
ஏப்ரல் 03: வேதியியல், கணக்கு பதவியியல்
ஏப்ரல் 09: உயிரியல், வரலாறு, தாவரவியல், வணிக கணக்கு,
பொது மெகானிஸ்ட் தியரி - முதல்தாள்
ஏப்ரல் 13: தொடர்பு ஆங்கிலம், கணிப்பொறிஅறிவியல்,
பயோ கெமிஸ்ட்ரி, அட்வான்ஸ் மொழிதாள்
ஏப்ரல் 16: பொது மெகானிஸ்ட் தியரி 2ம் தாள், எலக்ட்ரிகல் மிஷின்ஸ் தியரி ,
தொழில்படிப்புகள், அரசியல் அறிவியல், நர்சிங், புள்ளியியல்
10ம் வகுப்பு பொது தேர்வு
மார்ச் 16: தமிழ் முதல் தாள்
மார்ச் 20: தமிழ் இரண்டாம் தாள்
மார்ச் 28: ஆங்கிலம் முதல் தாள்
ஏப்ரல் 04: ஆங்கிலம் இரண்டாம் தாள்
ஏப்ரல் 10: கணிதம்
ஏப்ரல் 12: விருப்ப பாடம்
ஏப்ரல் 17: அறிவியல்
ஏப்ரல் 20: சமூக அறிவியல்
நன்றி : தினமலர் (கல்விமலர்) நாளிதழ் - 16.12.2017
No comments:
Post a Comment