நாம் தினமும் அடிக்கடி பேசும் போது பல ஆங்கில சுருக்க வார்த்தைகளை பயன்படுத்தி வருகிறோம். அதில் பல ஆங்கில சுருக்க வார்த்தைகளின் விரிவாக்கம் என்ன என்பது தெரிந்து வைத்திருக்க மாட்டோம். நன்றாக தெரிந்த வார்த்தையைப் போல தான் இருக்கும். ஆனால், யாராவது அதன் விரிவாக்கம் என்ன? என்று திடீரென கேள்வி எழுப்பினால் திருதிருவென முழிப்போம். நாம் அடிக்கடி பேச்சுவழக்கில் உபயோகிக்கும் ஆங்கில சுருக்க வார்த்தைகளின் விரிவாக்கங்களை தொகுத்து தந்திருக்கிறேன். அறிந்து கொள்ளுங்கள்..
PDF
நாம் மெயில்களின் மூலமாக அனுப்புகின்ற பைல்களை PDF பைல்களாகவே அனுப்புகிறோம். இதனால், அதனை பெறுபவர்களுக்கு நாம் அனுப்புகின்ற செய்தி தோற்றம் மாறாமல் அப்படியே கிடைக்கும். இந்த PDF என்பதன் விரிவாக்கம் Portable Document Format ஆகும்.
DP
ஃபேஸ்புக், வாட்ஸ்-அப், ட்விட்டர் என அனைத்து சமூக செயலிகளிலும்
முகப்பு படம் என்று ஒன்று வைத்திருப்போம். பெரும்பாலும் அந்தப்படம் நமது உண்மையான படமாக இருப்பதில்லை. இருந்தாலும், அது நம்மை அடையாளம் காட்டும் படமாக திகழ்கிறது. இதை சுருக்கமாக DP என்று ஆங்கிலத்தில் கூறுகிறோம்.
இதன் விரிவாக்கம் Display Picture ஆகும்.
ROFL
சில சமயங்களில் ஃபேஸ்புக், வாட்ஸ்-அப், ட்விட்டர் போன்றவைகளில் நீங்கள் ஏதேனும் காமெடியான படம், வீடியோ அல்லது ஸ்டேட்ஸ் பகிர்ந்திருந்தாலோ, பல சமயங்களில் உங்கள் முகப்பு படத்திற்கு கீழேயும் இப்படி ROFL என சிலர் கமெண்ட் செய்ததை நீங்கள் பார்த்திருக்கலாம்.. இதை விரிவாக்கம் Rolling On Floor Laughing. அதாவது விழுந்து, விழுந்து சிரிச்சேன் என்ற அர்த்தம் கொண்ட வாசகம்.
SMS
செல்போன் மூலமாக நாம் அனுப்புகின்ற செய்திகளை SMS என்கிறோம். இதன் விரிவாக்கம் Short Message Service ஆகும்.
DSLR
SMS
செல்போன் மூலமாக நாம் அனுப்புகின்ற செய்திகளை SMS என்கிறோம். இதன் விரிவாக்கம் Short Message Service ஆகும்.
DSLR
உன்னோட DSLR கொடேன், எங்க காலேஜ்ல இருந்து டூர் போறாங்க என்று உங்கள் நண்பர்கள் உங்களிடம் கேட்டிருக்கலாம். இந்த DSLR-ன் விரிவாக்கம் Digital Single Lens Reflex.
OTP
நீங்கள் ஆன்லைன் மூலமாக பண பரிமாற்றம் செய்தாலும், டிக்கெட்டுகள் புக் செய்தாலும் இந்த OTP உங்கள் மொபைல் எண் குறுஞ்செய்திக்கு அந்த நிறுவனத்தால் அனுப்பப்படும். இதன் விரிவாக்கம் One Time Password ஆகும்.
AM , PM
மொபைல், கணினி, லேப்டாப், வ்ரிஸ்ட் வாட்சுகளில் நேரத்தை பிரித்துக் காண உதவுகின்ற வார்த்தை AM / PM ஆகும். இதன் விரிவாக்கம் AM என்றால் Ante Meridiem, PM என்றால் Post Meridiem ஆகும்.
YOLO
பெரும்பாலும் யோ-யோ மக்கள் தான் இத்தகைய சுருக்க வார்த்தைகளை பயன்படுத்துவார்கள். YOLO என்றால் You Only Live Once என்பதாகும். நீ வாழும் வாழ்க்கை ஒரு முறையானது என்பதை இது குறிக்கிறது.
