ஒருவர் தன்னுடைய பணம் மற்றும் சொத்துக்கள் பற்றி வெளிப்படையாக தன்னுடைய வருமானக் கணக்கில் காட்டாமல் வேறொருவருடைய கணக்கில் காடுவது அல்லது வேறொருவரின் பெயரில் சொத்துக்களை வாங்குவது பினாமி என அழைக்கப்படுகிறது. இது போன்ற சட்ட விரோத நடவடிக்கையினால் கணக்கில் வராத கருப்புப் பணம் வெள்ளையாக்கப் படுகிறது. இதனால், அரசுக்கு வருமான இழப்பீடு ஏற்படுகிறது. நாட்டின் பொருளாதாரமும் சீர்குலைகிறது.
பினாமி பரிவர்த்தனை தடைச் சட்டம்-1988
இதனை தடுப்பதற்காக கடந்த 1988-ம் ஆண்டு பினாமி பரிவர்த்தனை தடைச் சட்டம் மத்திய அரசால் கொண்டுவரப்பட்டது. கடந்த 2016-ம் ஆண்டில் இந்த சட்டத்தில் மேலும் பல விதிகளை இணைத்து கடுமையாக்கப்பட்டது.
பினாமிகள் கிரிமினல் குற்றவாளிகள்
இந்த சட்டத்தின் கீழ் வேறொருவரது பணத்தையோ அல்லது வேறொருவரது சொத்தையோ தனது பெயரில் வைத்திருப்பவர்கள், பயனாளிகள் மற்றும் பினாமி பரிவர்த்தனைகளுக்கு உதவுபவர்கள் அனைவரும் கிரிமினல் குற்றவாளிகளாக கருதப்படுவார்கள்.
குற்றம் நிரூபிக்கப்பட்டால் அவர்களுக்கு ஏழு ஆண்டு கடுங்காவல் தண்டணை விதிக்கப்படும். மேலும், அப்போதைய சந்தை விலையில் 25% தொகை அபராதமாக விதிக்கப்படும்.
தவறான தகவல் அளித்தால்......?
அதே போன்று பினாமி சொத்துக்கள் மற்றும் பினாமி பணவர்த்தனைகள் குறித்து தவறான தகவல் அளிப்பவர்கள் மீது வழக்குத் தொடரப்படும். குற்றம் நிரூபிக்கப்பட்டால் ஐந்து வருடங்கள் கடுங்காவல் தண்டணை விதிக்கப்படும். குறிப்பிட்ட பினாமி சொத்தின் 10% தொகை அபராதமாக விதிக்கப்படும்.
********************************** அன்புடன் செல்வம் பழனிச்சாமி - 07.01.2018
No comments:
Post a Comment