வட்டார அளவில் ஆதார் மையம்
பள்ளி மாணவ, மாணவியர்களுக்காக
வட்டார அளவில் ஆதார் மையங்கள் அமைக்கப்பட தமிழக அரசு ஏற்பாடு செய்து வருகிறது
’எமிஸ்’ திட்டத்தின் கீழ் ’ஆன்லைனில்’ பள்ளி மாணவர்களின் ஆதார் எண் ஒருங்கிணைக்கப்பட்டு வருகிறது. இதில் ஒன்றாம் வகுப்பு மாணவர்களுக்கு
ஆதார் அட்டை பள்ளிகளில் முகாம் நடத்தி எடுத்தாலும் பல மாணவர்களுக்கு
ஆதார் அட்டை கிடைக்கவில்லை.
அதேபோல் ஒவ்வொரு வருடமும் புதிதாக பள்ளிகளில் சேரும் குழந்தைகளுக்கும்
ஆண்டுதோறும் ஆதார் எடுக்க வேண்டியுள்ளது. தாலுகா அலுவலகத்தில் செயல்படுகின்ற பொது நிரந்தர ஆதார் மையங்களுக்கு குழந்தைகளை அழைத்து செல்வதில் பெற்றோர்களுக்கு சிரமம் இருக்கிறது.
இதனை உணர்ந்து நமது தமிழக அரசு அனைவருக்கும்
கல்வி இயக்கம் சார்பில் ஒவ்வொரு வட்டார அளவிலும் பள்ளிகளில் ஆதார் பதிவு மையங்கள் அமைக்க ஏற்பாடு செய்து வருகிறது.
**************************************** அன்புடன் செல்வம் பழனிச்சாமி - 17.01.2018
No comments:
Post a Comment