Indian Penal Code - Sec 107 & 306
தற்கொலை செய்துகொண்ட நபர் தான் தற்கொலை செய்து கொள்வதற்கு இவர்தான் காரணம் என்று, தற்கொலை செய்து கொள்வதற்கு முன்பாக அவரால் எழுதப்பட்ட கடிதத்தை மட்டும் (Suicide Note) அடிப்படையாக கொண்டு "தற்கொலைக்கு உடந்தையாயிருந்தார்" (Abetment to Suicide) என்று அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ள நபருக்கு தண்டனை வழங்க முடியாது.
இ. த. ச பிரிவு 306 தற்கொலைக்கு உடந்தையாக இருப்பவருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்க வேண்டும் என கூறுகிறது.
அவ்வாறு தண்டனை வழங்குவதற்கு
- (1)- ஒருவர் தற்கொலை செய்திருக்க வேண்டும்.
- (2)- தற்கொலைக்கு ஒருவர் உடந்தையாக இருக்க வேண்டும்.
ஆனால் அதே நேரத்தில் உடந்தையாக இருந்தவருக்கு குற்றச் செயல்களில் ஈடுபட்டதற்கான குற்ற மனம் இருக்க வேண்டும். மற்றொருவர் தற்கொலை செய்து கொள்ள வேண்டும் என்கிற உள் நோக்கத்தோடு, அந்த செயலை செய்வதற்கு உடந்தையாக ஒருவர் இருக்க வேண்டும். பொதுவாக பேச்சுவாக்கில் கூறப்படும் வார்த்தைகளையும் உடந்தையாக இருந்ததாக தவறாக புரிந்து கொள்ளப்பட்டு வருகிறது.
தற்கொலை செய்து கொள்கிற நபர் அதற்கு முன்பாக எழுதப்பட்ட கடிதத்தில், ஒருவருடைய பெயர் குறிப்பிடப்பட்டுள்ளது என்ற காரணத்தினால், அந்த நபர் இ. த. ச பிரிவு 306 ன் கீழான குற்றச் செயலில் ஈடுபட்டுள்ளார் என்கிற முடிவுக்கு உடனடியாக வந்துவிடக்கூடாது.
- உடந்தையாக இருத்தல் என்பதற்கு பிரிவு 306ல் எவ்வித விளக்கமும் கொடுக்கப்படவில்லை.
- ஒரு நபரை சில செயல்களை செய்யும்படியோ அல்லது செய்யாது இருக்கும்படியோ தூண்டி விடுவது என்பதுதான் உடந்தை என்பதற்கு பொருளாகும்.
- அவ்வாறு தூண்டிவிடும் செயலானது வார்த்தைகள், செயல்கள் அல்லது எழுத்துக்கள் மூலம் அல்லது செய்கைகள் மூலமாகவும் இருக்கலாம்.
- மற்றவர்கள் முன்பு ஒருவரை அவமானப்படுத்திய செயலாகவும் இருக்கலாம்.
- எனவே ஒருவர் தற்கொலை செய்து கொள்வதற்கான முடிவினை எடுப்பதற்கு எதிரி ஒரு முக்கியமான பங்கினை ஆற்றியிருக்க வேண்டும்.
- காதல் தோல்வியால் காதலன் தற்கொலை செய்து கொள்வது, தேர்வை சரியாக எழுதாததால் மாணவர் தற்கொலை செய்து கொள்வது, வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டதால் கட்சிக்காரன் தற்கொலை செய்து கொள்வது போன்ற தற்கொலை சம்பவங்களில் காதலித்த பெண், ஆசிரியர், வழக்கறிஞர் போன்ற நபர்கள் தற்கொலை செய்து கொள்வதற்கு உடந்தையாக இருந்தார்கள் என்று கூற முடியாது.
- ஒரு நபர் கோழைத்தனமாக, முட்டாள்தனமாக, பலவீனமான மனநிலை காரணமாக தற்கொலை செய்து கொண்டால், அதற்காக மற்றொரு நபர் மீது தற்கொலைக்கு தூண்டியதாக குற்றம் சுமத்த முடியாது.
- தற்கொலை செய்து கொள்வது இந்திய தண்டனைச் சட்டப்படி குற்றம் கிடையாது.
- ஆனால் தற்கொலைக்கு தூண்டும் செயல் குற்றமாகும்.
- தற்கொலை செய்து கொள்வது, தற்கொலை செய்து கொண்ட நபரின் விருப்பமாக இல்லாமல், அந்த நபர் தற்கொலை செய்து கொள்ள வேண்டும் என்பது எதிரியின் விருப்பமாக இருக்க வேண்டும்.
- ஒரு நபர் தற்கொலை செய்து கொள்ள வேண்டும் என்கிற உள்நோக்கத்தோடு எதிரி செயல்பட்டிருக்க வேண்டும்.
- அந்த செயல் வார்த்தைகளாகவோ அல்லது கடிதம் மூலமாகவோ நடைபெற்றிருக்கலாம்.
- அதேசமயம் மிகவும் பலவீனமான மனநிலை கொண்ட ஒருவர் தற்கொலை செய்து கொண்டால் அதனை ஒருவர் தூண்டிவிட்டதாக கருதுவது தவறு.
- ஒருவருடைய முட்டாள்தனமான செயலுக்காக மற்றொரு நபரை பொறுப்பாளியாக்க முடியாது.
- எனவே ஒரு பெண் முட்டாள்தனமாக தற்கொலை செய்து கொண்டால் அதற்கு காதலனை தண்டிக்க முடியாது என மதுரை உயர்நீதிமன்றம் தீர்ப்பு கூறியுள்ளது.
- எனவே பெண்கள் காதலனை பழிவாங்க வேண்டும் என்ற எண்ணத்தில் கடிதம் எழுதி வைத்துவிட்டு தற்கொலை செய்து கொண்டால் அந்த காதலனுக்கு தண்டனை கிடைக்காது என்பதை புரிந்து கொள்ளவும்.
CRL. OP. NO - 142/2016, DT - 16.06.2016,
Manikandan Vs Inspector of police, Tiruneelakkudi Police Station, Thanjavur District
(2016-4-MLJ-CRL-240)
Thanks to: https://m.facebook.com/adpdhandapani/
No comments:
Post a Comment