கையெழுத்தை மாற்றினால்......?
'மூல ஆவணங்களுடன் ஒப்பிடுகையில், காசோலையில் போடும் கையெழுத்தில், கூடுதல் புள்ளியோ, வளைவோ இருந்தால் செல்லாது' என, மாநில நுகர்வோர் தீர்ப்பாயம் தனது தீர்ப்பில் தெளிவுபடுத்தி உள்ளது.
சென்னையில் உள்ள அசோக் நகரை சேர்ந்த மகாலிங்கம் என்பவரின் மகன் கோபால் ஆவார். இவர் ஸ்டாண்டர்டு சாட்டர்டு வங்கியில் பணியாற்றி ஓய்வு பெற்றவர். அவர், கடந்த 14.06.2004 அன்று, ஸ்டாண்டர்டு சாட்டர்டு வங்கியின் அடையாறு கிளைக்கு ரூபாய் 12,135 .17-க்கு காசோலை ஒன்றை அந்த வங்கிக்கு அனுப்பியுள்ளார். கிரடிட் கார்டில் வாங்கிய பொருளுக்காக, அந்த காசோலையை அவர் அளித்துள்ளார்.
ஆனால், காசோலைக்கான தொகை, கிரடிட் கார்டில் வரவு வைக்கப்படவில்லை; காசோலையும் நிறுத்தி வைக்கப்பட்டது. இதுகுறித்து, வங்கியில் கேட்டபோது, கையெழுத்தில் சில வித்தியாசங்கள் இருந்ததாக தெரிவிக்கப்பட்டது.
நுகர்வோர் கோர்ட்டில் வழக்கு தள்ளுபடி
இதுகுறித்து, மாவட்ட நுகர்வோர் கோர்ட்டில், கோபால் தொடுத்த வழக்கு, தள்ளுபடி செய்யப்பட்டதை அடுத்து, மாநில நுகர்வோர் தீர்ப்பாயத்தில் முறையிட்டார். இந்த வழக்கை, மாநில நுகர்வோர் தீர்ப்பாய நீதிபதி ஆர்.ரகுபதி, உறுப்பினர் ஏ.கே. அண்ணாமலை ஆகியோர் விசாரித்தனர்.
கையெழுத்தில் ஒரு புள்ளிகூட மாறினாலும் அது செல்லாது.
அதில், 'காசோலையில் கையெழுத்து போடும்போது, வங்கியின் மூல ஆவணங்களில், ஏற்கனவே இடப்பட்டது போன்றுதான் கையெழுத்து போட வேண்டும். தேவையற்ற புள்ளிகளோ, வளைவுகளோ கையெழுத்தில் கூடுதலாக இருந்தால், அது செல்லாது. எனவே, அந்த கையெழுத்தில் வித்தியாசம் இருந்ததால், காசோலையை நிறுத்தி வைத்தது, சேவை குறைபாடு அல்ல' என்று உத்தரவிட்டு, வழக்கை தள்ளுபடி செய்தனர்.
ஆதாரம் : 05.05.2014 - தினமலர் நாளிதழ் செய்தி
நன்றி : முகநூல் நண்பர் திரு Trdurai Kamaraj அவர்கள்.
No comments:
Post a Comment