ஒருவர் மீது கிரிமினல் வழக்கு தொடர்வதாக இருந்தால்,
- முதலில் அருகில் உள்ள காவல் நிலையத்தில், உரிய ஆதாரங்களுடன் அவர்மீது எழுத்து பூர்வமாக புகார் அளிக்க வேண்டும். அதற்குறிய மனு ஏற்பு சான்றிதழை அவர்களிடமிருந்து கண்டிப்பாக பெற வேண்டும்.
- அவர்கள் உங்கள் புகாரை ஏற்றுக் கொள்ள மறுத்தால், அந்தப் புகாரை உரிய ஆவண நகல்களுடன், நாள் குறிப்பிட்டு, ஒப்புதல் அட்டை இணைத்து அந்தக் காவல் நிலையத்தின் சார்பு ஆய்வாளர் அவர்களுக்கு பதிவுத் தபால் மூலமாக அனுப்ப வேண்டும்.
- அந்த தபாலின் நகல் ஒன்றை கண்டிப்பாக நீங்கள் வைத்துக் கொள்ள வேண்டும்.
- அதனை அனுப்பியதற்கான ரசீது மற்றும் ஒப்புதல் அட்டை ஆகியவற்றை பத்திரப்படுத்திக் கொள்ளவேண்டும்.
- அதன் பிறகும் உள்ளூர் காவல்நிலையத்தில் உங்கள் புகார் மீது நடவடிக்கை எடுக்கவில்லை என்றால், அந்தப் புகார் அனுப்பிய நாளில் இருந்து முப்பது நாட்கள் கழித்து, அந்த பகுதிக்குரிய மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களுக்கு ஒப்புதல் அட்டை இணைத்து ஒரு பதிவுத்தபால் அனுப்ப வேண்டும்.
- அந்தப் பதிவுத்தபாலில் உள்ளூர் காவல்நிலையத்திற்கு பதிவுத்தபால் மூலம் புகார் அனுப்பிய விபரத்தை தெரிவித்து, அதற்கான ஆதாரங்களின் நகல்களை இணைத்து, உங்கள் புகாரின் மீது நடவடிக்கை எடுக்க, உள்ளூர் காவல்நிலைய சார்பு ஆய்வாளருக்கு உத்தரவிட மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களிடம் பணிவுடன் கோர வேண்டும்.
- மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களுக்கு எழுதிய தபாலின் நகல் ஒன்றை கண்டிப்பாக நீங்கள் வைத்துக் கொள்ள வேண்டும்.
- மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களுக்கு தபால் அனுப்பியதற்கான ரசீது மற்றும் ஒப்புதல் அட்டை ஆகியவற்றை பத்திரப்படுத்திக் கொள்ளவேண்டும்.
- இதற்குப் பிறகும் நடவடிக்கை எதுவும் எடுக்கவில்லை என்றால் அல்லது எடுக்கப்பட்ட நடவடிக்கை சரியில்லை என்றால், மேற்கண்ட ஆவண நகல்களை இணைத்து நீங்கள் நீதிமன்றத்தில் கிரிமினல் வழக்குத் தொடுக்கலாம்.
- ஆனால், மேற்கண்ட நடைமுறைகளை நீங்கள் பின்பற்றவில்லை என்றாலும், புகாருக்கு உரிய ஆவண நகல்களை இணைக்கவில்லை என்றாலும், நீதிமன்றம் உங்கள் வழக்கை எடுத்த எடுப்பிலேயே தள்ளுபடி செய்துவிடும்.
No comments:
Post a Comment