நீதிமன்றத்தில் ஆஜராகும் வழக்கறிஞர்கள் இனி 'வக்காலத்து' படிவத்துடன், புகைப்படத்துடன் கூடிய தங்களின் அடையாள அட்டை நகலையும், தாக்கல் செய்ய வேண்டும்' என, சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி, வைத்தியநாதன் அவர்கள் பிறப்பித்த உத்தரவின் அடிப்படையில், நீதிமன்ற பதிவுத்துறை கீழ்கண்ட உத்தரவுகளை பிறப்பித்துள்ளது.
இந்த உத்தரவு, 02.01.2018 முதல் அமலுக்கு வருகிறது.
💬 வக்காலத்து படிவத்துடன், வழக்கறிஞரின் புகைப்படத்துடன்
கூடிய அடையாள அட்டை நகலை வழக்கறிஞர்கள் அனைவரும் தாக்கல் செய்ய வேண்டும்.
💬 அடையாள அட்டை இல்லாதவர்கள், பார் கவுன்சிலில் இருந்து பெற வேண்டும். புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டை நகல் இல்லாமல், இனி வழக்கறிஞர்களின் வக்காலத்து படிவம் ஏற்கப்படாது.
💬வக்காலத்து படிவத்தை, சான்றொப்பம் செய்யும் வழக்கறிஞர்களின் அடையாள அட்டை நகலையும், தாக்கல் செய்ய வேண்டும்
💬 இருப்பிட முகவரியுடன், படிவத்தை தாக்கல் செய்யும் வழக்கறிஞர் மற்றும் சான்றொப்பம் செய்யும் வழக்கறிஞர் ஆகியோர்களின் அலுவலக முகவரியையும்
அளிக்க வேண்டும்
💬 குற்றவியல் நீதிமன்றங்களில் தாக்கல் செய்யப்படும்
மனுக்களில், வழக்கறிஞரின்
பார் கவுன்சில் பதிவு எண்ணை குறிப்பிட்டு, அனைத்து பக்கங்களிலும்
கையெழுத்து இட வேண்டும். இதில் சந்தேகம் ஏதேனும் ஏற்பட்டால், சம்பந்தப்பட்ட நீதிமன்றங்கள்,
சரிபார்த்து கொள்ளலாம்
💬 அடையாள அட்டையை சரிபார்க்க, நீதிமன்றம் அல்லது பதிவுத்துறை கோரினால், அசல் அடையாள அட்டையை, வழக்கறிஞர்கள் அளிக்க வேண்டும். உயர் நீதிமன்ற பதிவாளர் ஜெனரல், ஆர்.சக்திவேல், அவர்கள் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
******************************** அன்புடன் செல்வம் பழனிச்சாமி - 31.12.2017
No comments:
Post a Comment