disalbe Right click

Monday, January 22, 2018

தேசிய தகுதித் தேர்வு 2018

தேசிய தகுதித் தேர்வு 2018
உதவி பேராசிரியர் பணிக்கான, 'நெட்' தகுதி தேர்வு, ஜூலை, 8ம் தேதியில் நடத்தப்படும் என்று, யு.ஜி.சி., அறிவித்துள்ளது
உதவி பேராசிரியர் பணியில் சேர
முதுநிலை படிப்பு முடித்தோர், தேசிய அளவில் உள்ள கல்லுாரிகளில் உதவி பேராசிரியர் பணியில் சேர, 'நெட்' என்ற, தேசிய தகுதி தேர்வில், தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். கல்லுாரி மற்றும் பல்கலைகளில் படிக்கும், இளநிலை ஆராய்ச்சி மாணவர்கள், கல்வி உதவி தொகை பெறவும், நெட் தேர்வில் தேர்ச்சி பெறுவது கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது. ஆண்டுக்கு ஒரு முறைதான், இந்த நெட் தேர்வு நடத்தப்படுகிறது. பல்கலை மானியக்குழுவான, யு.ஜி.சி.,யின் இந்த தேர்வை, மத்திய இடைநிலை கல்வி வாரியமான, சி.பி.எஸ்.., நடத்தி வருகிறது.  நாடு முழுவதும், 2018ல் ஜூலை, 8ல், நெட் தேர்வு நடக்கும் என, யு.ஜி.சி., நேற்று அறிவித்துள்ளது. 
தேர்வு விதிகள்
இரண்டு தாள்கள் எழுத வேண்டும் ஒவ்வொரு தாளுக்கு தலா, 100 மதிப்பெண்கள் வழங்கப்படும். முதல் தாளில், 50 மற்றும் இரண்டாம் தாளில், 100 வினாக்கள் இடம் பெற இருக்கின்றன. முதல் தாளில் பொதுவான வினாக்களும், இரண்டாம் தாளில், தேர்வர்கள் தேர்வு செய்யும் பாடத்தில் இருந்தும், வினாக்கள் இடம் பெறும்.
தேர்வுக்கான அதிகாரபூர்வ அறிவிக்கை, பிப்ரவரி1ம் தேதி, https://cbsenet.nic.in என்ற இணையதளத்தில் வெளியிடப்படும். இந்த தேர்வுக்கு தகுதியுள்ளவர்கள் மார்ச், 6-ம் தேதி முதல், ஏப்ரல் 25-ம் தேதி வரை, 'ஆன்லைனில்' தேர்வர்கள் விண்ணப்பிக்கலாம். 
வயது வரம்பில் மேலும் சலுகை
இளநிலை ஆராய்ச்சி மாணவர்கள், கல்வி உதவி தொகை பெறுவதற்கு, நெட் தேர்வு கண்டிப்பாக எழுத வேண்டும். தேர்வு விதிகளின்படி28 வயதுக்கு கீழ் உள்ளவர்கள் மட்டுமே, நெட் தேர்வில் இதுவரை பங்கேற்க முடியும். இந்த வயது உச்சவரம்பு, இந்த ஆண்டு முதல் வரும், ஜூலையில் நடக்கும் தேர்வில், 30 வயது வரை உள்ளவர்கள், நெட் தேர்வை எழுதலாம் என, சலுகை வழங்கப்பட்டுள்ளது.
********************************** அன்புடன் செல்வம் பழனிச்சாமி - 23.01.2018 

No comments:

Post a Comment