disalbe Right click

Saturday, January 27, 2018

தொழிலாளர் நீதிமன்றம் உத்தரவு ரத்து!


அனுமதி பெறாமல் தொடர்ந்து, 'ஆப்சென்ட்' ஆன ஊழியரை வேலை நீக்கம் செய்தது சரிதான் என்று சென்னை உயர் நிதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
முதல்கட்ட நடவடிக்கை
சேலத்தில் உள்ள அரசு போக்குவரத்து கழகத்தின், ராமலிங்கம் என்பவர் பணிபுரிந்து வந்தார். அவர் மேலதிகாரியிடம் உரிய அனுமதி பெறாமல், வேலைக்கு வராமல் இருந்ததற்காக, 1998ம் ஆண்டில், அவருக்கு, 'மெமோ' வழங்கப்பட்டது.
பணி நீக்கம்
மெமோ பெற்றுக் மொண்ட அவர் அளித்த விளக்கம் திருப்தி இல்லாத காரணத்தால், ஒழுங்கு நடவடிக்கை அதிகாரி துறைரீதியான விசாரணை நடத்தி, நிர்வாகத்துக்கு அறிக்கை அளித்தார். இதையடுத்து, 1999ம் ஆண்டில் பணி நீக்கம் செய்யப்பட்டார்
தொழிலாளர் நீதிமன்றம் உத்தரவு
இதனால், ராமலிங்கம் சேலம், தொழிலாளர் நீதிமன்றத்தில் முறையிட்டார். வழக்கை விசாரித்த, தொழிலாளர் நீதிமன்றம், மீண்டும் ராமலிங்கத்தை பணியில் அமர்த்தும்படி, போக்குவரத்து கழகத்துக்கு உத்தரவிட்டது.
நிஎவாகம் செய்த மேல்முறையீடு
சென்னை உயர் நீதிமன்றத்தில், போக்குவரத்து கழகம் சார்பாக இதனை எதிர்த்து மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது
மனுவை, நீதிபதி ஆர்.சுரேஷ்குமார் அவர்கள் விசாரித்தார்
போக்குவரத்து கழகம் சார்பில் வாதாடிய வழக்கறிஞர் பரமசிவதாஸ் அவர்கள், தனது வாதத்தில் ''அனுமதியின்றி, பணிக்கு வராமல் இருந்தது, இப்போது மட்டும் அல்ல; 1993ம் ஆண்டில் இருந்து, நீண்ட நாட்களுக்கு, அதிகாரிகளிடம் அனுமதி பெறாமல், பணிக்கு வராமல் இருந்துள்ளார். ''அதற்காக, ராமலிங்கத்திற்கு  சிறிய அளவில் தண்டனையும் வழங்கப்பட்டுள்ளது. 
ஷை தொழிலாளி திருந்துவதற்கு வாய்ப்புகளை நிர்வாகம் வழங்கியும்,தொடர்ந்து இவ்வாறு செயல்பட்டதால், பணி நீக்கம் செய்யப் பட்டார்,'' என்றார். தொழிலாளி ராமலிங்கம் சார்பில், வழக்கறிஞர், கே.வி.சண்முகநாதன் அவர்கள் ஆஜராகி, ''கண் பார்வை பிரச்னை இருந்ததால், ராமலிங்கம் சிகிச்சை பெற்று, அதற்குப்பின், ஓய்வில் இருந்துள்ளார். போக்குவரத்துக் கழக. நிர்வாகத்திடம், திருப்திகரமான விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. ஆனால், விசாரணை அதிகாரி  அவர்கள் அதனை பரிசீலிக்கவில்லை,'' என்றார்.
முடிவில், நீதிபதி, ஆர்.சுரேஷ்குமார் அவர்கள் பிறப்பித்த உத்தரவு:
அனுமதியின்றி பணிக்கு வராமல் இருந்தது, முதல் முறையாக அல்ல.1993ல், பணிக்கு வராமல் இருந்த காரணத்திற்காக தொழிலாளி ராமலிங்கம் கண்டிக்கப்பட்டுள்ளார். இவரது நடவடிக்கைக்காக 1995ம் ஆண்டில், 45 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது; 1996ம் ஆண்டில், அவரது ஊக்க ஊதியம் நிறுத்தப்பட்டுள்ளது. மேலும், 1997ம் ஆண்டில், அனுமதியின்றி,  இரண்டு மாதங்கள் பணிக்கு வராததால், மீண்டும் ஊக்க ஊதியம் நிறுத்தப்பட்டுள்ளது.
மேலும், 1997ம் ஆண்டில், 10 நாட்கள் வராமல் இருந்ததற்காக, 40 ரூபாய் அபராதம், 97 - 98ம் ஆண்டில்,, நான்கு மாதங்கள் தொடர்ந்து பணிக்கு வராததற்காக, ஊக்க ஊதியம் நிறுத்தப் பட்டுள்ளது. சமர்ப்பிக்கப்பட்ட ஆவணங்களை பரிசீலிக்கும் போது, ஷை தொழிலாளி  அனுமதியின்றி பணிக்கு வராமல் இருந்ததுதொடர்ந்து நடந்திருப்பது தெரிகிறது. சிறிய அளவில் நிர்வாகத்தால் தண்டனை விதிக்கப்பட்டும், அவரது செயல்பாட்டை அவர் மாற்றிக் கொள்ளவில்லை. எந்த காரணமும் இல்லாமல், வார கணக்கிலும் மாத கணக்கிலும் பணிக்கு வராததை, அவர்  வழக்கமாக கொண்டுள்ளார்.
இப்படி பொறுப்பில்லாமல் ஒரு நிறுவனத்தில் ஊழியர்கள்பணியாற்றினால், ஒருவரை போல மற்றவர்களும் ஈடுபட்டால், எந்த ஒரு நிறுவனமும் அன்றாடம் இயங்க முடியாது. போக்குவரத்து கழகம், அத்தியாவசிய சேவையை வழங்கி வருகிறது.
அனுமதியின்றி தொடர்ந்து பணிக்கு வராமல் இருந்தால், பொது மக்களுக்கு அத்தியாவசிய சேவை வழங்குவது அந்த போக்குவரத்து நிர்வாகத்திற்கு கஷ்டமாகி விடும். உடல் நலத்தை அவர் காரணமாக காட்டினாலும், மருத்துவ சான்றிதழ் எதையும், நீதிமன்றத்தில் தாக்கல் செய்யவில்லை.
தொழிலாளர் நீதிமன்றம் உத்தரவு ரத்து!

விருப்பப்பட்டால் வேலைக்கு வருவது, இல்லையென்றால், வேலைக்கு வராமல் இருப்பது என அந்த ஊழியர் செயல்பட்டு உள்ளார். எனவே, தொழிலாளர் நீதிமன்றத்தின் முடிவில் இந்த நீதிமன்றம் குறுக்கிட வேண்டியுள்ளது. அந்த உத்தரவு, ரத்து செய்யப்படுகிறது.
இவ்வாறு நீதிபதி உத்தரவிட்டார்.
********************************** அன்புடன் செல்வம் பழனிச்சாமி - 27.01.2018 

No comments:

Post a Comment