முகநூலில் நீங்கள் அவசியம் அறிய வேண்டிய 5 வழிகள்
ஃபேஸ்புக் - இன்றைய கால கட்டத்தில் உலகிலுள்ள அனைவரும் தவிர்க்க முடியாத ஒன்றாகிவிட்டது.
அதில் இருக்கும் நம்மில் பலருக்கு நேரம் போவதே தெரிவதில்லை. சில பேர்களுக்கு அதனை கொஞ்ச நேரம் பார்க்காமல் இருந்தால் பைத்தியம் பிடித்தது போல இருக்கிறது. அதனுள் இருக்கின்ற நேரம் நமக்கு பயனுள்ளதாக இருக்கின்றதா? என்று ஆராய்ந்தால் விடை கேள்விக்குறியாகத்தான் கண்டிப்பாக இருக்கும். அதில் எனக்கு சந்தேகமில்லை.
ஏனென்றால், தேவையான பதிவுகளைவிட, அதிகமாக தேவையில்லாத பதிவுகள்தான் நமது பக்கத்தை நிரப்பிக் கொண்டிருக்கிறது. நமக்குத் தேவையில்லாத பதிவுகளை எப்படி நீக்குவது? என்பது பற்றியும், தேவையான பதிவுகளை மட்டும் பெறுவது எப்படி என்பது பற்றியும் நம்மில் பலருக்குத் தெரியாமல் இருக்கலாம். அதற்கு அவர்கள் முதலில்
என்ன செய்ய வேண்டும்?
உங்கள் முகநூல் பக்கத்தை ஓப்பன் செய்யுங்கள். ஃபேஸ்புக் பக்கத்தின் வலதுபுறத்தின் மேலே கடைசியாக உள்ள தலைகீழ் முக்கோணத்தை கிளிக் செய்யுங்கள்.
அப்படிச் செய்தால் ஒரு பாக்ஸ் ஓப்பன் ஆகும். அதில் News Feed Preferences என்று ஒரு ஆப்சன் இருக்கும்.
அதனை கிளிக் செய்தால்,
1. Prioritize who to see first
2. Unfollow people to hide their posts
3. Reconnect with people you've unfollowed
4. Discover Pages that match your interests
5.See more options
என்று 5 ஆப்சன்கள் திரையில் தோன்றும்.
1. Prioritize who to see first
முதல் ஆப்சனை நீங்கள் கிளிக் செய்தால், உங்களின் ஃபேஸ்புக் நண்பர்கள், நீங்கள் லைக் செய்த பக்கங்கள் மற்றும் நீங்கள் ஃபாலோ செய்கின்ற நபர்களின் பெயர்கள் தோன்றும்.
அவர்களில் யார் நல்ல பதிவுகளை பதிவு செய்வார்கள் என்பது ஏற்கனவே உங்களுக்கு நன்றாக தெரிந்திருக்கும்.
அ்வற்றுள் உங்களுக்குத்
தேவை என்று முடிவு செய்யும் பெயர்மீது ஒரு க்ளிக் செய்தால் போதும். அவர்கள் போடும் பதிவுகள், உங்களின் ஃபேஸ்புக் பக்கத்தில் முதலில் தோன்றும்.
2. Unfollow people to hide their posts
இரண்டாவது ஆப்சனை க்ளிக் செய்தால் நீங்கள் அன்ஃபாலோ செய்தவர்களுடைய பெயர் பட்டியல் தெரியும். அவர்களில் யாராவது ஒருவருடைய பதிவுகளை நீங்கள் படிக்க வேண்டும் என்று விரும்பினால் அவர்களுடைய பெயருக்கு மேல் ஒரு க்ளிக் செய்யுங்கள். அவர்களுடைய பதிவுகள் உங்கள் முகப்புத்தக்கத்தில் தோன்றும்.
3. Reconnect with people you've unfollowed
உங்கள் நண்பர்களில் சிலரை நீங்கள் unfollow பட்டியலில் வைத்திருக்கலாம். அவர்களில் சிலரை மீண்டும் following பட்டியலில் சேர்க்க வேண்டுமென்று நினைத்தால் மூன்றாவது ஆப்சனை கிளிக் செய்யுங்கள். நீங்கள் unfollow செய்த நண்பர்களின் பட்டியல் தெரியும். அவற்றில் உங்களுக்குத் தேவையான நண்பரது பெயரை கிளிக் செய்தால் மீண்டும் அவரது பதிவுகள் உங்கள் பக்கத்தில் தோன்றும்.
4. Discover Pages that match your interests
நான்காவது ஆப்சனை க்ளிக் செய்தால் நீங்கள் லைக் செய்த பக்கங்களின் ஐகான்கள் அனைத்தும் திரையில் தோன்றும். உங்கள் நண்பர்களில் யாராவது அந்த பக்கத்தினை லைக் செய்திருக்கிறார்களா? என்பதையும் அதில் காணலாம். ஒரு குறிப்பிட்ட பக்கத்தின் பதிவுகளை மட்டும் தெரிந்து கொள்ள வேண்டும் என்று நீங்கள் நினைத்தால் அந்த பக்கத்தின் ஐகான் மீது ஒரு க்ளிக் செய்யுங்கள்
5.See more options
உங்களுக்கு எந்த பதிவுகளை பார்க்க விருப்பம் இருக்கின்றதோ அதனை பார்க்கவும், உங்களுக்கு எந்த பதிவுகளை பார்க்க விருப்பம் இல்லையோ அந்த பக்கத்தை மறையச் செய்யவும் 5வது ஆப்சனை கிளிக் செய்து பயன் பெறலாம்..
*********************************அன்புடன் செல்வம் பழனிச்சாமி - 17.01.2018
No comments:
Post a Comment