பள்ளிகளில் இனி கல்வி நிகழ்ச்சிகள் மட்டுமே நடத்த வேண்டும் என்று அரசு உத்தரவு
தமிழகத்திலுள்ள அனைத்து அரசு துவக்க, உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் இனி கல்வி நிகழ்ச்சிகள்
மட்டுமே நடத்த அனுமதியளிக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது.
அரசு செயலர் அவர்கள் இதுகுறித்து பிறப்பித்த உத்தரவில்,
அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்வி நிறுவனங்களில், கல்வி தொடர்பான நிகழ்ச்சிகள், கண்காட்சிகள் மற்றும் கருத்தரங்கள் மட்டுமே நடத்த அனுமதிக்க, பள்ளி நிர்வாகத்தினர்களுக்கு மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்த வேண்டும். மற்ற பொது நிகழ்ச்சிகள் நடத்த அனுமதியளிக்க கூடாது என, பள்ளி கல்வித்துறை அலுவலர்களுக்கு
மாவட்ட கல்வித்துறை அறிவுறுத்த வேண்டும். நடைபெற இருக்கின்ற கல்வி நிகழ்ச்சிகள் குறித்து, முன்கூட்டியே
மாவட்ட கல்வித்துறை நிர்வாகத்திற்கு
தெரியப்படுத்தி கல்வி நிறுவனங்கள் அனுமதி பெற்றுக் கொள்ள வேண்டும். இதுகுறித்து மாவட்ட கல்வித்துறை கல்வி நிறுவனங்களுக்கு
அறிவுறுத்த வேண்டும், என தெரிவித்துள்ளார்.
அனுமதியின்றி சுற்றுலா
அனுமதியின்றி சுற்றுலா
அனுமதியின்றி மாணவர்களை, சுற்றுலா அழைத்து செல்லக் கூடாது' என, பள்ளிகளுக்கு, கல்வித் துறை எச்சரிக்கை
இதுசம்பந்தமாக பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு, கல்வித் துறை அதிகாரிகள் அனுப்பியுள்ள
கடிதத்தில் மாணவர்களை சுற்றுலா அழைத்து செல்ல, பள்ளி முதல்வர்கள், தலைமை ஆசிரியர்கள் ஆகியோர், கல்வித்துறை அதிகாரிகளுக்கு விண்ணப்பித்து, முன்அனுமதி பெற வேண்டும் என்றும் மேலும், கல்வித்துறை வகுத்துள்ள விதிகளை பின்பற்றி, மாணவர்களின் பாதுகாப்பில் முழு கவனத்தைச் செலுத்த வேண்டும் என்றும், ஆபத்தான இடங்களுக்கு, சுற்றுலா அழைத்து செல்லக்கூடாது என்றும் அதில் கூறப்பட்டுள்ளது.
*********************************** அன்புடன் செல்வம் பழனிச்சாமி - 02.01.2018
No comments:
Post a Comment