கிளாட் நுழைவு தேர்வு தேதி அறிவிப்பு
சட்டபடிப்பு படிப்பதற்கு மாணவர்களுக்கான நுழைவு தேர்வுக்கு விண்ணப்பிக்க அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
தகுதி என்ன? (For U G Program)
கிளாட் சட்டப்படிப்புக்கான UG நுழைவு தேர்வு எழுத விரும்பும் மாணவ, மாணவியர்கள் பனிரெண்டாம் வகுப்பு முடித்திருக்க வேண்டும். SC/ST பிரிவினர்கள் 40% மதிப்பெண்களும், மற்ற பிரிவினர்கள் 45% மதிப்பெண்களும் பனிரெண்டாம் வகுப்பு இறுதித் தேர்வில் பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு என்ன?
கிளாட் தேர்வுக்கு விண்ணப்பிக்கும் மாணவர்களுக்கான வயது வரம்பு இன்னும் அறிவிக்கப்படவில்லை. 2008ம் ஆண்டு கல்வி விதி எண்:28ன்படி 5 வருடப் படிப்பிற்கான அதிகபட்ச வயது 20 என்று இந்திய பார் கவுன்சில் ஏற்கனவே விதி வகுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது..
தகுதி என்ன? (For P G Program)
கிளாட் சட்டப்படிப்புக்கான PG நுழைவு தேர்வு எழுத விரும்பும் மாணவ, மாணவியர்கள் எல்எல்பி டிகிரி முடித்தவர்கள் அல்லது அதற்கு இணையான படிப்பு படித்திருக்க வேண்டும். அதில் SC/ST பிரிவினர்கள் 50% மதிப்பெண்களும், மற்ற பிரிவினர்கள் 55% மதிப்பெண்களும் பெற்றிருக்க வேண்டும்.
இந்த கிளாட் தேர்வானது நமது நாடு முழுவதும் உள்ள மாணவ, மாணவியர்கள் சட்டப்படிப்பு படிப்பதற்கான 18 பல்கலைக்கழகங்களில் தங்கள் படிப்பை படிக்க எழுதப்படும் நுழைவுத் தேர்வு ஆகும்.
விண்ணப்பிக்கும் நாள்:
014.01.2018 முதல் 31.03.2018 வரை இந்த நுழைவுத்தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம். அதனை பின்னர் அறிவிப்பார்கள் என்று அறியப்படுகின்றது.
கிளாட் தேர்வு எழுதும் முறை :
கிளாட் தேர்வின் மொத்த மதிப்பெண்கள் 200 ஆகும். தேர்வு எழுதும் காலம் 2 மணி நேரம் ஆகும். கிளாட் தேர்வுக்கான கேள்வித்தாள்
200 கேள்விகள் கொண்டது. ஒவ்வொரு கேள்விக்கும் பதில்கள் பல கொடுக்கப்பட்டு இருக்கும். அதில் சரியான பதிலை நீங்கள் தேர்வு செய்ய வேண்டும். English including Comprehension 40 கேள்விகளும், Elementary Mathematics (Numerical Ability) 20 கேள்விகளும், Legal Aptitude 50 கேள்விகளும், Logical Reasoning 40 கேள்விகளும், General Knowledge and Current Affairs 50 கேள்விகளும் கேட்கப்படும்.
தவறாக எழுதும் விடைகளுக்கு 0.25 மதிப்பெண்கள் மொத்த மதிப்பெண்களில் இருந்து குறைக்கப்படும்
சட்டம் படிக்கும் விருப்பமுள்ளோர் விண்ணப்பிக்கலாம். இந்தியாவில் உள்ள முக்கிய சட்டப் பல்கலைக் கழகங்களில் சட்டம் கற்பதற்கு இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளுங்கள்.
********************************************** அன்புடன் செல்வம் பழனிச்சாமி - 22.12.2017
No comments:
Post a Comment