அட்மின்களுக்கு எச்சரிக்கை
பேஸ் புக் வந்தபோது, தனது கணக்கில் பல நண்பர்களை சேர்த்து, எனக்கு 1,000 பேஸ்புக்
நண்பர்கள் என்று பெருமைபடும் காலம் ஒன்று இருந்தது. அது இப்போது சற்று மாறி, வாட்ஸ்ஆப்பில் நான் அட்மின் ஆக இருந்து ஒரு குருப் ஆரம்பித்துள்ளேன். அதில் இத்தனை நபர்கள் சேர்ந்துள்ளார்கள் என்று பெருமைப்படும் காலம் இது. இன்று வாட்ஸ்ஆப்பில் குருப் ஆரம்பிக்காத நபர்களோ அல்லது குருப்பில் இல்லாத நபர்களே மிக மிக குறைவு.
பேஸ்புக் கொடுத்துள்ள அதிகாரம்
.பேஸ்புக்கில் ஒரு குருப் ஆரம்பித்தால், அந்த குருப்பின் அட்மின் (நிர்வாகி), அந்த குருப்பில்
இருக்கும் உறுப்பினர்கள் பதிவிடும் பதிவுகளை கட்டுப்படுத்தும் அதிகாரம் உண்டு.
உதாரணமாக, ஒரு உறுப்பினர் இடும் பதிவை, குருப் அட்மின் அனுமதி கொடுத்த பிறகுதான், அந்த குருப்பில் வெளியிடுமாறு செய்யலாம். அல்லது உறுப்பினர் இடும் பதிவுகளை அட்மின் உடனடியாக அழித்து விடலாம். ஆக, அந்த குருப்பின் முழு அதிகாரம் அட்மினிடம் இருக்கும்.
இருக்கும் உறுப்பினர்கள் பதிவிடும் பதிவுகளை கட்டுப்படுத்தும் அதிகாரம் உண்டு.
உதாரணமாக, ஒரு உறுப்பினர் இடும் பதிவை, குருப் அட்மின் அனுமதி கொடுத்த பிறகுதான், அந்த குருப்பில் வெளியிடுமாறு செய்யலாம். அல்லது உறுப்பினர் இடும் பதிவுகளை அட்மின் உடனடியாக அழித்து விடலாம். ஆக, அந்த குருப்பின் முழு அதிகாரம் அட்மினிடம் இருக்கும்.
பதிவுகளை முற்றிலும் அழிக்க முடியாது
.ஆனால், வாட்ஸ்ஆப் குருப் அப்படிப்பட்டதல்ல. இதில் அட்மின் ஆக இருப்பவர் உறுப்பினர்கள் இடும் பதிவுகளின் அனுமதியை மறுக்க முடியாது மற்றும் உறுப்பினர்கள் இட்ட பதிவுகளை அழிக்க முடியாது. அவ்வாறு அழிக்க முயற்சித்தாலும், அட்மினின் மொபைலில் இருந்து மட்டுமே அந்த பதிவு அழிக்கப்படும் ஆனால் மற்ற உறுப்பினர்களின் மொபைலில் அந்த பதிவு தொடர்ந்து இருக்கும்.
அட்மின்களின் பொறுப்பு அதிகம்.
.பேஸ்புக்கை விட வாட்ஸ் ஆப் அட்மின்னிற்கு பொறுப்புநிலை அதிகமாகின்றது. அவரது குருப்பில் உள்ள உறுப்பினர்களானவர்கள் யவரை பற்றியான அவதுாறான பதிவுகளை இடாமல் இருக்க வேண்டும். அரசியல் தலைவர்கள், அரசியல் கட்சிகள், பிரதமந்திரி, முதல்வர் மற்றும் அமைச்சர்கள், அதிகாரிகள், தனிநபர்கள் மீது ஆதரமற்ற அவதுாறான தகவல்களை பரப்பினால் (அந்த தகவல்கள் அவருடைய தகவலாக இருக்க வேண்டும் என்பது அவசியமில்லை...மாறாக மற்றவர் அவருக்கு அனுப்பிய தகவலை குருப்பில் பரப்பினாலும்) அதற்கு அட்மின்தான் அவ்வாறான தகவலை பதிவு செய்தவருடன் சேர்ந்து இந்திய தண்டணை சட்டம், தீங்கியல் சட்டம் மற்றும் ஐ.டி.சட்டம் 2000-ன் படி தண்டணைக்குள்ளாவர்கள்.
யாரோ செய்த தவறு
யாரோ செய்த தவறுக்கு அட்மின்னும் சிறைக்குள் செல்ல வேண்டியது இருக்கும் என்பதை அட்மின்கள் உணரவேண்டும். ஒருவர் தவறாக இட்ட ஒரு பதிவை ஸ்கிரின்ஷாட் எடுத்து தகுந்த அதிகார அமைப்பிடம் நடவடிக்கை எடுக்க யாராகிலும் கொடுத்தால், அட்மின்னிற்கு ஆபத்துதான்.
எப்போது வேண்டுமானாலும் ஆபத்து வரலாம்!
.குருப்பின் அளவு பெரிய அளவில் ஆகும்போது அட்மினின் பொறுப்புநிலையும் அதிகமாகின்றது. அவர் அடிக்கடி அந்த குருப்பை கண்காணிக்கும் நிலை ஏற்படுகின்றது. இவ்வாறு கண்காணித்தாலும், குருப்பில் இட்ட பதிவுகளை அட்மினால் அழிக்க முடியாது என்பதால், அட்மின் நிலையானது எப்போதுமே “கத்தி மேல் நின்று கொண்டிருக்கும் நிலைதான்”.
எச்சரிக்கையாக இருங்கள்
.ஆகவே, வாட்ஸ்ஆப் குருப்பில் அட்மின் ஆக இருப்பது பெருமையான விஷயம் அல்ல. மாறாக, இன்றை சூழ்நிலையில் ஆபத்தான விஷயமும்கூட. ஆகவே, ஒரு குருப்பை நானும் நிர்வாகிக்க வேண்டும் என்று ஆசைப்பட்டு, தேவையற்ற வகையில், குருப்பை உருவாக்குவதை தவிருங்கள். அதையும் மீறி ஒரு குருப் நிர்வாகிக்க வேண்டும் என்றால், “அவதுாறான பதிவுகள் போடவேண்டாம்“ என்று அடிக்கடி எச்சரிக்கை விடுங்கள். உறுப்பினர்கள் யாராவது அவதுாறான பதிவுகள் போட்டால் உடனே, அந்த உறுப்பினரை நீக்கம் செய்யுங்கள் மற்றும் உறுப்பினர்கள் தொடர்ந்து அந்த செயலை செய்தால், அந்த குருப்பை உடனே மூடி விடுங்கள். அதுதான் அட்மின்களுக்கு நல்லது.
.அடுத்தவர் செய்யும் தவறுக்கு
.அடுத்தவர் செய்யும் தவறுக்கு, நீங்கள் சிறைக்கு செல்ல வேண்டுமா என்பதை ஒரு குருப்பை உருவாக்கி அதற்கு அட்மின் ஆவதற்கு முன்னால் ஒரு முறைக்கு பல முறை யோசியுங்கள்.
*************************************************************
முகநூல் நண்பரும் வழக்கறிஞருமான திரு Leenus Leo Edwards அவர்கள் முகநூலில் பதிவிட்ட இன்றைய (12.01.2018) அருமையான எச்சரிக்கைப் பதிவு இது.
********************************************** அன்புடன் செல்வம் பழனிச்சாமி
No comments:
Post a Comment