தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் வலியுறுத்தல்
சரமாரி கேள்விகள் தொடுத்தார் நீதிபதி கிருபாகரன்
சென்னை : ''லஞ்சம் வாங்கும் அரசு ஊழியர்களை, ஏன் குண்டர் சட்டத்தில் கைது செய்யக் கூடாது,'' என, தமிழக அரசுக்கு, சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி, கிருபாகரன்சரமாரி கேள்வி எழுப்பி உள்ளார்.
சென்னை, ஆலந்துாரைச் சேர்ந்த பூபதி என்பவர், சென்னை உயர் நீதிமன்றத்தில்
ஒரு மனு தாக்கல் செய்தார்; அதில் கூறப்பட்டிருந்ததாவது:
என் தாத்தாவின் சொத்து களை பாகப்பிரிவினை
செய்து, உரிய கட்டணம் செலுத்தி விண்ணப்பித்து,
ஓராண்டான பின்னும், பத்திரப் பதிவு செய்யப்படவில்லை.
எனவே, பத்திரப்பதிவை
முடித்து, பத்திரங்களை வழங்க உத்தரவிட வேண்டும்.இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டு இருந்தது.
இந்த மனு, ஏற்கனவே விசாரணைக்கு வந்தபோது, உயர் நீதிமன்றம் கூறியதாவது:பத்திரப்பதிவு துறை, ஊழலில் திளைக்கும் துறையாக உள்ளது. லஞ்சம் லாவண்யங்களை தடுக்க, பத்திரப்பதிவு அலுவலகங்களுக்குள், வெளி நபர்கள் செல்வதை தடுக்கும் வகையில், நவீன வசதிகள் செய்து கொடுக்க வேண்டும்.மனுதாரருக்கு மூன்று வாரத்திற்குள்
பத்திரங்களை பதிவு செய்து கொடுக்க வேண்டும்.
மேலும்,
😺 10 ஆண்டுகளில், லஞ்ச ஒழிப்பு போலீசார், சார் - அலுவலகங்களில் எத்தனை முறை திடீர் சோதனை நடத்தினர்?
😺 அதில், லஞ்சம் வாங்கிய அதிகாரிகள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன?,
😺 இடைத்தரகர்களை ஒழிக்க என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது?.
இவ்வாறு நீதிமன்றம் கூறியிருந்தது.
இந்நிலையில், நீதிபதி, என்.கிருபாகரன் முன், இந்த வழக்கு, நேற்று விசாரணைக்கு வந்தது.
அப்போது, கடந்த, 10 ஆண்டுகளில் லஞ்சம் பெற்ற, 77 அரசு அதிகாரிகள் மீது, வழக்கு பதிவு செய்துள்ளதாக,
தமிழக அரசு சார்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.
அறிக்கைக்கு கண்டனம் தெரிவித்த நீதிபதி, ''ஆசியாவிலேயே அதிக ஊழல் நடைபெறும் நாடாகஇந்தியா உள்ளது. அரசு அலுவலகங்களில் தான், இந்த ஊழல் அதிகமாக உள்ளது,'' என, வேதனை தெரிவித்தார்.
இதையடுத்து, தமிழக அரசுக்கு பல்வேறு கேள்விகளை எழுப்பி, நீதிபதி பிறப்பித்த உத்தரவு:
😺 ஊழலில் திளைக்கும் லஞ்ச அதிகாரிகள், மற்றும் பொது ஊழியர்கள் மீது, குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் ஏன் வழக்கு பதிவு செய்யக் கூடாது?
😺 அதற்கு ஏற்ப ஏன் புதியதாக சட்டத் திருத்தம் கொண்டு வரக் கூடாது?
😺 கடந்த, 10 ஆண்டுகளில், பத்திரப் பதிவு அலுவலகம் உள்ளிட்ட அரசு அலுவலகங்களில்
எத்தனை முறை சோதனைகள் நடத்தப்பட்டு உள்ளன?
😺 எத்தனை வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன?
😺 எத்தனை பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்?
😺 எவ்வளவு பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது?
😺 அதிகளவில் லஞ்சம் புழங்கும் முதல், ஐந்து அரசு துறைகள் என்னலஞ்ச ஒழிப்பு துறையினர் சோதனை நடத்தும்போது ஏற்படும் பிரச்னைகள் என்ன?
😺 ஊழியர் பற்றக்குறை உள்ளதா?
😺 சோதனையின்போது, நவீன தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படுகின்றனவா?
😺 லஞ்ச ஒழிப்பு துறைக்கு போதிய நிதி ஒதுக்கப்படுகிறதா?
😺 ஊழல் குற்றச்சாட்டுக்கு
ஆளான பொது ஊழியர்கள் மீது எடுக்கப்பட்ட
நடவடிக்கை என்ன?
உள்ளிட்ட கேள்வி களுக்கு, வரும்., டிச., 11ம் தேதிக்குள், தமிழக அரசு பதிலளிக்க வேண்டும். இவ்வாறு உத்தரவில் கூறப்பட்டுள்ளது.
நன்றி : தினமலர் நாளிதழ் - 05.12.2017
No comments:
Post a Comment