நமது வீட்டின் சமையலறையில் இருக்கும் சீரகத்தின் மகத்துவம் அளவிடமுடியாதது. அகம் என்று சொல்லக்கூடிய உடலின் உட்புறத்தை சீராக்குவதாலேயே இதனை நமது முன்னோர்கள் சீரகம் என்றனர்.
அதன் பயன்களை கீழே காணலாம்.
⧭ சீரகத்தை கொஞ்சம் எடுத்து வாயில் போட்டு, குளிர்ந்த தண்ணீரை குடித்தால், தலைச் சுற்றல், மயக்கம் ஆகியவை நீங்கி விடும்.
⧭ திராட்சை ஜூஸுடன், சீரகத்தை கலந்து பருகி வந்தால், ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தலாம்.
⧭ அகத்திக்கீரையுடன், சீரகம், சின்ன வெங்காயம் சேர்த்து கஷாயம் போட்டு குடித்து வந்தால், மன நோய் குணமாகும்.
⧭ சீரகத்துடன் கொஞ்சம் வெல்லம் சேர்த்து, பிசைந்து புளியங்கொட்டை
அளவு எடுத்து சாப்பிட்டு வந்தால், நெஞ்சு எரிச்சல் குணமாகும்.
⧭ சீரகத்துடன் எலுமிச்சை சாறு கலந்து காயவைத்து, அதனை துாளாக இடித்து, ஒரு டப்பாவில் வைத்துக் கொள்ள வேண்டும். இதை, தினமும் ஒரு டீஸ்பூன் வீதம் எடுத்து சாப்பிட்டு, அதன்பிறகு மோர் குடித்து வந்தால், மார்பு வலி நீங்கும்.
⧭ மோருடன் சீரகம், இஞ்சி கலந்து, சிறிது உப்பு சேர்த்து பருகினால், வாயுத் தொல்லை நீங்கும்.
⧭ சீரகத்தை இஞ்சி மற்றும் எலுமிச்சைப் பழச் சாற்றில் கலந்து, ஒருநாள் ஊற வைத்துக் கொண்டு அதனை, தினம் இருவேளை வீதம், மூன்று நாட்கள் சாப்பிட்டு வர, பித்தம் குறையும்.
⧭ சுக்கு, சீரகம், மிளகு, திப்பிலி ஆகியவற்றை பொடியாக இடித்து, தேனில் கலந்து சாப்பிட்டால், உடலிலுள்ள எல்லா உள் உறுப்புகளையும் சீராக இயங்கச் செய்யும். மனித உடலுக்கு குளிர்ச்சியைத் தந்து, தேகத்தை பளபளப்பாக்கும் ஆற்றலும் சீரகத்திற்கு உண்டு.
⧭ சிறிது சீரகத்துடன், இரண்டு வெற்றிலை, நான்கு மிளகு சேர்த்து அதனை வாயில் போட்டு மென்று தின்று, ஒரு டம்ளர் குளிர்ந்த நீர் பருகினால், வயிற்றுப் பொருமல் போய்விடும்.
⧭ சிறிது சீரகத்துடன், கீழாநெல்லி இலைகளை சேர்த்து வைத்து அரைத்து, எலுமிச்சை சாறுடன் சேர்த்து பருகி வர, கல்லீரல் கோளாறு குணமாகும்.
⧭ சீரகத்தை லேசாக பொன்னிறமாக வறுத்து, அத்துடன், கருப்பட்டி சேர்த்து சாப்பிட்டு வர, நரம்புகள் வலுப்பெற்று, நரம்புத் தளர்ச்சி குணமாகும்.
⧭ சீரகத்தை அரைத்து பவுடராக்கி. அதனை தேனுடன் கலந்து லேகியமாக சாப்பிட்டால் ஒல்லியாக இருப்பவர்கள், குண்டாக மாறுவார்கள்.
******************************************** அன்புடன் செல்வம் பழனிச்சாமி - 10.01.2018
No comments:
Post a Comment