சென்னை: பதிவுத்துறை
பணிகள் தொடர்பான சேவை குறைபாடுகள் இருந்தால், அதை தெரிவிக்க, கட்டணமில்லா
தொலைபேசி எண் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இது தொடர்பாக பதிவுத்துறை வெளியிட்டு உள்ள அறிவிப்பு: சொத்து பரிமாற்றங்கள்
தொடர்பான ஆவணங்கள் பதிவு, திருமணங்கள், சங்கங்கள், சீட்டு மற்றும் கூட்டு நிறுவனங்கள் பதிவு தொடர்பான பணிகளை, பத்திரப் பதிவுத் துறை மேற்கொள்கிறது. இந்த சேவைகள் தொடர்பாக குறைகள் இருந்தால், அவற்றை, பொது மக்கள் எளிய முறையில் தெரிவிக்கலாம்.
இதற்காக, பதிவுத்துறையில்,
1800 102 5174 என்ற கட்டணமில்லா
தொலைபேசி எண் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த புகார்கள் அனைத்தும், கணினியில் பதிவு செய்து, பதிவுத்துறை
தலைவரின் பார்வைக்கு அனுப்பி, நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வசதியை, அனைத்து அலுவலக நாட்களிலும், காலை, 10:00 மணி முதல், மாலை, 5:45 மணி வரை பொதுமக்கள் பயன்படுத்தலாம்.இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
நன்றி : தினமலர் நாளிதழ் - 11.12.2017
No comments:
Post a Comment