JPEG
பெரும்பாலும் நாம் இணையத்தில் இருந்து ஒரு புகைப்படத்தை பதிவிறக்கம் செய்தால் அதன் டீடெய்ல்ஸ்-ல் Format என்ற இடத்தில் .JPEG என்று இருக்கும். இதன் விரிவாக்கம் Joint Photographic Experts Group என்பதாகும்.
அதேபோல வாட்ஸ்-அப்பில் GIF என்ற பெயரில் சிறிய வீடியோ போல சில பகிர்வுகள் வரும். இதன் விரிவாக்கம் Graphic Interchange Format ஆகும்.
BYE
Bye னா ஏன்ன? டாட்டா, See You சொல்ற மாதிரி ஒரு வார்த்தை அல்ல. BYE என்பதற்கு ஒரு விரிவாக்கம் இருக்கிறது. BYE என்றால் Be With You Every time அர்த்தம். நான் எல்லா நேரத்திலும் உன்னுடன் இருப்பேன் என்பதை இது குறிக்கிறது.
ZIP
விண்ணப்பங்களை நீங்கள் ஃபில் செய்யும் போது நகரம் என்பதற்கு பக்கத்தில் ZIP என்ற பெட்டி இருக்கும் அங்கே நாம் வசிக்கும் இடத்தின் குறியீட்டு எண்னை பதிவு செய்வோம். 600001, 641008, 560011 என ஒவ்வொரு நகரத்தின் ஒவ்வொரு பகுதிக்கும் இப்படி ஒரு குறியீட்டு என் இருக்கும். இதன் விரிவாக்கம் Zone Improvement Plan
Code ஆகும்.
SIM
செல்போன் வைத்திருப்பவர்கள் அனைவரும் அடிக்கடி சொல்லக்கூடிய வார்த்தை இது. இந்த SIMன் விரிவாக்கம் Subscribers
Identification Module ஆகும்.
QR Code
QR Code
நாம் Bar Code பற்றி அறிந்திருக்கிறோம். சில வருடங்களுக்கு முன்னால்தான் இந்த QR Code நமக்கு அறிமுகம் ஆனது. நாம் வாங்குகின்ற எல்லா பொருளிலும், சில பில்களிலும் கூட இந்த Codeஐ நாம் பார்க்கலாம். இதன் விரிவாக்கம் Quick Response Code ஆகும்.
TRP
இன்றைய சூழலில் பல தொலைக்காட்சி நிகழ்சிகள் மிகமிக மோசமாக தான் நடத்தப்படுகின்றன. சில மோசமான நிகழ்சிகளை காணுகின்ற நாம் இவனுங்க டிஆர்பி-காக தான் இப்படி பண்றாங்க... என்போம். இதன் விரிவாக்கம் Television Rating Point ஆகும்.
GPS
ஒருவர் எங்கே இருக்கிறார்?, எங்கே சென்றிருக்கிறார்? அவர் எந்த திசையில் பயணித்துக் கொண்டிருக்கிறார்? என அனைத்தையும் GPS உதவியுடன் நாம் அறிந்துக் கொள்ள முடியும். பெரு நகரங்களில் கால் டாக்ஸி புக் செய்துவிட்டு அது எங்கு வந்து கொண்டிருக்கிறது என்பது இதை வைத்துத்தான். இதன் விரிவாக்கம் என்னவெனில், Global Positioning System ஆகும்.
RIP
இரங்கல் செய்திகளுக்குக் கீழே RIP என்று சுருக்கமாக கமெண்ட் செய்வதை நீங்கள் பார்த்திருக்கலாம். அது இறந்தவர் ஆத்மா சாந்தி அடையட்டும் என்ற அர்த்தத்தைக் குறிக்கும் வார்த்தை ஆகும். இதன் விரிவாக்கம் requiescat in pace ஆகும்.
************************************* அன்புடன் செல்வம் பழனிச்சாமி - 22.01.2018 RIP
இரங்கல் செய்திகளுக்குக் கீழே RIP என்று சுருக்கமாக கமெண்ட் செய்வதை நீங்கள் பார்த்திருக்கலாம். அது இறந்தவர் ஆத்மா சாந்தி அடையட்டும் என்ற அர்த்தத்தைக் குறிக்கும் வார்த்தை ஆகும். இதன் விரிவாக்கம் requiescat in pace ஆகும்.
No comments:
Post a Comment