புதிய ஸ்மார்ட் கார்டு எங்கு இடைக்கும்?
இ - சேவை மையங்களில் புதிய ஸ்மார்ட் கார்டு வழங்க தாமதம் ஏன்?
நடைமுறை என்ன?
தமிழகத்தில் உள்ள, அனைத்து (1.93 கோடி) ரேஷன் கார்டு தாரர்களுக்கு, 'ஸ்மார்ட் கார்டு' என்ற, கையடக்க அட்டை தமிழக அரசால் வினியோகிக்கப்பட்டு வருகிறது. அதில், புதிய பெயர் சேர்த்தல், நீக்குதல், முகவரி மாற்றம் செய்தல் போன்ற திருத்தங்களை செய்ய, அரசு இ- - சேவை மையங்களில் பொதுமக்கள் அனைவரும் விண்ணப்பிக்கலாம். பொது வினியோகத் துறை www.tnpds.gov.in இணையதளத்திலும் விண்ணப்பிக்கலாம். அதற்கு, கட்டணமாக, 60 ரூபாய் பெறப்படுகிறது.
இந்நிலையில், ஸ்மார்ட் கார்டுகளை பொதுமக்கள் பெறுவதில் சிக்கல் இருந்து வருகிறது.
இது குறித்து, தகவல் தொழில்நுட்பத்துறை அதிகாரிகள் கூறியதாவது:
பொதுவாக இ - சேவை மையங்களுக்கு வரும், ஸ்மார்ட் கார்டு தொடர்பான மனுக்கள், (Taluk Supply Officer) வட்ட வழங்கல் அதிகாரி அவர்களின் பரிசீலனைக்கு செல்லும். அவர்கள் ஒப்புதல் அளித்த பின், பதிவு செய்யப்பட்ட மனுதாரரின் மொபைல் போனுக்கு, எஸ்.எம்.எஸ்., (SMS) செய்தி அனுப்பப்படும்.
அதற்கு பிறகு தான், ஸ்மார்ட் கார்டு பெற, இ - சேவை மையங்களுக்கு, மக்கள் வர வேண்டும்; ஆனால், அது பலருக்கு தெரிவது இல்லை. சில, நேரங்களில் வட்ட வழங்கல் அதிகாரிகள் லஞ்சம் கேட்டும், தாமதம் செய்கின்றனர். சமீபத்தில், நாமக்கல் மாவட்டத்தில், புதிய கார்டுக்கு விண்ணப் பித்தவரிடம், 5,000 ரூபாய் லஞ்சம் வாங்கிய ஒரு அதிகாரி பிடிபட்டுள்ளார். இதுபோன்ற மோசமான அதிகாரிகளால்
தான், எஸ்.எம். எஸ்., அனுப்புவதில்
தாமதம் ஏற்படுகிறது. 'ஸ்மார்ட் கார்டு - பிரின்ட் - அவுட்' அரசு கேபிள் நிறுவனம் நடத்தும் மையங்களில் மட்டும் தான் கிடைக்கும். அது தெரியாமல், மற்ற, 'இ - சேவை' மையங்களுக்கு பொதுமக்கள் செல்வதால், பிரச்னை ஏற்படுகிறது.
எனவே பொதுமக்கள் தங்களது ஸ்மார்ட் கார்டைப் பெற தங்களது மொபல் போனுக்கு குறுஞ்செய்து வந்த பின்பு அரசு கேபிள் நிறுவனம் நடத்தும் மையங்களுக்கு (மட்டும்) செல்ல வேண்டப்படுகிறார்கள்.
******************************************** அன்புடன் செல்வம் பழனிச்சாமி - 30.12.2017
No comments:
Post a Comment